நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (26ம் தொடர்).......
இன்னுமொரு விடயத்தை நான் கூற மறந்தே விட்டேன் காலம் செல்லச் செல்ல பிரதேச செயலகங்களில் நாமும் ஒருவரானோம். சமுர்த்தி நியமனம் கிடைத்ததன் பிற்பாடு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கூடுதலான ஆளனியைக் கொண்ட ஒரு பிரிவாக சமுர்த்தி பிரிவு காணப்பட்டது. இக்கால கட்டத்தில் புதிய பிரதேச செயலாளராக கடமையை ஏற்றிருந்த கலாமதி பத்மராஜா அம்மணி அவர்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிர்வாக கட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என கூறினார். மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கூடிய உத்தியோகத்தர்களை கொண்ட அவர்களுக்கும் உரிய இடம் வழங்க வேண்டும் பணிப்புரை வழங்கினார். இதன் அடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அக்கால கட்டத்தில் பொருளாளராக புளியந்தீவு சமுர்த்தி முகாமையாளர் S.இராசலிங்கம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டது சமுர்த்தி பிரிவுக்கே பெருமையான விடயமாக இருந்தது. இத்தருனத்தில் நாங்கள் இன்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக அன்று கடமையாற்றிய கலாமதி பத்மராஜா அம்மணி அவர்களுக்கு இன்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இதன் போது எனக்கும் நிர்வாகத்தில் செயற்பட வாய்ப்பு கிட்டியது எங்களுடன் அக்காலத்தில் கிராம உத்தியோகத்தர்களான திரு.தில்லைநாதன் மற்றும் திரு.புண்ணியமூர்த்தி ஆகியோர் மிகவும் நேசமாகவும் பாசமாகவும் இந்நலன்புரிச்சங்கத்தை கொண்டு நடாத்த உதவினர் இதன் போது நாங்கள் நடாத்திய ஒளிவிழா, சரஸ்வதி பூசை நிகழ்வு, இரத்ததான நிகழ்வு, ஒன்று கூடல் நிகழ்வுகளை என்றுமே மறக்க முடியாது. அதன் நகைச்சுவைகளும் கேளிக்கைகளும் இன்றும் எம் கண் முன்னே நிற்கின்றது எனக்கு பிரதேச செயலகத்தில் இன்னும் நன்மதிப்பை இவ் இறுதி ஒன்று கூடலில் நிகழ்ச்சிகளை நடாத்தியதால் பெருகிக் கொண்டே சென்றது.
2009ம் ஆண்டு தொடங்குகின்றது என் வாழ்வில் பல துன்பங்களையும் இன்பங்களையும் பல மாற்றங்களையும் தந்த ஆண்டாக இது அமையவுள்ளது. அது மாத்திரமன்றி மட்டக்களப்பு மாவட்டத்திலும் சமுர்த்தியில் பல மாற்றங்களை கொண்டு வந்த ஒரு ஆண்டாக இது அமையவுள்ளது. தவறாமல் கட்டுரையை படித்தால் பல விடயங்கள் தெரியும் மற்றும் புரியும். இது மாத்திரமின்றி நீங்களும் உங்கள் தகவல்களை எமக்கு தெரிவித்தால் நாம் அதை வெளியிடுவதற்கு தயங்க மாட்டோம். காலம் கடந்தாலும் இணைப்பாக வெளியிடுவோம்.
2009ம் வருடம் ஆரம்பமானது புதிய நியமனமாக இரண்டாம் தடவை எனக்கு கிடைத்த நியமனத்திற்கான முதலாவது தடை தாண்டல் பரீட்சையை கல்லடி புதுமுகத்துவாரம் விபுலானந்தா பாடசாலையில் எழுதி இருந்தேன். என்னுடன் இணைந்து பழைய புதிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தடை தாண்டல் பரீட்சையை எதிர்நோக்கி இருந்தனர்.
2009ம் ஆண்டில் மிக முக்கியமாக் ஆன்மீக வேலைத்திட்டம் மற்றும் போதைபொருள் தடுப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது இதற்கமைய நாம் கிராமம் தோறும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்நகர்த்துவதற்கு செயற்பட்டோம். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுத்தல், குடும்பங்களில் எவ்வாறு குடும்ப தலைவர் தலைவி பொறுப்பாளர்களாக செயபடுதல் பற்றி கருத்தரங்கு நடாத்ததல், கிராமத்தில் சிரமதான பணிகள், ஆன்மீக தியான செயற்பாட்டில் மக்களை ஈடுபட வைத்தல், தழிழ் கலாசார விழுமியங்கள் தொடர்பான உரைகள் நடாத்ததல், சிறுவர் துஸ்பிரயோகம் பற்றிய கருத்தரங்கு நடாத்துதல், புகைத்தல் தொடர்பான விழிப்புனர்வு செயற்பாடுகள நடாத்துதல், சட்டவிரோத மதுபான விற்பனையை தடுத்தல், 18 வயதிற்குட்பட்டோருக்கு சிகரட் விற்பனையை தடுத்தல் போன்ற செயற்பாடகளை முன்னெடுக்க சமுர்த்தி சங்கங்கள் மூலம் நடாத்த திட்டமிட்டோம். இதற்கமைய
2009 மார்ச் மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி பற்றிய விழிப்புனர்வை மக்கள் மத்தியில் மேலும் ஏற்படுத்துவதற்காக பிரதேச செயலகம் ரீதியாக சமுர்த்தி தொடர்பான ஒரு வினா விடை போட்டியை இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயம் சார்பாக நடாத்த தீர்மானித்தோம். ஆனால் பல கிராம பிரிவுகள் இதில் கலந்து கொள்வதில் பின் நிற்க நாங்கள் எங்கள் வலயததில் இருக்கும் சங்கங்களிடையே இப் போட்டியை ஏற்பாடு செய்தோம் 2009 மார்ச் மாதத்தில் ஒரு நாளில் இப்போட்டிகளை நடாத்தி முடித்தோம். இச்சுற்றுப்போட்டிகளுக்கு இருதயபுரம் கிழக்கு, அமிர்தகழி, பெரிய உப்போடை, வெட்டுக்காடு, பாரதிபுரம், மாமாங்கம், கூழாவடி கிழக்கு ஆகிய கிராமங்களில் இருந்து சமுர்த்தி சங்கங்கள் கலந்து கொண்டன. இருதயபுரம் கிழக்கு வலய சமுர்த்தி முகாமையாளர் S.குருபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வினாவிடை போட்டியில் இறுதிப்போட்டிக்கு இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி சங்கமும் பெரிய உப்போடை சமுர்த்தி சங்கமம் போட்டியிட்டு இருதயபுரம் கிழக்கு திரிஸ்டார் சமுர்த்தி சங்கம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் மூலம் சமுர்த்தி சங்கங்களுக்கு சமுர்த்தி பற்றிய விடயங்களை அறியக் கூடியதாக இருந்தது.
இதன் போது சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான கணணி பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. எல்லோரும் தங்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டளர். இனி வரும் காலம் கணணி மயமாக்கப்படவுள்ளதால் இது நமக்கு தேவைப்பாடு அதிகமாக இருப்பதால் இதில் கலந்த கொள்ள ஆர்வப்பட்டனர். சிலருக்கு வராமலும் பலருக்கும் இரண்டு கட்டமாக நடைபெற அழைக்கப்பட்டிருந்தது. இதன் போது பல பிரதேச செயலகங்களில் இருந்தும் எமது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் 27.03.2009 தொடக்கம் 02.04.2009 வரை இப்பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. இறுதி நாள் அன்று மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். இந்த பயிற்சி நெறி தற்போது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள நன்றி சமுர்த்தி.
தொடரும்......
Comments
Post a Comment