மட்டக்களப்பு 93 நண்பர்களால் ஒரு தொகுதி உலர் உணவு வழங்கி வைப்பு.....
கொவிட் தாக்கத்தால் அன்றாடம் தம் வாழ்வாதாரத்தை இழந்த மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உள்ள மூன்று கிராமங்களுக்கு மட்டக்களப்பில் 93ல் உயர்கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றினைந்து இவ்வுதவியை செய்துள்ளனர். புனித மிக்கல் கல்லூரி, சிவானந்தா பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 1993ல் உயர்தரம் கல்வி பயின்ற மாணவர்களை ஒன்றினைத்து Friends of '93 Batch - Batticaloa எனும் பெயரில் பல சேவைகளை மட்டக்களப்பில் செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் 04.06.2021 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலத்திற்குட்பட்ட கல்லடி முகத்துவாரம், நொச்சிமுனை, நாவற்குடா ஆகிய கிராமங்களில் கொவிட் காரணமாக அன்றாட தொழில் பாதிக்கப்பட்ட 126 குடும்பங்களுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் தலைமையில் வழங்கப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக நாளை வவுனதீவு பிரதேச செயலகத்தில் கொவிட் காரணமாக அன்றாட தொழில் பாதிக்கப்ட்ட 60 குடும்பங்களுக்கும் இவ்வமைப்பின் மூலம் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
Comments
Post a Comment