நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (29ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (29ம் தொடர்).......

என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத ஒரு நாள் தான் 21.05.2009ம் ஆண்டாகும். சமுர்த்தி ஊடாக நாம் எவ்வளவு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் எதுவுமே மக்கள் மத்தியில் சென்றடைவதாக தெரியவில்லை. நாம் செய்யும் வேலைத்திட்டத்தை நாமே பத்திரிக்கை வடிவில் வெளியிட்டால் என்ன என்று சிந்தித்தவனாக ஸ்நேகம் எனும் பத்திரிக்கையை நானே வடிவமைத்து அச்சிட்டு வெளியிட்டேன். இந்த நிகழ்வுக்கு அன்றைய மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளரும், சமுர்த்தி உதவி ஆணையாளருமான P.குணரெட்ணம் அவர்களை அழைத்து அவர்களின் கையால் முதல் பிரதியை வெளியிட்டு வைத்தேன். அத்துடன் 2009ம் ஆண்டு சித்திரை  புதுவருடத்தில் அதிக சேமிப்பு செய்தவர்களுக்கும் அன்றைய தினம் பரிசில்களை வழங்கி கௌரவித்தேன். இந்நிகழ்வுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அவர்களும் இருதயபுரம் சமுர்த்தி முகாமையாளர் S.குருபரன்  மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது உரையாற்றிய பிரதிப்பணிப்பாளர் அவர்கள் இவ்வாறன செயற்பாடுகளை செய்யும் உத்தியோகத்தரை பாராட்டாமல் இருக்க முடியாது. எந்த கிராமும் இது போன்ற செயற்பாடுகளை செய்யவில்லை இருதபுரம் கிழக்கு கிராமம் இச்செயற்பாட்டில் ஒரு முன்மாதிரி கிராமமமாக திகழ்கின்றது என்றார்.

2009ன் முக்கியமான ஒரு இடத்திற்கு வந்துள்ளோம் ஆம் மே-31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு சேமிப்பு வாரம் தொடங்கியது. நான் ஏற்கனவே முடிவெடுத்து இருந்தேன் எப்படியாவது சித்திரை புத்தாண்டு போன்று இம்முறை புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் வலய மட்டத்திலாவது முதலிடத்தை பிடிக்க வேண்டும் என. அதற்கான பல திட்டங்களை வகுத்தும் வைத்திருந்தேன்.


மட்டக்களப்பின் முக்கிய இடங்களில் சேமிப்பை பெற்றுக் கொள்வது என்றும். முதலாவது கொடியை மாவட்ட செயலகம் தொடக்கம் பிரதேச செயலகம் வரை கொண்டு செல்வது என்றும், இம்முறை புதிதாக ஒரு நினைவு சின்னம் இருதயபுரம் கிழக்கு கிராமம் சார்பாக அறிமுகப்படுத்தி ஒவ்வொரு அலுவலக மேசைகளிலும் வைப்பது என்று முடிவெடுத்து இருந்தேன். அதே போல் முதல் கொடியை அப்போதைய மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அருமைநாயகம் ஐயாவிற்கு சூட்டிய பின்னர், 

பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அம்மணி அதனைத் தொடர்ந்து மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் என நீண்டு கொண்டே சென்றது. இதனிடையே மட்டக்களப்பு மாநகர சபைக்கு அப்போதைய நல்லினக்கு ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

அவர்களை சந்தித்து அவருக்கும் கொடியினை சூட்டி இருந்தோம். மற்றும் பலரிடமும் சேகரித்து உண்டியல்கள் வங்கியில் ஒப்படைக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் அதிக சேமிப்பு செய்து இருதயபுரம் கிழக்கு கிராமம் முதலிடத்தை பெற்றுக் கொண்டது மொத்தமாக 67000.50 சதம் சேகரித்து இருந்தது. இதனிடையே பிரதேச செயலக மட்டத்தில் 100100 ரூபாவை சேமித்து. 


யூட் செல்வா இராஜரெட்னம் முதலாமிடத்தையும்
83035 ரூபாயை சேமித்து இரண்டாமிடத்தை நொச்சிமுனை கிராமம் சார்பாக திருமதி.பா.உமாபதி அவர்களும் 67000.50 சதம் சேகரித்து மூன்றாமிடத்தை இருதயபுரம் கிழக்கு கிராமம் சார்பாக பா.ஜெயதாசன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். இதன் போது பாடசாலை மட்டங்களில் பல விழிப்புனர்வு சொற்பொழிவுகளையும் நான் நடாத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

இதன் போது வலய ரீதியாக கல்லடி வலயம் 319417 ரூபாக்களை சேமித்து முதலிடத்தையும், 253116 ரூபாக்களை சேமித்து இருதயபுரம் வலயம் இரண்டாமிடத்தையும், 227407 ரூபாக்களை சேமித்த புளியந்தீவு வலயம் மூன்றாமிடத்தையும், 200128 ரூபாக்களை சேமித்து இருதயபுரம் கிழக்கு வலயம்; நான்காமிடத்தையும் பெற்றுக் கொண்டது. இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் 1000068 ரூபாக்களை சேகரித்து மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்டது. 2009ம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக ஐந்தாவது இடத்தினை  மட்டக்களப்பு மாவட்டத்தில் புதுநகர் கிராம உத்தியோகத்தர் யூட் செல்வா இராஜரெட்னம் அவர்கள் மீண்டும் பெற்றுக் கொண்டார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....

 தொடரும்.......

(சமுர்த்தி பற்றிய  எனது பத்திரிக்கை முதல் பிரதி என்னால் வடிவமைக்கப்பட்டது. ஸ்நேகம் எனும் பெயரில்..




(2009 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வாரம் திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் அவர்களுடன்.)

(2009 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வாரம்  மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் அவர்களுடன்.)
(2009 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வாரம் போதனா வைத்தியசாலையில்) 
(2009 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வாரம் சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்களுடன் சமுர்த்தி முகாமையாளர் S.குருபரன்) 
(2009 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வாரம்  கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலத்தில்) 
(2009 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வாரம் சிவானந்தா பாடசாலையில்) 
(2009 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வாரம் மஹாஜனா கல்லூரியில்) 
(2009 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வாரம் ஹற்றன் நசனல் வங்கியில்) 
(2009 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வாரம் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி முகாமையாளர் S.குருபரன் அவர்களுடன்) 
(2009 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வாரம் தொடர்பாக 03.06.2009 அன்று தினகரன் பத்திரிக்கையில்) 


Comments