மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றுமொரு சமுர்த்தி உத்தியோகத்தர் ஓய்வு பெறுகின்றார்......
சமுர்த்தி உத்தியோகத்தாத்கள் பல அசாதார சூழ்நிலைகளில் தம் அயராத பணிகள் செய்து வந்திருப்பதை யாவரும் அறிவீர்கள். தற்போதைய சூழ்நிலையில் கூட இந்த கொரோனா காலங்களிலும் தம் அயராத பணிகளை செய்த வருகின்றனர்.
இக்கால கட்டத்தில் சுமார் 23 வருட அரச சேவையின் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சமுர்த்தி ஊத்தியோகத்தர் 04.06.2021 முதல் தன் அர்ப்பணியான சேவையை முடித்து ஓய்வு நிலைக்கு செல்கின்றார். களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய திருமதி. சுமதி மகேந்திரராசா அவர்களே தம் சேவைக்காலத்தை பூர்த்தி செய்து ஓய்வு பெறுகின்றார்.
இவர் தம் ஆரம்ப காலத்தில் பெரியகல்லாறு -02 பிரிவில் கடமையாற்றியாற்றி பின் பெரியகல்லாறு மேற்கு கிராமத்திலும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.
சிறந்த மனிதாபிமான இவர் தம் ஆரம்ப கல்வியை பெரியகல்லாறு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும், சாதாரண தரத்தினை பெரியகல்லாறு மத்திய கல்லூரியிலும், உயர் கல்வியை கல்முனை வெஸ்லி கல்லூரியிலும் கற்றவர் ஆவார்.
யார் எதை தூற்றினாலும், பாராட்டினாலும் மக்களுக்கான சேவையாற்றி விடைபெறும் உங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பாராட்டி வழியனுப்பி வைக்கின்றோம் இனி தங்கள் குடும்பத்துடன் இனிதே நாட்கள் நகர வாழ்த்துகின்றோம்........
Comments
Post a Comment