உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக கர்ப்பினித் தாய்மாருக்கான கொடுப்பனவு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ......
உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக கர்ப்பினித் தாய்மாருக்கான கொடுப்பனவு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ......
(S.சதீஸ்) மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தினூடாக ஆரேக்கியமான எதிர்கால சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கர்ப்பினித் தாய்மாருக்கான போசாக்கு வேலைத்திட்டம் மூலம் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் புதன்கிழமை 23.06.2021ம் திகதி அன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தினூடா மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவை தெரிவு செய்து உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தினூடா ஆரேக்கியமான எதிர்கால சமூகத்தை உருவாக்கும் நோக்கில் போசாக்கு குறைந்த கர்ப்பிணி தாய்மாகளுக்கு இரண்டு மாத காலத்திற்கான கொடுப்பணவாக ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டது.
இவ்வேலைத்திட்டத்திற்காக மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் உள்ள 24 கிராம சேவகர் பிரிவுகளிலும் கர்ப்பிணித்தாய்மார்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதன் அடிப்படையில் கரவெட்டி சமுர்த்தி வங்கிப் பிரிவில் இருந்து 154 பேரும், புதுமண்டபத்தடி வங்கிப் பிரிவில் இருந்து 204 பேருமாக மொத்தமாக 358 கர்ப்பினித் தாய்மார் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தினால் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக இந்நிதி வழங்கப்பட்டு பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கிகள் மூலமாக உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வேலைத்திட்டமானது கொவிட் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, வங்கிகளிலும், சமுர்த்தி உத்தியோகத்தரின் அலுவலகம் மற்றும் உரிய பயனாளிகளின் வீடுகளுக்கு சென்றும் இக்கொடுப்பனவினை வழங்கி வருகின்றனர். இதன்போது சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் K.தங்கத்துரை, வங்கி முகாமையாளர்களான பிரியதர்சினி அசோக்குமார், N.ஜெயசீலன் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
Comments
Post a Comment