நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (39ம் தொடர்)....... ஐயோ எங்களை காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள்.......(இரண்டாம் பாகம்)

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (39ம் தொடர்)....... ஐயோ எங்களை காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள்.......(இரண்டாம் பாகம்)

அலி அக்பர் முகாமையாளர் கூறத் தொடங்கினார்.....

சரியாக 12.07.2013 அன்று அதிகாலை 3.30 மணி இருக்கும் நான் நோன்பு பிடிப்பதற்காக இருந்த சமயம் பத்மா  முகாமையாளரிடம் இருந்து ஒரு கோல் வந்தது. சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சென்ற வாகனம் விபத்தாம் என்று கூறினார். கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தேன் இதை உங்களிடம் யார் சொன்னது என பத்மாவிடம்  திருப்பி கேட்டேன் மனோகிதராஜ் முகாமையாளர் தான் சொன்னதாக சொல்ல மனோஜ் இப்ப எங்கே என நான் கேட்க அவர்கள் வருவார்கள் என்றார். நானும் பொலநறுவ வைத்தியசாலைக்கு போவதற்கு தயாரானேன். பவ்மி முகாமையாளரையும் அழைத்துக் கொண்டு பஸ்சில் புறப்பட்டேன். பொலநறுவை வைத்தியசாலையை காலை 5.00 மணியளவில் சென்றடைந்தேன். அப்போது அங்கே சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் குணரெட்னம் சேர் அவர்களும், முகாமையாளர் மனோஜ் அவர்களும்,  கணக்காளர் நேசராஜா சேர் என பலரும் நின்று கொண்டிருந்தனர்.

 யாரும் உள்ளே போக முடியாதாம் என்று கூறினார்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவும் இல்லை. நானும் சேகரா முகாமையாளரும் ஒரு மாதிரியாக உள் பக்கத்தால் உள்ளே சென்று ஒரு வைத்தியரிடம் கலந்துரையாடினேன். அவர் கூறினார் மூவர் இறந்து விட்டதாகவும் இருவரின் நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார். நான் யார் யார் என கேட்டேன் ஒருவரும் சபேசன் என்பவரும் மற்றையது சீவரெத்தினம் மற்றையவர் உதயகுமார் என்று சொன்னார் எனக்கு என்ன செய்வது என்றே தெரிவில்லை. சமுர்த்தி காராக்கள் இரண்டு தான் இறந்ததாக சொன்னார்கள் இப்ப மூன்று பேரின் பெயரை சொல்கிறாரே இதில் உதயகுமாரின் பெயரும் வருகுதே என்று எனக்கு தலையே சுற்றியது. திரும்பவும் அவரிடம் நான் கேட்டேன் அவர் சொன்னார் உதயகுமார் என்பது பஸ் சாரதி என்றார் அப்போது தான் எனக்கு ஆறுதலாக இருந்தது. உதயகுமார் எனும் ஒரு சமுர்த்தி முகாமையாளரும் அதில் சென்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேனகா என்பவரின் நிலை மோசமாக  உள்ளதாகவும் பஸ்சின் நடத்துனரும் அதே நிலையில் தான் உள்ளதாக வைத்தியர் என்னிடம் கூறினார். 

நான் திரும்பவும் வைத்தியரை சந்தித்த போது அவர் கூறினார் மேனகா உயிர் பிழைக்க மாட்டார் அவரின் உறவினருக்கு சொல்லிவிடுங்க என்றார். நான் மேனகாவை ஒரு முறை பார்க்கலாமா என கேட்டேன் அவர் ICUல் உள்ளார் பார்க்க முடியாது என்றார். நான் ஒரு மாதிரி கேட்டு உள்ளே சென்று மேனகாவை பார்த்தேன் கண்கள் மட்டும் தான் தெரிந்தன தலை முழுவதும் துணியால் கட்டப்பட்டிருந்தது. பார்த்து விட்டு வெயியே வரும் போது மேனகாவின் கணவர் பாஸ்கரன் அவர்களும் அவ்விடம் வந்திருந்ததார் அவரை மேனகாவை பார்க்கும் படி நான் கூறிவிட்டு சென்று விட்டேன். 


மறு புறம் திரும்பிய போது பஸ் நடத்துனரையும், வாமதேவன் முகாமையாளரையும் கண்டிக்கு கொண்டு செல்லப்போவதாக கூறப்பட்டது. அவரிடம் சென்ற போது அவரும் சுய நினைவில்லாமல் இருந்தார். இருவரையும் அம்புலன்ஸ் வண்டி மூலம் கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சரியாக காலை 8.30 மணி இருக்கும் மேனகா இறந்து விட்டார் எனும் துயரச் செய்தி என் காதுகளுக்கு எட்டியது. துக்கத்தில் இருந்த நான் இனி வேறு யாரையும் இழக்கும் பாரிய நிகழ்வு நடக்க கூடாது என்று எண்ணியவனாக அடுத்ததாக என்ன செய்வது என்று பார்ப்பதற்காக உடலங்களை வைத்திருக்கும் இடத்திற்கு சென்றேன் அங்கு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகானசபை உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர் சாள்ஸ் அம்மணி, பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் என பலரும் நின்று கொண்டிருந்தனர்.

உடலங்களை வைத்திருக்கும் அறைக்கு மூவரின் உடலங்களும் ஏற்கவே வந்திருந்தன 12.30 மணியளவில் மேனகாவின் உடலமும் அங்கு வந்தது. இதற்கிடையில் விமலாதேவி அவர்களுக்கு கால் முறிந்து விட்டதாகவும், ஜெயராஜா அவர்களுக்கு கை உடைந்து விட்டதாகவும், பிருந்தா அவர்களுக்கு முகம் பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாமலும், வரதராஜன் கை உடைந்து விட்டதாகவும் நான் அறிந்து கொண்டேன்.

உடலங்களை மட்டக்களப்பிற்கு கொண்டு செல்ல என்ன ஒழுங்கு செய்வது பற்றி நானும் சுரேசும் உரையாடிக் கொண்டு பிரதிப்பணிப்பாளருடனும், மனோகிதராஜூடனும் கலந்துரையாடினோம். உடலங்களை பகுப்பாய்வு செய்து மட்டக்களப்பிற்கு கொண்டு வந்து தருவதற்கு இரண்டு லட்சம் மட்டில் தேவைப்படுவதாகவும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டதாக கூறினேன். இதையாரிடம் பெற்று இந்த முதற்கட்ட பணியை முடிப்பது என யோசித்த போது முகாமையாளர் முரளி அவர்கள் அற்குரிய பணத்தை சமுர்த்தி உத்தியோகத்தரான தவநீதன் அவர்களிடமும் வசந்தா முகாமையாளர் சமுர்த்தி உத்தியோகத்தரான பத்மசிறி அவர்களிடமும் பெற்று தருவதாக உறுதி அளித்தனர். இந்த உறுதிப்பாட்டுடன் நான் உரிய மலர்சாலையுடன் கலந்துரையாடி மட்டக்களப்பிற்கு சென்றவுடன் பணம் தருவதாக கூறி விரைவாக உடலங்களை பகுப்பாய்வு செய்து தருமாறு கூறினேன்.

இதற்கிடையில் பிரதிப்பணிப்பாளருடன் கலந்துரையாடி மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிபுரியும் சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களிடமும் இருந்து 500 ரூபாய் வீதம் அறவிடுமாறும் கோரி இருந்தோம். விபத்து நடந்த அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் கதுறுவெலவில் சகல உடுப்பு கடைகளும் அன்றைய தினம் மூடியே இருந்தது இவர்களுக்கான உடுப்புக்களை வாங்குவதற்காக மிகவும் கஸ்டப்பட்டோம் மிக முக்கியமாக மேனகா அவர்களுக்கான உடை தேடுவதில் சிரமம்பட்டே விட்டோம். நேரம் 2.30 தாண்டியது எம்மிடம் உடலம் ஒப்படைக்கப்படவில்லை.  நேரம் சென்று கொண்டே இருந்தது நோன்பு முறிக்கவும் வேண்டும் அப்போது பக்கத்தில் இருந்த ஒரு சிறிய தேனீர் கடையில் நோம்பை முறித்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தேன்.

வந்தவர்கள் பலரும் சென்று கொண்டிருக்க நேரம் மாலை 6.30 தாண்டியது. என்ன செய்வது என்றே தெரியவில்லை உடலம் வைக்கப்பட்ட அறையின் அருகில் இருந்தேன். மாலை 7.00 மணி போல் கொழும்பில் இருந்து நடேசராஜா சேரும் வந்த சேர்ந்து விட்டார். நிலைமைகளை கேட்டறிந்து கொண்ட அவர் பணிப்பாளர் நாயகம் திலகசிறி சேரும் கொழும்பில் இருந்த வருவதாக என்னிடம் கூறினார். இரவு 9.00 மணிக்கு பணிப்பாளர் நாயகம் திலகசிறி சேரும் அவ்விடம் வந்து சேர உடலங்களை பாரம் எடுக்குமாறு கூறினார்கள். மேனகா, சபேசன், சீவரெத்தினம் மற்றும் சாரதி ஆகியோரின் உடலங்களை ஒப்படைத்தார்கள். உடலங்களை பணிப்பாளர் நாயகம் திலகசிறி சேரும் மற்றும் நடேசராஜா சேர் ஆகியோருடன் இனைந்து வாகனத்தில் ஏற்ற உதவி செய்தனர்.

சரியாக இரவு 9.30 மணிக்கு பொலநறுவ வைத்தியசாலையில் இருந்து உடலங்களை தாங்கிய வாகனம் புறப்பட்டது நான் அந்த வண்டியிலேயே ஏறி அமர்ந்து கொண்டேன்.  வண்டி மெது மெதுவாக ஊர்ந்த வாகனம் இரவு 11.00 மணிக்கு மேனகாவின் வீட்டிற்கு சென்றது அங்கே அவரது உறவுகள் ஓவென்று கதறி அழுதனர் என்னால் பார்க்வே கவலையாக இருந்தது. மேனகாவின் உடலத்தை அவரின் கணவரின் கைகளில் ஒப்படைத்துவிட்டு சீவரெத்தினத்தின் உடலத்தையும் அவரது உறவினர்களிடம் கையளித்து விட்டு மட்டக்களப்பை நோக்கி புறப்பட்டோம். இதற்கிடையில் என்னிடம் தவநீதன் அவர்கள் சந்தித்து பணத்தை தந்தார். சரியாக நள்ளிரவு 12.00 மணிக்கு ஏறாவூரை வந்தடைந்தோம். மலர்சாலை வாகனத்தில் பொறுப்பாக இருந்தவரிடம் பணத்தை கையளித்து விட்டு நான் ஏறாவூரில் இறங்கினேன். சபேசன் மற்றும் சாரதியின் உடலங்களை தாம் கொண்டு போய் அவர்களின் வீடுகளில் ஒப்படைப்பதாக மணோகிதராஜ் கூறினார். இவை அனைத்தையும் கூறிய அவர் தொடர்ந்து கூறினார்......

தன் வாழ்வில் தான் இப்படியான ஒரு சம்பவத்தில் இது வரை தாம் தொடர்பு படவே இல்லை ஆனால் தன்னால் இந்த நல்ல காரியத்தை செய்ய அருளிய இறைவனுக்க நன்றி கூறுவதாக என்னிடம் கூறி அவர் விடைபெற்ற போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.

 மறுநாள் அரச அதிபரின் விசேட அனுமதியின் பிரகாரம் காயப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இறந்தவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்துவதற்காக பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அவர்களுடன் சமுர்த்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பணிப்பாளர்கள் மட்டக்களப்பு வந்ததுடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயப்பட்டவர்களுக்கு நிதியுதவியையும் வழங்கி இருந்தனர். அனைவரது நல்லடக்கமும் 13.07.2013 அன்று நடைபெற்றது.

இது ஒரு சம்பவம் அல்ல சரித்திரம் தான் நானும் என் சமுர்த்தியும் தொடரை எழுதும் போது இதை எழுத வேண்டும் என நான் சிந்திக்கவே இல்லை காலத்தின் ஓட்டம் என்னை எழுத தூண்டியது. எனக்கு பல வேலைப்பழுக்களுக்கு மத்தில் இத்தகவல்களையும் புகைப்படங்களையும் தந்த சமுர்த்தி முகாமையாளர் இராசலிங்கம் அவர்களுக்கு மாவட்ட செயலக சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் அலி அக்பர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இவ்விபத்தில் வாகரை பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மேனகா பாஸ்கரன் (45) அவர்களும், வாழைச்சேனை பிரதேசசெயலக சமுர்த்தி கருத்திட்ட உதவியாளர் வேலுப்பிள்ளை சீவரெத்தினம் (41) அவர்களும், கிரான் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி கருத்திட்ட உதவியாளர் பேரின்பம் சபேசன (42) அவர்களும் பஸ் சாரதியான புதுக்குடியிருப்பை சேர்ந்த சுந்தரம்பிள்ளை உதயகுமார்(40) ஆகியோரே உயிரிழந்தனர் அவர்கள் அனைவரின் ஆத்மா சாந்தியடைய இன்று நாம் அனைவரும் பிரர்த்திப்போம். 

தயவு செய்து இந்த செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தயவாய் வேண்டி நிற்கின்றேன்.

என்றும் அன்புடன்.

பா.ஜெயதாசன்(SDO)
 தொடர் தொடரும்.....


























Comments