சமுர்த்தி வங்கியில் மிக விரைவில் ATM அட்டைகள்.....
சமுர்த்தி வங்கிகள் தற்போது கணணி மயமாக்கப்பட்டு வரும் இவ்வேளையில் சமுர்த்தி பயனுகரிகளின் வங்கிச்சேவையை துரிதப்படுத்துவதற்காக சமுர்த்தி வங்கிகள் ATM அட்டைகளை அறிமுகப்படுத்தப்படுத்தவுள்ளது. இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இலங்கை பூராகவும் 1073 சமுர்த்தி வங்கிகள் இயங்கி வருகின்றன இதில் பெரும் பாலான சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டு மக்களுக்கு இலகு சேவையை வழங்கி வருகின்றன. இதில் மேலும் ஒரு உயர்வின் படியாக தற்போது சமுர்த்தி வங்கியூடாக ATM அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment