நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (31ம் தொடர்).......
இருதயபுரம் கிழக்கு கிராமத்தின் என் வாழ்வில் மறக்க முடியாத மற்றுமொரு தருனம் தான் இது. இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி அமைந்திருக்கும் வீதி கிரவல் வீதியாக அன்று காணப்பட்டது அதை கொங்கிறீட் வீதியாக மாற்றுவதற்கான அனுமதியை நாம் இம்முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ள 3060 கிராம வேலைத்திட்டத்தில் கோரி இருந்தோம் அதற்கான அனுமதியும் எமக்கு கிடைப்பெற்றது. இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பாரதி சமுர்த்தி சங்கத்தை கொண்டு கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஆரம்ப கட்ட பணியை 02.06.2009 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் காலமதி பத்மராஜா அவர்களினால் தொடங்கினேன். அவருடன் எமது வலய முகாமையாளர் S.குருபரன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். பணி மிகவும் நேர்த்தியாக கண்காணிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.இவ்வேலைத்திட்டம் 21.06.2009 அன்று முடிவுறுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து விடபடவேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. அதற்கமைய மிகவும் வேகமாகவும் சிறப்பாகவும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு திட்டமிட்டபடி 21.0.2021 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களுடன் மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளரும் உதவி ஆணையாளருமான P.குணரெட்னம் அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அவர்களும், அப்போதைய மாநகரசபை உறுப்பினர் க.தவராசா அவர்களும் மற்றும் சமுர்த்தி முகாமையாளர் S.குருபரன் அவர்களும் இனைந்து புதிய வீதிக்கான நாடாவினை வெட்டி மக்கள் பாவனைக்காக கையளித்தனர். இதுவே என் வாழ்வில் மறக்க முடியாத தருனம் ஆகும் இவ்வீதியால் அன்மையில் ஓர் இரு தினங்களுக்கு முன் சென்று வந்தேன் மிகவும் சந்தோசமாக இருந்தது நாம் இட்ட முதல் படி தான் இந்த வீதி என்ற பெருமையில் சென்றேன் நன்றி சமுர்த்தி.
காலத்தின் ஓட்டம் நகர்ந்தது நாமும் எம் பணிகளை முன்னெடுத்து வந்தோம் ஓர் நாள் அலுவலகத்திற்கு வந்த போது ஒரு அதிர்ச்சியான செய்தியை என்னிடம் கூறினார் சிறி......
நம்மட குருபரன் சேருக்கு இடமாற்றமாம் என்றான் நானும் ஏண்டா எனக் கேட்டவாறு உள்ளே சென்றேன். அவரும் சிரித்தபடி என்ன ஜெயதாசன் என்றார் சிறி சொன்னது உண்மையா சேர் என்டேன். தலையை அசைத்தபடி ஓம் என்றார் கொஞ்சகாலம் திரும்பவும் வெளியில வேலை செய்வமே என்றார். உங்கள் அனைவருடனும் அன்பாக பணி புரிந்ததற்கு நன்றி என்றார்.
குருபரன் சேர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்காக மீண்டும் களம் கண்டார் புதிய சமுர்த்தி முகாமையாளராக கீதா கணகசிங்கம் அவர்கள். வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் புதிய முகாமையாளரின் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நாமும் நம் பணிகளை மேற் கொண்டு வந்திருந்தோம். 21.08.2009 அன்று எனக்கு ஒரு கடிதம் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டிருந்தது இருதயபுரம் கிழக்கு வலயத்திற்கே ஒரு அதிர்ச்சியான செய்தியாக அது இருந்தது......
குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
தொடரும்.......
Comments
Post a Comment