நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (37ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (37ம் தொடர்).......

2009 டிசம்பர் மாதத்தில்  காலடி எடுத்து வைத்தோம் குழு சிறப்பாக இயங்குகின்றன சங்க கூட்டம் ஒழுங்காக நடைபெறுகின்றன. கல்லடி வேலூர் கிராமம் சமுர்த்தி திட்டத்தில் புதுப்பொலிவுடன் செயற்படத் தொடங்கியது மூன்று மாதத்தில் இந்தப் பெரிய மாற்றமா? என பலரும் வியந்து பார்த்தனர்.

 

பாடசாலை மாணவர்களுக்கான அதிஸ்டலாப டிக்கெட்டுக்கள் விற்பனை செய்து அதிஸ்டசாலியை தெரிவு செய்வதற்கான காலமும் வந்தது. இவ் அதிஸ்டசாலிகளை தெரிவு செய்வதற்காக கல்லடி வலய சமுர்த்தி முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் ஸ்ரீசக்தி வித்தியாலய அதிபர் T.அருட்சோதி அவர்களும் வருகை தந்திருந்தனர். லட்சுமி சமுர்த்தி சங்கத்தின் தலைவர் இ.இராசையா அவர்கள் மும்முரமாக தம் பணிகளை சங்க உறுப்பினர்களை வைத்து செய்து கொண்டிருந்தார். இதன் போது முதல் மூன்று பரிசில்களும் 10 ஆறுதல் பரிசில்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் இவர்களுக்கான பரிசில்கள் 2009 சமுர்த்தி சங்கங்களின் ஒன்று கூடலின் போது வழங்கப்படும் எனவும் கூறப்பட்டதுடன், அதிக டிக்கெட்டுக்களை விற்பனை செய்த சமுர்த்தி குழு அங்கத்தவர்களுக்கும் அன்றைய தினம் பரிசில்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

புதிய தலைவர்களை தெரிவு செய்ய வேண்டிய நேரம் வந்தது பல தலைவர்கள் பல காலமாக செயற்பட்டு வந்தனர் இதில் ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று புதியவர்களை தெரிவு செய்யும் படி கூறி ஒவ்வொரு சங்கங்களும் மாற்றங்களுடன் சங்கங்களை புதுப்பித்துக் கொண்டன. இவர்களை மேலும் எப்படி உற்சாகப்படுத்த முடியும், என்ன யுக்தியை கையாளலாம் என சிந்தித்தேன். உடன் சங்க தலைவிகளை அழைத்து தங்களுக்கு இது வரை சேவையாற்றிய தலைவர், செயலாளர், பொருளாளரின் சேவை அளப்பரியது எனவே அவர்களுக்குரிய மரியாதையை வழங்க வேண்டியது புதிதாக கடமையை பொறுப்பேற்றிருக்கும் உங்களது கடமை ஆகவே இவ்வருடத்திற்கான ஒரு ஒன்று கூடலை சிறிதாக பாடசலையில் நடத்தி அவர்களை கௌரவிப்பதுடன் அதிஸ்டலாப சீட்டிலுப்பில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்களையும் வழங்குவதுடன், புதிதாக சமுர்த்தி பிரதிப்பணிப்பாளராக கடமையை ஏற்றிருக்கும் மா.நடேசராஜா அவர்களையும் வரவேற்று இந்நிகழ்வை நடாத்துவோம் தங்களின் ஒத்துழைப்பையும் அனுமதியையும் வேண்டி நிற்பதாக கூறினேன். அவர்களும் சிறப்பாக நடாத்துவோம் என கூறி அதற்கான அனுமதியையும் வழங்கி இருந்தனர்.

இந்த அனுமதியுடன் 19.12.2009 அன்று மதியம் 2.30 மணிக்கு ஸ்ரீசக்தி வித்தியாலத்தில் நிகழ்வு ஆரம்பமானது. நான் முதல் முதலில்  கல்லடிவேலூர் கிராமத்தில் நடந்தும் மிகப்பெரிய ஒரு நிகழ்வு இது தான். 2009ம் ஆண்டிற்கான கௌரவிப்பும், ஒன்றுகூடலுமாகும் என்கின்ற பெயரில்  இந்நிகழ்வை நடாத்தினேன். 

ஒவ்வொரு சங்கத்திலும் இயங்கிய தலைவர்கள், செயலாளர்கள், பொருளாலர்கள், உபதலைவர்கள், உபசெயலாளர்கள் என மொத்தம் 45 சமுர்த்தி பயனுகரிகளை கௌரவித்தேன்2009ம் ஆண்டின் சிறந்த முயற்ச்சியாளர், சிறந்த சமூகசேவையாளர், சிறந்த சமுர்த்தி பயனுகரி, கிராமத்தின் சிறந்த முன்மாதிரி ஊக்குவிப்பாளர், சிறந்த சங்கம், சிறந்த குழு என பல்வேறுபட்டோரையும் கௌரவித்தேன். அத்துடன் இக்கிராமத்தில் சமுர்த்தி திட்டம்  ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் நான் செல்லும் வரை சேவையாற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்ளையும் அழைத்து  கௌரவித்தேன் அது ஒரு விஷேட அம்சமா காணப்பட்டது. 

இத்துடன் கலந்து கொண்ட ஒவ்வொரு பயனுகரிகளுக்கும் 2010ம் ஆண்டில் தைப்பொங்கல் தினத்தில் பொங்கல் செய்வதற்கான பாணை இலவசமாக வழங்கப்பட்டதுடன், அதிஸ்டலாப சீட்டிலுப்பில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்களும் அதிக டிக்கெட்டுக்கள் விற்பனை செய்தோருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது. சமுர்த்தி பயனுகரிகளின் கலை நிகழ்ச்சிகளும், வேடிக்கை விளையாட்டுக்களும் இடம் பெற்றன.      

     

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா. நடேசராஜா அவர்கள் உரையாற்றும் போது தான் கடமையேற்று ஓர் சில மாதங்களில் இக்கிராமத்தின் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளதாகவும், தாமாக முன் வந்து சமுர்த்தி முத்திரைகளை வழங்கிய சமுர்த்தி பயனுகரிகளை நீங்கள் இங்கு கௌரவித்தீர்கள்  நிச்சயமாக கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் தான் அவர்கள் என்று கூறியதுடன் இனிவரும் காலத்தில் இன்னும் சிறப்பாக செயற்பட தன் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

இந்நிகழ்வில் கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும்,  புளியந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.இராசலிங்கம் அவர்களும்,  ஸ்ரீசக்தி வித்தியால அதிபர் T.அருட்சோதி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 இவ்வாறு 2009ம் ஆண்டு இருதயபுரம் கிழக்கில் தொடங்கி கல்லடிவேலூரில் முடிவுக்கு வர 2010ல் பல புதிய வேலைத்திட்டங்கள் வரவுள்ளதாகவும் மக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் பிரதிப்பணிப்பாளர் கூறிவிட்டு விடைபெற்றுச் செல்ல 2009ம் இன்றுடன் விடைபெற்றது....

நாளைய தினம் மிக முக்கியமானதொரு கட்டுரை வெளியிடப்படவுள்ளது தயவு செய்து சகரும் வாசித்து விட்டு மற்றவர்களுக்கும் அதை பகிர்ந்து விடவும்.....

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....

தெடரும்........

அதிஸ்டலாப சீட்டிலுப்பில் சமுர்த்தி முகாமையாளர் J.F.மனோகிதராஜ், அதிபர் T.அருட்சோதி,லட்சுமி சங்க தலைவர் I.இராசையா ஆகியேரை படத்தில் காணலாம்


2009 கல்லடிவேலூரில் சமுர்த்தி ஆண்டிறுதி கௌரவிப்பு நிகழ்வு....


Comments