நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (41ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (41ம் தொடர்).......

சமுர்த்தி திட்டம் 2010ம் ஆண்டில் 22 மாவட்டங்களிலும், 316 பிரதேச செயலகங்களிலும், 14,008 கிராமசேவகர் பிரிவுகளிலும் செயற்பட்டு வந்தது. 2010 ஆண்டில் இலங்கை பூராவும் 1,043 சமுர்த்தி வங்கிகளும், 316 சமுர்த்தி மகா சங்கங்களும், 18,788 சமுர்த்தி சங்கங்களும், 2,07,975 சமுர்த்தி சிறு குழுக்களும், 14,008 சமுர்த்தி செயலணிகளும் 15,76,876 சமுர்த்தி பயனுகரிகளுக்கு சமுர்த்தி நிவாரனம் வழங்கப்பட்டு வந்துள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

 இக்கால கட்டத்தில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சமுர்த்தி திட்டம் செயற்படுத்தப்படவில்லை. யுத்தம் முடிவுக்கு கொண்டு  வரப்பட்ட காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழ்ந்த காலத்தில் வரட்சி நிவாரண முத்திரை விநியோகமும் விசேட வேலைத்திட்டமாக மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 357 வரட்சி நிவாரன அட்டைகள் வழங்கபப்ட்டன இதில் 168 ரூபாய் பெறுமதியான நிவாரன அட்டைகள் 39, 308 ரூபாய் பெறுமதியான நிவாரன அட்டைகள் 34, 504 ரூபாய் பெறுமதியான நிவாரன அட்டைகள் 57, 630 ரூபாய் பெறுமதியான நிவாரன அட்டைகள் 181மாக வழங்கப்பட்டது. இது இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களுக்கு ஒரு உதவியாக இருந்தது.

2010ம் ஆண்டில் பல வேலைத்திட்டங்களை சமுர்த்தி அதிகார சபை மேற்கொண்டு வந்தது. இதில் 3000 கிராமம், 3060 கிராமத்திற்கான வேலைத்திட்டமென வகுத்து செயற்படுத்தி வந்தது. இவ்வேலைத்திட்டம் 2009ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்டாலும் 2010ல் மிக நேர்த்தியாக முன்னெடுத்து சென்றது. 3060 கிராமங்களுக்குள் ஜாதிகசவிய கமநெகும துரித உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தியின் நோக்கினை கொண்ட நேரடியாக மக்களுக்கு உதவக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான் அபிவிருத்தி வேலைத்திட்டம் 3000 கிராமங்களுக்கான விசேட கருத்திட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம், செய்யப்பட்ட வேலைத்திட்டத்தினை முடித்துக் கொள்ளவதற்கான குறைவேலைத்திட்டம் மற்றும் கமநெகும இரண்டாம் சமுதாய அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் கருத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது சமுர்த்தி நிவாரண முத்திரைகளின் பெறுமதிகள் ரூபா 1500, ரூபா 1015, ரூபா 900, ரூபா 600, ரூபா 210 என வழங்கப்பட்டது. இத்தகவல்களை நான் ஏன் தெரிவிக்கின்றேன் என்றால் எவ்வாறு சமுர்த்தி திட்டம் பரினாமம் அடைந்து மாறி வந்துள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காக தான்.

கல்லடி வேலூர் கிராமத்தில் கடமையேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் சமுர்த்தி திட்டத்தில் கூறப்பட்டதைப்போன்று பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருந்தேன். அறவிட வேண்டிய கமநெகும அறவீடுகளையும் அறவிட்டவனாகவும் புதிய திட்டங்களுக்காக கடன்களை பலருக்கும் இலகுவாக வழங்கியவனாகவும் செயற்பட்டேன். இவ்வளவு இலகுவாக சமுர்த்தி  கடனை பெற முடியுமா என சமுர்த்தி பயனுகரிகள் கேட்கும் வண்ணம் செயற்படத் தொடங்கினேன்.

 2010ம் ஆண்டு சமுர்த்தி அதிகார சபையால் சர்வதேச தினங்களை சிறப்பாக கொண்டாட வேண்டும்  அதற்கு உரியவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மார்ச் -8 மகளிர் தினம் இது தொடர்பாக சமுர்த்தி அதிகார சபையால் வெளியிடப்பட்ட கருத்தோவியம் பின்வருமாறு......

 உலகின் எதிர்கால சந்ததியினை உருவாக்கி தாய்மை என்ற உன்னத பதவியைக் பெற்றுக் கொண்டுள்ள இந்த உன்னத தாய் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் அபிவிருத்தி பணிகளில் தோலோடு தோல்கொடுத்து செயற்படுகின்ற ஒருவராக பெண்ணின் பங்களிப்பானது அதிவிசேடமானதாகும். இவ்வாறான முயற்சிகளினூடாக வசதிவாய்ப்புகளற்ற நிலைக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் பெறும் பெண்களின் உள அழுத்தத்தின் ஒரு துளியையாவது குறைப்பதற்கு உதவுவது ஒரு பேறாகவே கருதுகின்றோம் தொடர்ந்து நிவாரணத்தில் மாத்திரம் தங்கி வாழ்வதற்கு பதிலாக அவர்களது சக்தி விருத்திக்கு,ஆற்றல் அபிவிருத்திக்கு உதவுவதும் அவர்களை விழிப்பூட்டுவது அதனோடு இணைந்த இலக்குடைய கடன் வசதிகளை வழங்குவதனூடாக அவர்களை வலுவூட்டி வாழ்வுக்குப் பேருதவியாக இருப்பது மிகவும் பயனுள்ள ஒரு முயற்சியாகவே நாம் காண்கின்றோம்.

குடும்பத்தினையும் வெளி உலகினையும் ஒன்றோடொன்று கூட்டிப் பிணைக்கும் பலம் வாய்ந்த ஒரு சங்கிலி தான் பெண்ணாகும். வறியோர் குறைந்த சுபீட்சமிகு தேசமொன்றினை நோக்கிச்செல்லும் போது நாம் முதலில் பெண்களின் பலம் தொடர்பில் நம்பிக்கை வைப்போம். இவ்வாறான பெண்களின் பொருட்டு பிரதேச மாவட்ட மட்டங்களில் பல்வேறு பாராட்டு வைபவங்களையும் அப்பெண்களை ஊக்குவித்தல் மற்றும் விழிப்பூட்டல் வேலைத்திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட வேண்டும் என 2010ம் ஆண்டின் சமுர்த்தி அறிக்கையில் சுட்டிக்கட்டப்பட்டது.

இதற்கமைவாக கிராம மட்டத்தில் ஒரு மிகப்பெரிய மகளிர் தினத்தை நடாத்த திட்டமிட்டு சங்கங்களிடம் அனுமதி கோரி இருந்தேன் என் வாழ்நாளில் முதல் தடவையாக செய்யப்போகும் இந்நிகழ்வு வெற்றி உங்கள் கைகளில் தான் உள்ளது என தலைவர்களிடம் கூறி பல அனுமதிக்காக காத்திருந்தேன்.

தொடரும்.......

என்னால் வெளியிடப்பட்ட ஐந்தாவது ஸ்நேகம் சமுர்த்தி சஞ்சிகை......







Comments