நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (25ம் தொடர்).......
இப்படியாக 2008ம் ஆண்டு இறுதி கட்டத்திற்கு வந்தோம் நான் ஏற்கெனவே கூறியது போல் ஆண்டிறுதி நிகழ்வை நடாத்த தீர்மானித்தோம். ஒளிவிழாவும் கௌரவிப்பும் எனும் தலைப்பில் அதை ஒழுங்கு செய்தோம். மூன்று சங்கங்களும் சிறப்பான ஒத்துழைப்பை தந்தன இதன் போது 2008ம் ஆண்டின் சிறந்த முதியோர் என நாம் நல்லதம்பி ஜானகி அம்மாவை கௌரவித்தோம். இவர் தவறாமல் சிறு குழு கூட்டங்களுக்கு வருகை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடமாகும். அத்துடன் 5ம் ஆண்டு புலமை பரீட்சையில் அப்போது 115 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த செல்வன் மாதவன்பிள்ளை இருதயராஜா அவர்களை கௌரவித்து பாராட்டி இருந்தோம். இது மாத்திரமின்றி 2007ம் ஆண்டு க.பொ.த(சாதாரணதரத்தில்) சித்தியடைந்து 2008ல் உயர் தரத்திற்கு சென்ற மாணாக்கர்களை பாராட்டி கௌரவித்தோம்.
இதை தவிர இருதயபுரம் கிழக்கு வலயத்திற்கு உட்பட்ட சகல கிராமத்திலும் இருந்து 2009ல் புதிதாக தரம் ஒன்றில் இணையவுள்ள மாணவர்களை ஊக்குவிக்க பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்தோம். மற்றும் 2008ம் ஆண்டு சிறப்பாக செயற்பட்ட சங்க தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இத்துடன் அவ்வருடத்தின் மிகச் சிறந்த சங்கமும் கௌரவிக்கப்பட்டது. அது எந்த சங்கம் என எனக்கு தற்போது ஞாபகம் வரவில்லை அறிந்தால் பிற்காலத்தில் தெரிவிக்கின்றேன். இந்நிகழ்வுக்கு அப்போதிருந்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன் 10வது ஆண்டில் இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் சமுர்த்தி திட்டம் எனும் கைநூலையும் வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளரும் சமுர்த்தி உதவி ஆணையாளருமான P.குணரெட்னம் அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அவர்களும் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
2008 டிசம்பர் இறுதியில் சகல சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூட்டி ஒரு ஒன்று கூடலை நடாத்தினோம். அதில் அவர்களின் ஆடல் பாடல், விளையாட்டுக்கள் என மகிச்சியில் இருந்தனர் ஒரு வருட கடின உழைப்பால் களைப்படைந்தவர்களை மகிழ்ச்சியாக கொண்டாட இவ்வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவெல்லாம் நான் ஏன் கூறுகின்றேன் என்றால் சமுர்த்தி ஒன்றுமே செய்யவில்லை செய்யவில்லை என்று இன்று வரை எல்லோரும் கூறிவருகின்றனர் இதை வாசித்த பின்னராவது புரிந்து கொள்வதற்காகத்தான். இது வெறும் ஆரம்பமே தான்.
இது மாத்திமின்றி 2008ம் ஆண்டு புதிதாக கொண்டுவரப்பட்ட 3060 கிராமங்களை மேம்படுத்துவோம் எனும் வேலைத்திட்டம் மூலம் தொழில் முயற்சியை மேம்படுத்த தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது. அது மாத்திரமின்றி மரக்கண்றுகள் வழங்கப்பட்டதுடன், மரநடுகைகளும் மேற் கொள்ளப்பட்டன. மற்றும் இப்புதிய வேலைத்திட்டத்தின் கீழ் புதிய வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இவை தொடர்பாக பல கருத்தரங்குகள் பிரதேச மட்டம் மற்றும் மாவட்ட செயலகம் சார்பாக நடாத்தப்பட்டன.
இதனிடையே 2004ம் ஆண்டில் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரவெட்டி சமுர்த்தி வங்கிக்கான கட்டிடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது .இதற்கான பணியினை அப்போது அவ்வங்கியன் சமுர்த்தி முகாமையாளராக இருந்த பொ.உமாசங்கர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியந்தீவு சமுர்த்தி வங்கிக்கான புதிய கட்டிடமும் 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முதலில் 2000ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட புளியந்தீவு சமுர்த்தி வங்கியானது அப்போது ஒரு பழைய கட்டிடத்தை திருத்தியே செயற்பட்டு வந்தது. எனவே இதற்கான புதிய கட்டிடத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்திலேயே நிர்மானிக்க முடிவெடுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன இப்பணிகளை அப்போதிருந்த சமுர்த்தி முகாமையாளர் திருமதி.கலைச்செல்வி அவர்கள் மேற் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
2008ம் ஆண்டிலேயே இவ்வளவு வேலைத்திட்டம் என்றால் இனிவரும் காலத்தில் எப்படி இருக்கும் பார்ப்போம். நினைவில் அழியா பொக்கிசங்கள் யாரும் மறுக்கவும் முடியாத மறக்கவும்; முடியாது பதிவுகள் பதிவுகள் தான்..
தொடரும்........
(2008ம் ஆண்டின் வெளியிடப்பட்ட அழைப்பிதழ்)
(2008ம் ஆண்டின் வெளியிடப்பட்ட அழைப்பிதழ்)
Comments
Post a Comment