நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (27ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (27ம் தொடர்).......

2009 சித்திரை தொடங்கியது. தொடங்கினால் உத்தியோகத்தர்களுக்கும் திண்டாட்டம் தான். சேமிப்பு வாரத்தில் சேமிப்பது தொடர்பாக இவ்வருடமும் போட்டி நடைபெற்றது. அதிக சேமிப்பு செய்பவர்களுக்கு வங்கி மூலமும் பரிசில்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டது. நானும் கிரமம் ரீதியாக பரிசில்களை வழங்க ஏற்பாடுகளை செய்து இருந்தேன்.  இதன் அடிப்படையில் 14.04.2009 தொடக்கம் 18.04.2009 வரை சித்திரை புதுவருட சேமிப்பு இடம்பெற்றது. இதில் எனது கிராம சங்கங்கள் தங்கிடையே கடந்த வருடத்தை போன்று போட்டி போட்டுக் கொண்டு மொத்தமாக 158885 ரூபாக்களை சேமித்து இருந்தது. சங்க ரீதியாக திரிஸ்டார் சங்கம் 65500 ரூபாய் சேகரித்து முதலாமிடத்தையும், பாரதி சங்கம் 53485 ரூபாவை சேமித்த இரண்டாமிடத்தையும், நியுடைமன் சங்கம் 39900 ரூபாவை சேமித்த மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன. இவ்வாண்டில் இருதயபுரம் கிழக்கு கிராமம் 158885 ரூபாக்களை சேமித்து வலயமட்டத்தில் முதலிடத்தை பெற்று மகத்தான சாதனை படைத்தது. இரண்டாமிடத்தை கூழாவடி கிராமம் சார்பாக வி.அற்புதமலர் அவர்கள் அதிகூடிய சேமிப்பை செய்து வெற்றி பெற்றிருந்தனர்.

இதே சமயம் வன்னியில் இடம்பெயர்ந்து இருப்பவர்களுக்கு தங்கள் தங்கள் கிராமத்தில் இருந்து உலர் உணவுப் பொருட்களை சேகரித்த தரும்படி பிரதேச செயலகத்தால் கோரப்பட்டிருந்தது. இதற்கமைய எமது மக்கள் தங்கள் கிராமத்தில் வீடு வீடாக சென்று பொருட்களை சேகரித்து அதை பொதி செய்து பிரதேச செயலகத்திற்கு அனுப்பிவைத்தனர். தங்களிடம் வசதி இல்லாத போதிலும் தம்மால் முடிந்த இந்நத சேவையை அவர்கள் அர்பணிப்புடன் செயற்படத்தி இருந்தனர்.


24.04.2009
அன்று போதைவஸ்து தொடர்பான ஒரு கருத்தரங்கை எனது கிராமத்தில் நடாத்த தீர்மானித்தேன். இவ்வருட வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இதை செயற்படுத்தினேன். இதற்காக இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தை தெரிவு செய்து ஏற்பாடுகளையும்  செய்திருந்தேன். சமுர்த்தி வலய முகாமையாளர் S.குருபரன் தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர் இவ்வருடம் ஆன்மீக செயற்பாட்டை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவே இதை கருத்தில் கொண்டு இக்கிராமத்தில் போதைவஸ்து தொடர்பாக இக்கருத்தரங்கு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். இக்கருத்தரங்கிற்கு வளவாளராக திரு.சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டு போதைவஸ்தை தடுப்பதால் குடும்பங்கள் முன்னேற்றமடையும் எனும் கருப்பொருளில் விரிவுரையை மிகவும் சுவாரஸ்சியமாக நடாத்தினார். இதன் போது 40 கிராம அபிவிருத்தி அங்கத்தவர்களும் வலய சமுர்த்தி உதவியாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

27.04.2021 அன்று இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பாக ஒரு கலந்தரையாடலை இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி முகாமையாளர் S.குருபரன் அவர்கள் நடாத்தி இருந்தார். இக்கலந்துரையாடல் சமுர்த்தி பயனுகரி திருமதி.ஜெயமணி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் வறிய மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்துவோம் எனும் தலைப்பில் கலந்துரையாடப்பட்டது. இக்கால கட்டத்தில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களை இனங்காண்பதற்காகவும் இக்கலந்துரையாடல் உதவியது என்றே கூறலாம்.


28.04.2009
அன்று வருடந்தோறும் நடைபெறும் சித்திரை பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இவ்வருடமும் இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் நடாத்தவது என தீர்மானிக்கப்பட்டது. இதை யார் முன்னின்று நடாத்துவது என கேள்வி எழ இருதயபுரம் கிழக்கு கிராமத்தின் சனிமவுட் விளையாட்டுக் கழக இளைஞர்கள் முன்வந்து உழைத்ததற்காக நாம் இன்றும் அவர்களுக்கு நன்றி கடன் பட்டவர்களாக உள்ளோம். இருதயபுரம் கிழக்கு வலயத்திற்குட்பட்ட கிராமங்களில் இருந்து சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டு போட்டியில் பங்குபற்றினர். சாக்கோட்டம், தேங்காய் துருவுதல், முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் இடம்பெற்றன. இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி முகாமையாளர் S.குருபரன் தலைமையில் நடைபெற்ற இச்சித்திரை புதுவருட விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களும், சிறப்பு அதீதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் ரதிதேவி ஜெகன்நாதன் அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அவர்களும், அப்போதைய மாநகரசபை உறுப்பினருமான க.தவராசா அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர். இறுதியாக சமுர்த்தி தொடர்பான கேள்வி பதில் இடம்பெற்றது இதில் இருதயபுரம் கிழக்கு சார்பாக திருமதி.லீலா அவர்கள் வெற்றி பெற்றிருந்தார். இதை இருதயபுரம் கிழக்கு கிராமம் சார்பாக நடாத்த வேண்டும் என என் தலைமேல் போடப்பட்ட பாரமாகும் இதன் பின் ஒரு போதும் நான் கடமையாற்றிய கிராமத்தில் இச்சித்திரை விளையாட்டு போட்டிகளை நடாத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

தொடரும்......

                  (2009 சமுர்த்தி சித்திரை புதுவருட விளையாட்டு விழா)

                      (2009 சமுர்த்தி சித்திரை புதுவருட விளையாட்டு விழா)
                     (2009 சமுர்த்தி சித்திரை புதுவருட விளையாட்டு விழா)
(2009 சமுர்த்தி சித்திரை புதுவருட விளையாட்டு விழாவில் தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் பரிசில்களை வழங்கி வைக்கின்றார்)
(2009 சமுர்த்தி சித்திரை புதுவருட விளையாட்டு விழாவில்  சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயகுமார் பரிசில்களை வழங்கி வைக்கின்றார்)
(2009 சமுர்த்தி சித்திரை புதுவருட விளையாட்டு விழாவில்  சமுர்த்தி உத்தியோகத்தர் அற்புதமலர் பரிசில்களை வழங்கி வைக்கின்றார்)
(2009 சமுர்த்தி சித்திரை புதுவருட விளையாட்டு விழாவில்  இருதயபுரம் கிழக்கு கட்டுப்பாட்டு சபை தலைவி லோ.ஜெயந்தி பரிசில்களை வழங்கி வைக்கின்றார்)
(2009 சமுர்த்தி சித்திரை புதுவருட விளையாட்டு விழாவில்  முகாமையாளர் S.குருபரன் பரிசில்களை வழங்கி வைக்கின்றார்)
(2009 சமுர்த்தி சித்திரை புதுவருட விளையாட்டு விழாவில் சனிமவுட் விளையாட்டு கழக உறுப்பினர் பரிசில்களை வழங்கி வைக்கின்றார்)
(2009 சமுர்த்தி சித்திரை புதுவருட விளையாட்டு விழாவில் மாநகரசபை உறுப்பினர் க.தவராஜா  பரிசில்களை வழங்கி வைக்கின்றார்)
                    போதைவஸ்து தொடர்பான கலந்துரையாடலின் போது
                              போதைவஸ்து தொடர்பான கலந்துரையாடலின் போது

வறிய மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்துவோம் கலந்துரையாடலின் போது

Comments