நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (42ம் தொடர்).......
மார்ச்-8 சர்வதேச மகளிர் தினம் இதை எப்படி நடாத்தலாம் என சங்க தலைவர்களிடம் உரையாடிய போது சங்கங்களில் இருந்து சமுர்த்திக்காக அர்பணிப்புடன் செயற்பட்டவர்களையும், தொழில் செய்து சிறப்பாக முன்னேறியவர்களையும், தங்கள் குடும்பங்களை தங்களின் தோல்களில் சுமந்த தாய்மாரை தெரிவு செய்து கௌரவிப்பதாக முடிவெடுக்கப்பட்டதுடன் ஒவ்வொரு சங்கத்தில் இருந்து இரண்டு மகளிர் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும், அவர்களை சங்கத்தில் உள்ள அங்கத்தவர்கள் கௌரவிப்பதுடன் தாய் சமுர்த்தி சங்கம் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் கௌரவிக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கபப்ட்டது. இந்நிகழ்வை 10.03.2010 புதன் கிழமை அன்று ஸ்ரீ சக்தி வித்தியாலய மண்டபத்தில் நடாத்துவது எனவும் 2010ன் மதிப்பிற்குரிய மகளிர் என நினைவு சின்னமும் வழங்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசகர்களான திரு.மணோகரன் மற்றும் திரு.அஸீஸ் அவர்களையும் அழைத்து மகளிர் தின சிறப்புரையை நிகழ்த்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான ஆயத்த பணிகளை தாய் சங்கம் கவனித் கொண்டிருக்க ஒவ்வொரு சங்கங்களும் தங்கள் மகளிரை தெரிவு செய்து தகவல்களையும் திரட்டி தந்தன.
சகல சங்க தலைவர்களும் நேரத்திற்கு சமூகமளித்து தங்கள் மகளிரை கௌரவிக்கும்படி கோரி இருந்தேன். இதன் போது கௌரவிக்கப்படும் மகளிருக்கு சில்வர் குடம் மற்றும் நினைவு சின்னங்களும் வழங்கப்படுவதாகவும், அவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்ட நினைவேடுகளும் அவர்களுக்கும் வழங்கப்படுவதாகவும் அறிவித்து கௌரவிக்கப்படும் மகளிரின் குடும்பங்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும் எனவும் கூறி இருந்தேன்.
10.03.2010 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு தாய் சங்க தலைவி மகேந்திரன் தங்கேஸ்வரி தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியது. மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசகர்களான திரு.மணோகரன் மற்றும் திரு.அஸீஸ் அவர்களும் வருகை தந்திருந்தனர். வழமையாக நான் தான் அறிவிப்பாளராக கடமையாற்றுவேன் இம் முறை மகளிர் தினம் என்பதால் மகளிரையே அறிவிப்பாளராக அறிமுகமாக்கினேன்.
ஒவ்வொரு சங்கமும் தங்கள் மகளிரை கௌரவித்தது. இந்நிகழ்வில் உரையாற்றிய திரு.அஸீஸ் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்து வாழும் போது இவர்களை கௌரவித்துள்ளீர்கள் முதலில் சமுர்த்தி திட்டத்திற்கு நன்றி. வெறுமனே கூப்பனை மாத்திரம் கொடுக்காமல் இப்படியான செயற்திட்டங்களை சமுர்த்தி செய்கின்றது என்பதை நான் இப்போது தான் அறிவதாக தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய திரு.மனோகரன் அவர்கள் இப்படிப்பட்ட கூட்டத்தில் தான் பெண்களின் உரிமை பற்றி பேச முடியும் இங்கு கௌரவிக்கப்படும் மகளிர் கொடுத்த வைத்தவர்கள் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்விற்கு கல்லடி சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர் J.F.மணோகிதராஜ் அவர்களும், புளியந்தீவு சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர் S.இராசலிங்கம் அவர்களும், ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் T.அருட்சோதி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதற்கிடையில் கல்லடி சமுர்த்தி வங்கி கட்டிட பணிகளும் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு கொண்டு வந்தது 4ம் மாதமளவில் சமுர்த்தி வங்கி திறக்கப்படவுள்ளதாக கல்லடி சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர் J.F.மணோகிதராஜ் அவர்கள் தெரிவித்தார்.
சங்க தலைவர்கள் தங்கள் அர்பணிப்பான செயற்பாட்டில் இந்நிகழ்வு சிறப்பாக முடிந்தது நான் சகலருக்கும் நன்றி பட்டவனாக இருப்பதாக குறிப்பிட்டு அந்நிகழ்வு அன்று முடிவுக்கு வந்தது. நன்றி சமுர்த்திக்கு.....
தொடரும்........
2010 சமுர்த்தி மகளிர் கௌரவிப்பு நிகழ்வில் என்னால் வெளியிடப்பட்ட நினைவேட்டு பிரதி......
Comments
Post a Comment