சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு காப்பீடு மூலம் இழப்பீடு.......
அன்மைக்காலத்தில் கொவிட் காரணமாக நாம் சில சமுர்த்தி உத்தியோகத்தர்களை இழந்த துயரச் சம்பவங்கள் இன்று வரை எம் மனங்களில் மாறா வடுவாக இருக்கின்றது. பல இக்கட்டான காலங்களில் தங்கள் உயிரையே துச்சமென மதித்து சேவையாற்றிக் கொண்டிருக்கும் எமது சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிலையை கருத்தில் கொண்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான காப்புறுதி திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் கொவிட் காலகட்டத்தில் சேவையாற்றி மரணிக்கும் சமுர்த்தி உத்தியோகத்தரின் குடும்பத்திற்கு 10 லட்சம் காப்புறுதி இழப்பீடும், கடமையில் ஈடுபடும் போது விபத்துக்குள்ளாகும் சந்தர்பத்தில் (அரச மற்றும் தனியார்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றால் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் வீதம் உயர்ந்த பட்சம் 15 நாட்களுக்கு காப்புறுதி இழப்பீடு வழங்குவதற்கும், கடமை நேரத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் மரணிப்பாராயின் சமுர்த்தி உத்தியோகத்தரில் தங்கி வாழ்வோருக்கு 10 லட்சம் காப்புறுதி இழப்பீடும் வழங்கப்படவுள்ளது.
குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
Comments
Post a Comment