நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (36ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (36ம் தொடர்).......

இதற்கிடையில் என்னால் வெளியிடப்பட்டு வந்த ஸ்நேகம் பத்திரிக்கை தடைப்படும் ஆபாயம் தென்பட்டது. ஏன் என்றால் இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் இருந்து வெளி வந்த அந்த பத்திரிக்கை அங்கு தான் வெளியிடப்பட வேண்டும் என நான் அக்கிராம சமுர்த்தி உத்தியோகத்தரிடம் கேட்டிருந்தேன். ஆனால் அவர் அதற்கான முயற்சி எடுக்காததால் அப்பத்திரிக்கையை கல்லடி வேலூர் கிராமத்தில் இருந்து நான் வெளியிட முயற்சித்து நான்காவது வெளியீடையும் வெளியிட்டேன்.

2009 நவம்பர் மாத ஆரம்பத்தில் குழுக்களை சீர் செய்து சமுர்த்தி சங்க கூட்டங்களை 15 நாட்களுக்கு ஒரு முறை நடாத்தி ஒழுங்கமைத்து கடன்களும் வழங்க ஆரம்பித்து விட்டேன். இச் செயற்பாட்டிற்கு முழு பொறுப்பையும் ஒன்பது சங்க தலைவர்களும் எனக்கு ஏற்படுத்தி கொடுத்தனர். புதிதாக 19 அங்கத்தவர்களை சமுர்த்தி வங்கியில் பங்குதாரராக்கி ஒரு புதிய குழுவையும் உருவாக்கி 61 சமுர்த்தி சிறு குழுக்களையும் செயற்பட வைத்தேன்.

 இதன் போது மட்டக்களப்பு மாநகர சபையில் உள்ள கிராமங்களை பசுமையாக்குவோம் எனும் வேலைத்திட்டத்தில் கிராமங்கள் தோறும் மாநகர சபையால் மரங்கள் நடப்பட்டும் கிராம மக்களுக்கு தென்னங்கன்றுகள்  வழங்கப்பட்டும் வந்தது. இதற்கான ஒரு நிகழ்வு கல்லடி வேலூர் கிராமத்தில்  சிறி சக்தி வித்தியாலத்தில் 09.11.2009 அன்று நடைபெற்றது இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு மரம் நடும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுக்காக என்னையும் இக்கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் எனும் கோதாவில் அழைத்திருந்தனர் நானும் என் சங்க தலைவர், செயலாளர்களுடன் கலந்து கொண்டேன். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர், கிராம உத்தியோகத்தர் மற்றும் பாடசாலை அதிபர் திருமதி.அருட்சோதி அவர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் அடுத்த கட்டமாக சமுர்த்தி திட்டம் ஊடாக நவோதய வேலைத்திட்டத்தின் கீழ் பத்தாயிரம் திட்டங்களை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறும் முதல் கட்டமாக வீட்டுத் தோட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு 26.11.2009 அன்று காலை 11 மணிக்கு அங்குரார்பண நிகழ்வை நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதற்கினங்க கல்லடி வேலூர் கிராமத்தில் அந்நிகழ்வை நடாத்த திட்டமிட்டோம் அதற்காக கல்லடி வேலூர் கிராமத்தில் 22 சமுர்த்தி பயனாளிகளுக்கு 1140 ரூபாய் பெறுமதியான மரக்கண்றுகளும் நாற்று விதைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அவர்களும், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.விஜயகுமார் அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி வங்கியூடாக பல கடன்கள் சமுர்த்தி பயனுகரிகளுக்கு வழங்கப்பட்டு  வருவதை நாம் கடந்த காலங்களில் அறிந்துள்ளோம். எனவே சமுர்த்தி வங்கியில் வழங்கப்படும் சாதாரண கடனுக்கு 18 வீத வட்டி அறவிட்டு வந்தது. அவ்வட்டி வீதம் 2009.11.01 முதல் 12 வீதமாக மாற்றமடைந்துள்ளதை சமுர்த்தி வங்கி பிரிவு அறிவிருத்திருந்தது. முக்கிய விடயம் என்னவென்றால் சமுர்த்தி வங்கியில் மாத்திரமே கடன் மீதிக்கு வட்டி கணிப்பிடும் நடைமுறையை இருந்து வந்தது. அதாவது ஒருவர் 25000 ரூபாய் கடன் பெற்றிருப்பின் அவர் முதல் மாதத்தில் 2000 ரூபாய் முதலில் செலுத்தி இருந்தால் 23000 ரூபாய்க்கு மாத்திரமே வட்டி கணிப்பிடப்படும் இந்நடைமுறை ஆரம்ப காலம் முதல் இன்று வரை சமுர்த்தி வங்கிகளில் நடைமுறையில் உள்ள ஒரு செயற்பாடாகும்.

இதனிடையே 2005ம் ஆண்டு புதிய நியமனத்துடன் இரண்டாம் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட எனக்கு தகுதிகான் காலத்தின் பின் சேவையை உறுதிப்படுத்திய கடிதம் 2009.11.01 அன்று எனக்கு கிடைத்தது. மற்றுமொரு தலையிடியும் அறிவிக்கப்பட்டது அது அடுத்த தடை தாண்டல் பரீட்சைக்கான அறிவிப்பு தான் சமுர்த்திய மட்டும் செமயா பாஸ் பண்ணிட்டம் அடுத்த தாபன கோவையை பாஸ் பண்ணியே ஆக வேண்டுமே சரி என்றவாறு அதிலும் ஒரு கண்ணை விட்ட படி என் வேலையை தொடர்ந்தேன். 

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....

தொடரும்....
என்னால் வெளியடப்பட்ட 4வது சமுர்த்தி சஞ்சிகை கல்லடி வேலூரில் இருந்து முதல் தடவையாக...




நவோதய வேலைத்திட்டத்தில் கீழ் கல்லடி வேலூர் சமுர்த்தி பயனுகரிகளுக்கு மரக்கண்றுகளை  கல்லடி சமுர்த்தி  வலய முகாமையாளர் வழங்கிய போது....


Comments