மட்டக்களப்பு மாவட்டத்தில் சௌபாக்கியா வாரம் வெற்றிகரமாக முன்னெடுப்பு......
நாடுபூராவும் ஜுலை 01 முதல் ஜுலை 07 வரை சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் நாடுபூராவும் நடைபெற்று வருகின்றன.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சகல பிரதேச செயலகங்களிலும் இவ்வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றன. இப்பிரதேச செயலகங்களில் சமுர்த்தி பிரிவின் ஊடாக சௌபாக்கியா வீடுகள் திறந்து வைப்பு, வீட்டு அதிஸ்டத்தில் வீடு கிடைத்தவர்களின் வீடுகள் திறந்து வைப்பு, சிப்தொற புலமை பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, சேதன பசளை உற்பத்திகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, புதிய 200000 லட்சம் குடும்பங்கள் மேம்படுத்தலுக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல் போன்ற நிகழ்வுகள் இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வோலைத்திட்டம் நாளை 07ம் திகதி வரை செயற்படவுள்ளது.
குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில்...
Comments
Post a Comment