சமுர்த்தி 200000 குடும்பங்கள் மேம்படுத்தல் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மட்டு அரச அதிபர் தலைமையில்.....

 சமுர்த்தி 200000 குடும்பங்கள் மேம்படுத்தல் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மட்டு அரச அதிபர் தலைமையில்.....

சமுர்த்தி பயனாளிகளை மேம்படுத்தும் நோக்குடன் 200000 குடும்பங்களை  மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதல் கட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 06.07.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர்  கணபதிப்பிள்ளை கருணாகரன்  தலைமையில் மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இக் கூட்டத்திற்பு பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், விவசாய திணைக்களம், கால்நடை திணைக்களம், கைத்தொழில் திணைக்களம் போன்ற திணைக்களத்தில் இருந்து திணைக்கள தலைவர்களும் மற்றும் உத்தியோகத்தர்களும்,  மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.M.அலி அக்பர் அவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி பற்றியும், கலந்தரையாடப்பட்டதுடன் திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும், திணைக்கள தலைவர்களின் செயற்பாடுகள் பற்றியும் கலந்தரையாடப்பட்டன.  

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.... 







Comments