நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (40ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (40ம் தொடர்).......


2010 தை மாதம் குதுகலமாக ஆரம்பித்தது பாடசாலைகள் ஆரம்பிக்க இருப்பதால் மாணவர்களுக்கான பாதணிகளை வழங்க தயாரானோம் 50 மாணவர்களுக்கான பாதணிகளும், காலுரைகளும்  கொள்வணவு செய்யப்பட்டு பாடசாலை அதிபரிடம் ஒப்படைத்த போது, எங்கள் சங்க தலைவிகளையே பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கி வைக்கும் படி கூறினார். அவர்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாதணிகளையும் காலுரைகளையும் வழங்கி வைத்தனர். இந்நிகழ்வு என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருந்தது.

 இதற்கிடையில் கல்லடி சமுர்த்தி வங்கிக்கான புதிய கட்டிடம் நாவற்குடா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு கொண்டு வந்தது. தை பிறந்தால் அடுத்தது தைப் பொங்கல் தான். அப்போது  ஒரு அறிவிப்பு கிடைத்தது தைப் பொங்கலை முன்னிட்டு மக்களின் சேமிப்பை அதிகரிக்கச் செய்ய தைப் பொங்கல் சேமிப்பு வாரம் அறிவிக்கப்பட்டதுடன் கிராமங்கள் தோறும் கோலம் போடுதல் போட்டி, பூமாலை கட்டும் போட்டிகளும் நடாத்தும் படி முகாமையாளரால் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு அமைய நானும் கிராமத்தில் சேமிப்பை அதிகரிக்க சங்கங்களுக்கு இடையில் போட்டி அடிப்படையில் சேமிப்பை செய்யும் படி சங்க தலைவர்களிடம் அறிவித்தேன். 

   தைப்பொங்கல் சேமிப்பும் ஆரம்பமானது ஒவ்வொரு சங்கமும் தங்களுக்கிடையே போட்டிகளுடன் சேமிப்பை ஆரம்பித்தன. முதல் தடவையாக இந்த தைப்பொங்களுக்கான சேமிப்பு 2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் அடிப்படையில் கல்லடி வலயத்தில் கல்லடி வேலூர் கிராமம் 1,29,815 ரூபாக்களை சேமித்து முதலிடத்தை பெற்றுக் கொண்டது. நானும் எனது மக்களும் மகிழ்ச்சி இருந்த போது அடுத்த மகிழ்ச்சி செய்தியும் கிடைத்தது 2010 ஆண்டின் தைப்பொங்கல் சேமிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்டி வேலூர் கிராமம் அதிளகவான சேமிப்பை செய்து மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றதை அறிவிருத்திந்தது. இதில் சங்க ரீதியாக காயத்திரி சமுர்த்தி சங்கம் கல்லடி வேலூர் கிராமத்தில் 30,000 ரூபாய் சேமிப்பை செய்து முதலிடத்தை பெற்றிருந்தது. 


2010 தைத்திருநாளில் தமிழர் கலாச்சாரத்தை மேலோங்க செய்யும் நோக்குடன் முதல் தடவையாக தைப்பொங்கல் திருநாளில் சமுர்த்தி பெறும் பயனுகரிகளுக்கான கோலம் போடுதல், பூமாலை கட்டுதல் போட்டியும் ஒவ்வொரு வலய ரீதியாக நடைபெற்றது. இப் போட்டியை கல்லடி சமுர்த்தி வலயமும் நாவற்குடா கலாசார மண்டபத்தில் நடாத்தியது. இதில்  08 கிராம சேவகர் பிரிவில் இருந்தும் சமுர்த்தி பயனுகரிகள் சினேகபூர்வமான முறையில் போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில்  கல்லடிவேலூர் கிராமம் சார்பாக திருமதி சாருகேசி, திருமதி புவனேஸ்வரி, திருமதி இந்து ஆகிய மூவரைக்  கொண்ட குழு கோலம் போடுதல் போட்டியில் முதலாமிடத்தை பெற்று கொண்டது. இது கல்லடிவேலூர் கிராமத்திற்கு கிடைத்த இரண்டாவது வெற்றிக்கனியாக அமைந்திருந்தது.

வறிய மாணவர்களுக்கு பாதணி வாங்கிக் கொடுத்திருந்தோம் இன்னும் வறிய மாணவர்களின் கல்வியறிவை உயர்த்தி ஊக்கப்படுத்துவோம் எனும் தலைப்பில் சமுர்த்தி பயனுகரிகளின் பிள்ளைகளை கௌரவிப்பதற்கான ஒரு நிகழ்வை நடாத்த திட்டமிட்டு சங்க தலைவிகளுடன் ஆலோசனை நடாத்தினேன். அவர்களும் இதற்கு உறுதுனையாக நிற்க  2010 கல்விச்சாதனையாளர்கள் கௌரவிப்பு எனும் தலைப்பில்  நிகழ்வை 2010 மாசி மாதம் சிவானந்தா தேசிய பாடசாலையில் நடாத்தினேன்.  இந்நிகழ்வில் 2006 தொடக்கம் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் சமுர்த்தி பயனுகரிகளின் குடும்பத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவான பிள்ளைகள் கௌரவிக்கப்பட்டனர். இதில் கல்லடி வேலூர் கிராமத்தில் இருந்து ஒரு மருத்துவம், ஒரு சட்டப்படிப்பு, ஒரு சித்த வைத்தியம், மூன்று கலைப்பீட மாணவர்களும், 2009ம் ஆண்டு கா.பொ.த (சாதாரனம்) சித்தியடைந்து ஜனாதிபதியிடம் நேரடியாக சிப்தொர புலமை பரிசில் பெற்ற மாணவரும், 2009ம் ஆண்டு 5ம் தர புலமைபரீட்சையில் சித்தியடைந்த 09 மாணவர்களுக்கும், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

 

இந்நிகழ்வானது கல்லடி சமுர்த்தி வலய முகாமையாளர் J.F.மனோகிதராஜ் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதீதியாக மண்மணை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களும், சிறப்ப அதீதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மாசிலாமணி நடேசராஜா அவர்களும், மண்முணை வடக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அவர்களும் சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் மற்றும் ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் அவர்களும் கலந்து கொண்டனர். முக்கிய விடயமாக இந்நிகழ்வில் முதல் தடவையாக கணனி உதவியுடன்  (மல்டி மீடியா) மூலம் மாணவர்களின் திறமைகள் திரையில் காட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 

இந்த மல்டி மீடியா பணியை சிறப்பாக செய்து முடிக்க சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான சிவநாதன் அவர்ளும் சுகுமார் அவர்ளும் உதவி செய்திருந்தனர் அவர்களுக்கு இன்றும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....

 தொடரும்........

2010ல் மாணவர்களுக்கு பாதணிவழங்கும் நிகழ்வில்.....


2010ல் கல்விச்சாதனையாளார்கள் கௌரவிப்பு நிகழ்வில்



கல்லடி வலயத்தில் நடந்த கோலப்போட்டிகள்

புளியந்தீவு சமுர்த்தி வங்கியில் தைப்பொங்கல் விழாவில் சுவாம்பிள்ளை, இராசலிங்கம் முகாமையாளர், யூட், செல்லா,தசேந்திரன் உமா ஆகியோரை படத்தில் காணலாம்.
புளியந்தீவு சமுர்த்தி வங்கியில் தைப்பொங்கல் விழாவில் இராசலிங்கம் முகாமையாளர் போட்டியாளர்களுடன்  படத்தில் காணலாம்.
புளியந்தீவு சமுர்த்தி வங்கியில் தைப்பொங்கல் விழாவில் பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா போட்டியாளருக்கு பரிசில்கள் வழங்குவதை படத்தில் காணலாம்.
புளியந்தீவு சமுர்த்தி வங்கியில் தைப்பொங்கல் விழாவில் குளோடி ஸ்பெக், தசேந்திரன், இராசலிங்கம் முகாமையாளர், உமா, செல்வநாயகம்,மோசிகவதனி ஆகியோரை படத்தில் காணலாம்.
புளியந்தீவு சமுர்த்தி வங்கியில் தைப்பொங்கல் விழாவில் பியற்றிஸ், கலா, குளோடி ஸ்பெக், றீட்டா, ரங்கநாயகி, மோசிகவதனி ஆகியோரை படத்தில் காணலாம்.


Comments