நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (28ம் தொடர்).......
30.04.2009 அன்று இருதயபுரம் கிழக்கு கிராமத்தின் முக்கிய ஒரு நாளாக இருந்தது. சமுர்த்தி திட்டத்தின் கீழ் மற்றுமொரு திரியபியச வீட்டிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இருதயபுரம் கிழக்கு கிராமத்தின் விஜயபுரம் குக்கிராமத்தில் வசிக்கும் விதவை தாயான பூமணி நடராஜா என்பவருக்கு வீட்டிற்கான அடிக்கல்லினை இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயத்தின் முகாமையாளர் S.குருபரன் அவர்களால் நடப்பட்டது. தாயும் மகளும் என வாழும் இவர்களுக்கு 350 ரூபாய் பெறுமதியான சமுர்த்தி நிவாரணமும், PMA கொடுப்பணவுமே அரசினால் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு இவர்களுக்கான வீடு அமைக்க நிதி வழங்கபப்ட்டது. சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தால் 25000 ரூபாவும், இலங்கை சமுர்த்தி அதிகார சபையால் 60000 ரூபாவும், வீடமைப்பு அதிகார சபையால் 35000 ரூபாவும் வழங்கப்பட்டது. இத்துடன் இருதயபுரம் கிழக்கு கிராமத்திற்கு மூன்று வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் இவ்வீட்டை மிக விரைவாக முடித்து தம் கனவு வீட்டில் வாழத் தொடங்கினர்.
04.05.2009 அன்று 3060 கிராம வேலைத்திட்டத்தில் கிராமங்கள் தோறும் பலவேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் குடிசை வீடுகளில் வாழும் வறியவர்களை கல் வீடுகளில் வாழச்செய்வோம் எனும் திரியபியச வீட்டுத்திட்டம் மாமாங்கம் கிராமத்தில் நடைபெற்றது. சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தே.தேவராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி முகாமையாளர் S.குருபரன் அவர்கள் கலந்து கொண்டு வீட்டிற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார். இவ்வீடானது மாமாங்கம் கிராமத்தை சேர்ந்த விதவைத் தாயான தே.ரஞ்சிதமலருக்கு வழங்கப்பட்டிருந்தது. 415 ரூபாய் நிவாரணம் பெறும் சமுர்த்தி பயனுகரியான இவருக்கு சமுர்த்தி அதிகார சபையால் 60000 ரூபாவும், 2008ம் ஆண்டு புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் சேகரிக்கப்பட்ட பணத்தில் இருந்து சமூக அபிவிருத்தி மன்றத்தால் 25000 ரூபாவும் வழங்கப்ட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிகழ்வில் அப்போதைய இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச்சபை தலைவி லோ.ஜெயந்தி அவர்களும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
06.05.2009 அன்று 3060 கிராம வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதான பணிகள் முக்கியமானதொன்றாக காணப்பட்டாலும் சமுர்த்தி திட்டத்தின் முக்கிய பங்கு இந்த சிரமதான பணிகளுக்கு உண்டு. எனவே இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் சமுர்த்தி வங்கி அமையப்பட்டுள்ளதால் நாமே பொதுவாக பல தடவைகளில் எமது சமுர்த்தி வங்கியை சிரமதானம் செய்துள்ளோம். எனவே இதை கருத்தில் கொண்டு 06.05.2009 அன்று வங்கியில் எனது மூன்று சமுர்த்தி வங்கிகளும் சிரமதான பணிகளில் ஈடுபட்டு வந்தன. எமது சமுர்த்தி சங்கங்கள் கடந்த காலங்களில் இருதயபுரம் இருதயநாதர் ஆலயம், குமாரத்தன் கோயில், கிராமிய அபிவிருத்தி கட்டிட வளாகம் போன்ற இடங்களில் சிரமதான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.சமுர்த்தி திட்டம் 10 வருடத்தை கடந்ததை நாம் கடந்த வருடத்தில் பார்த்தோம். இதில் சமுர்த்தி திட்டம் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது சமுர்த்தி வங்கிகள் ஆரம்பிக்கப்படவில்லை ஆனால் சமுர்த்தி சிறு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு 8 தொடக்கம் 12 குழுக்களை ஒன்றாக்கி சங்கங்கள் உருவாக்கப்பட்டது. இச்சங்கங்கள் தங்கள் சங்க கூட்டங்களை மாதத்தில் இரண்டு தடவை நடாத்தி வந்தன. இதன் பின்னரே 2000ம் ஆண்டில் சமுர்த்தி வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டது. இது யாவருக்கும் தெரிந்த விடயம் ஆனால் நான் இப்போது கூறப்போகும் விடயம் பலருக்கும் ஒரு ஆச்சரியமான விடயமாக அன்று காணப்பட்டது. எனது இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் பாரதி சமுர்த்தி சங்கம் தன் 200வது சமுர்த்தி சங்க கூட்டத்தை நடாத்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. இவர்களின் கூட்ட பதிவேட்டை இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலய முகாமையாளர் பரிசீலித்தே இதை உறுதிபடுத்தி இருந்தார். இதன் போது இக்கிராமத்தில் முன்பு கடமையாற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் P.புஸ்பராணி அவர்களும் பிரசன்னமாயிருந்தார். 14.05.2009 அன்று 200 பாரதி சங்க கூட்டம் தலைவி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வுக்க இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலய முகாமையாளர் S.குருபாரன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கிராமத்தில் மாதாந்தம் தவறாமல் இரண்டு சமுர்த்தி கூட்டங்கள் நடைபெறுகின்றது கூட்ட வருகையும் 30 தொடக்கம் 40 காட்டுகின்றது இதன் உண்மையை உத்தியோகத்தரிடம் கேட்ட போது சீட்டு போடுவதாக கூறியதுடன் வரவுக்கு ஆண்டிறுதியில் பரிசில்கள் என அறிவிக்கப்பட்டது தான் உண்மையான விடயம் என்றார். இதன் போது கட்டுப்பாட்டு சபை தலைவி லோ.ஜெயந்தி கூறும் போது இருதயபுரம் கிழக்கு கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் போல் சகரும் செயற்பட்டால் சமுர்த்தி சங்க கூட்டத்திற்கு வருகை அதிகரிக்கும் என்றார்.
இந்நிகழ்வுக்கு இருதயபுரம் கிழக்கு திரிஸ்டார் சங்க தலைவி இ.கண்ணகி, நியுடைமன் சங்க தலைவி யூடிட் ஸ்பெக், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்த கொண்டனர்.
சமுர்த்தி வங்கியில் சிரமதான பணி
Comments
Post a Comment