நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (44ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (44ம் தொடர்).......

17ம் திகதி வெள்ளிக்கிழமை முடிவு தெரியும் என்ன முகாமையாளர் பொய்யை சொல்லி விட்டார் என்று சிந்தித்தவாறு, 18ம் திகதி சனிக்கிழமை காலை புதிய சமுர்த்தி வங்கியை பார்க்கும் நோக்குடன் செல்வோம் என கல்லடி சமுர்த்தி வங்கிக்கு சென்றேன். என்ன பாடுகள் ஜெயதாசன் என முகாமையாளர் கேட்டார்  சும்மா பார்த்து விட்டு செல்வோம் என வந்தேன் சேர் என்று திரும்பிப்பார்த்தேன். ஒரு மூளையில் ரூபன் நின்று கொண்டிருந்தான். என்னயாம்டா முடிவு சொல்லல்லையாடா என கேட்டேன். மற்றைய வங்கிகளுக்கு தெரிந்து விடுமாம் திங்கள் கிழமைதான்  சொல்லுவாராம் என்று ரூபன் சொன்னான். நானும் அங்கும் இங்கும் திரிந்து பார்த்தேன் யாரும் வாயே திறக்கவில்லை. சரி என்று வீட்டிற்கு வந்தேன் வீட்டில் சங்க தலைவர்கள் தங்கள் முடிவை என்னிடம் கேட்க காத்திருந்தனர் நானும் திங்கள் கிழமை அறிவிப்பதாக தெரிவித்தேன்.

 திங்கட் கிழமை பிரதேச செயலகம் செல்லவும் வேண்டும் கல்லடி வங்கியில்  சித்திரை புதுவருட சேமிப்பும் கேட்கவும் வேண்டும். பிரதேச செயலகம் சென்று ஒப்பமிட்டு சக உத்தியோகத்தர்களிடம் என்னபாடு சேமிப்பு என்றேன் ஒருவரும் சரியாக சொல்லவில்லை நானும் எனது சேமிப்பை ஒருவரிடமும் சொல்லவில்லை. வங்கி முகாமையாளரிடம் இருந்து அழைப்பு வந்தது உடனடியாக வங்கிக்கு வரும்படி அடித்து விழுந்து வங்கிக்கு வந்த போது முடிவுகள் சொல்கிறேன் வேறு வலயத்திற்குட்பட்டவர்களுக்கு சொல்ல வேண்டாம், இன்று தான் பிரதேச செயலகத்திற்கு தகவலை அனுப்ப போகின்றோம் என்றார். 

கல்லடி சமுர்த்தி வங்கியானது இவ்வருடம் 35,70,000 ரூபாக்களை சேமித்துள்ளதாகவும் இதில் அதிகப்படியான சேமிப்பை செய்து முதலிடத்தை கல்லடிவேலூர் கிராமம் பெற்றுள்ளதாக சமுர்த்தி வங்கி முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்கள் கூறினார். எனக்கு ஏற்பட்ட சந்தோசத்திற்கு எல்லை இல்லை. மேலும் கூறுகையில் கல்லடி வேலூர் கிராமம் 9,31,000 ரூபாக்களை சேமித்து இதுவரைகாலமும் ஒரு கிராமம் சேமித்த தொகையை விட அதிகமாக சேமித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கூறுகையில்  இக்கிராமம் இன்னுமொரு புதிய சாதனையையும் படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார் அதாவது 14.04.2010 தொடக்கம் 17.04.2010 வரையான காலத்தில் 103 சிறுவர் கணக்குகளை புதிதாக ஆரம்பித்து இதன் மூலம் 2,06,000 ரூபாக்களை சேமித்து சாதனை படைத்தாகவும் தெரிவித்தார். அத்துடன் சிறு குழுக்களுக்கான சேமிப்பாக 2,94,000 சேமித்துள்ளதாகவும் கூறப்பட்டது. எனக்கு என்ன செய்வது என்றே தெரிவில்லை. 

2010ம் ஆண்டு அதிக சேமிப்பு செய்த சமுர்த்தி பயனாளிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். பங்கு கணக்குகளில் 5000 ரூபாக்களுக்கு மேல் வைப்புச் செய்தோருக்கு குடையும், சிறுவர் கணக்கில் 1000 ரூபாக்களுக்கு மேல் வைப்புச் செய்தோருக்கு உண்டியலும், 2500 ரூபாக்களுக்கு மேல் வைப்புச் செய்தோருக்கு தொப்பியும், 5000 ரூபாக்களுக்கு மேல் வைப்புச் செய்தோருக்கு பாடசாலை புத்தகப்பையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதுவரை காலமும் யாருமே கணக்கில் எடுக்காமல் இருந்த இக்கிராமம் இன்றைய தினம் சகலரது பார்வையையும் திருப்பியவாறு இருந்தது. இதற் கெல்லாம் காரணம் சமுர்த்தி சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களின் அர்பணிப்பான சேவையும் விடா முயற்சி என்றே நான் சொல்வேன். 327 சமுர்த்தி முத்திரைகளை கொன்ட இக் கல்லடி வேலூர் கிராமத்தில் 09 சமுர்த்தி சங்கங்களில் 69 சிறுகுழுக்கள்  இயங்கி வருகின்றன.  45 தனி நபர்களை கொன்ட இக்கிராமத்தில் 345 சமுர்த்தி பயனுகரிகள்  சிறு குழுவில் இயங்கி வருகின்றனர். இவர்கள் தான் இக்கிராமம் இவ்வருடம் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை மனதில் வைத்ததாலேயே கல்லடி சமுர்த்தி வலயத்தில் கல்லடி வேலூர் கிராமம் முதலிடத்தை பெற்றது என அக்கிராம சமுர்த்தி உத்தியோகத்தரான் நான் அன்று தெரிவித்தேன். இக்கிராமத்தில் உள்ள 09 சமுர்த்தி சங்கங்களும் தம்மிடைமயே போட்டியிட்டே இச்சேமிப்பை சேகரித்தது. இதில் காயத்திரி சமுர்த்தி சங்கம் அதிக சேகரிப்பாக சுமார் 1,61,000 ரூபாக்களை சேமித்து முதலாமிடத்தை தக்க வைக்க காயத்திரி சமுர்த்தி சங்கத்தில் உள்ள நியுகலைமகள் சமுர்த்தி சிறு குழு 14,000 ரூபாக்களை சேமித்து குழுவில் முதலிடத்தை பெற்றுக் கொன்டது. இதற்காக உழைத்த காயத்திரி சங்க தலைவி சௌந்தரராணி சுகுமாரன் அவர்களுக்கு இன்றும் நான் என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்மையில் அவரது கணவரான நடராஜா சுகுமாரன் அவர்களை இழந்து வாழ்கின்றார் அவருக்கு ஆழ்ந்த இரங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சௌந்தரராணி சுகுமாரன் அவர்களின் கணவரான நடராஜா சுகுமரன் அவர்களை கல்லடிவேலூர் தாய் சங்கம் 2011ம் ஆண்டு சிறந்த முதியோர் என கௌரவித்ததை பெருமையுடன் இன்று நினைவு கூறுகின்றோம்.

மறு நாள் பிரதேச செயலகத்தின் ஊடாக பிரதேச செயலக மட்டம் அறிவிக்கப்பட்டது நிச்சயமாக எனது கிராமம் வராது என்று உனக்குள்ளே கூறிக் கொண்டு, கொஞ்சம் இன்னும் முயற்சி செய்திருந்தா எனது சேமிப்பை பத்து லட்சமாக சேமித்து இருக்கலாம் என எண்ணியவனாக இருந்த போது பிரதேச செயலகத்தில் இருந்து அறிவிப்பும் வந்தது. பிரதேச செயலக மட்டத்தில் கல்லடி சமுர்த்தி வலயம் முதலிடத்தை பெற்றுள்ளதாகவும் கிராமங்கள் ரீதியாக கல்லடிவேலூர் கிராமம் அதிக சேமிப்பை செய்து முதலிடத்தை பெற்றுள்ளதாக மண்முனை வடக்கு தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அறிவித்திருந்தார். இது தான் கல்லடி சமுர்த்தி வலயம் சித்திரை புத்தாண்டில் அதிகமாக சேமித்து செய்து பிரதேச செயலக மட்டத்தில் முதலாவதாக வந்த சந்தர்ப்பம். நான் மாற்றலாகி வந்து ஆறு மாதத்தில் மிகப்பெரிய வெற்றியை எனது கல்லடி வேலூர் மக்கள் எனக்கு பெற்றுத்தநதிருந்தனர். மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன செய்வது என்றே புரியவில்லை அதற்கிடையில் மனதில் ஒரு நப்பாசையும் ஓடியது மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றால் எப்படி இருக்கும் என்று நாட்கள் மெல்ல மெல்ல நகர அந்த அறிவிப்பும் வந்தது ஹட்றிக் வெற்றியா? என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்.

 தொடரும்.......


Comments