நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (24ம் தொடர்).......


 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (24ம் தொடர்).......

நேற்றையான் கேள்விக்கு நான் அவருக்கு கூறிய பதில் 2008 ஒக்டோபர் மாதமளவில் சமுர்த்தி நிவாரனத்தின் மூலம் வீட்டு லொட்டரியில் இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் க.ஜெயபவானி என்பவருக்கு லோட்டரி அதிஸ்டம் கிடைத்தது அவருக்கான வீட்டை திருத்துவதற்காக 150000 ரூபாய் அவரது வங்கி கணக்கில் பணம் வைப்புச் செய்யப்பட்டது. இவரது வீட்டின் நிலையை அப்போதைய சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதே போல்  சமுர்த்தி நிவாரணத்தின் மூலம் சிப்தொர புலமை பரிசில் மூலம் செல்வன் சில்வஸ்டர் டிலக்சன் என்பவருக்கு உயர்கல்வி கற்பதற்காக 24 மாதங்களுக்கு மாதாந்தம்; 500 ரூபாய் வழங்கப்படுவதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

 2008ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் இருதயபுரம் கிழக்கு கிராமத்தில்  சமூக பாதுகாப்பு காப்புறுதி  கொடுப்பணவு மூலம் 18 இறப்புக்களுக்கும், 34 பிறப்புக்களுக்கும், 36 திருமணங்களுக்கும், 45 மருத்துவத்திற்கும் கொடுப்பணவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதை தவிர 213 குழந்தை கிடைத்த தாய்மாருக்கு ஒரு வருடத்திற்கான பால்மா கொடுப்பணவு வழங்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் சமுர்த்தி திட்டத்தின் மூலமே வழங்கப்ட்டுள்ளது. இது ஒரு கிராமத்திற்கு வழங்கப்பட்டது.  ஒரு வலயத்தை பார்த்தால், இதுவே ஒரு பிரதேச செயலகமாக இருந்தால் சற்று சிந்தியுங்கள் மக்களே "சமுர்த்தி வளம் மிக்கதாக உள்ளது நாம் தான் பின் நோக்கி உள்ளோம்".

 இதில் ஒரு முக்கியமான விடயத்தை கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும் நீங்களும் தெரிந்த கொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும். சமுர்த்தி நிவாரணம் 2008ம் ஆண்டு காலப்பகுதில் 615, 415, 350, 250, 210 பெறுமதியான நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. இதில் 615, 415, 210 நிவாரணங்களை பெறும் குடும்பங்களின் சமுர்த்தி நிவாரணத்தில் இருந்து சமூக பாதுகாப்பு காப்புறுதிக்கென 45 ரூபா அறவிடப்பட்டன. இவ்வாறு மாதாந்தம் அறவிடப்படும் 45ரூபாவின் ஊடாக அக் குடும்பத்தில் ஏற்படும் இழப்புக்களுக்கும், சிறப்புகளுக்கும்  கொடுப்பணவுகள் வழங்கப்பட்டு வந்தன. இறப்பு ஏற்படும் பட்சத்தில் 10000 ரூபாவும், குழந்தை கிடைக்கும் பட்டசத்தில் முதல் குழந்தைக்கு 5000 ரூபாவும் இரண்டாம் குழந்தைக்கு 2500 ரூபாவும், திருமணம் நடைபெறும் பட்சத்தில் வாழ்நாளில் ஒரு தடவைக்கு 1000 ரூபாவும், குடும்ப தலைவன், தலைவி மாத்திரம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் ஒரு வருடத்தில் ஆக கூடுதலாக 30 நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் இக் குடும்பத்தில் க.பொ.த(சாதரண) பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவியர்களுக்கு உயர்தரம் கல்வி கற்க 24 மாதங்களுக்கும் 500 ரூபாய் படி வழங்கி வந்தது. இத்துடன் சமுர்த்தி நிவாரணம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து வீட்டு லொட்டரிக்கு 10 ரூபாவை 615, 415, 350, 250, 210 ரூபாய் சகல சமுர்த்தி முத்திரைகளுக்கும் அறவிடப்பட்டு மாதா மாதம் குலுக்கப்பட்டு வெற்றிபெறும் அதிஸ்டசாலிக்கு வீடு அமைத்துக் கொள்ள, காணி கொள்வணவிற்காக, வீட்டை திருத்தி அமைத்துக் கொள்ள 150000 ரூபாய் வழங்கப்பட்டும் வந்தன. இதில் முக்கியமாக ஒரு விடயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் 250 மற்றும் 350 ரூபாய் பெறுமதியான சமுர்த்தி முத்திரைகளுக்கு 45 காப்புறுதி அறவீடு அக்காலத்தில் அறவிடப்படவில்லை பிற்காலத்தில் அறவிடப்பட்டு அவர்களுக்கான இழப்பீடுகளும் வழங்கப்பட்டது. அதை பிற்காலத்தில் நாம் விரிவாக நோக்குவோம். இதில் நான் ஒரு விடயத்தை முக்கியமாகவும் ஆணித்தரமாகவும் குறிப்பிட்டே ஆக வேண்டும் இலங்கையில் உள்ள சகல காப்புறுதி நிறுவனங்களிலும் நாம் மாதா மாதம் தவறாமல் பணத்தை செலுத்தினால் மாத்திரமே காப்புறுதியை இழப்பீட்டை நாம் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சமுர்த்தி திட்டத்தில் மாத்திரமே அரசே காப்புறுதிக்கு மாதாந்தம்  பணம் செலுத்தி நிவாரணத்தையும் வழங்குகின்றது உண்மையில் அதிஸ்டத்தை அள்ளி வழங்கும் சமுர்த்தி திட்டம் என்று அன்றே கூறிவிட்டார்கள். இன்று வரை அவ்விழப்பீட்டை அதிகரித்து வழங்கி வருகின்றதே தவிர அதை நிறுத்த முயற்சிக்கவில்லை என்றும் அழியாதது என் சமுர்த்தி.

சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி திட்டம் மூலம் கிடைக்கும் வசதிகளோ ஏராளம் சமுர்த்தி முத்திரை பெறுவோர் மாத்திரமின்றி சிறு குழுக்களில் இனைந்து சமுர்த்தி வங்கியில் கணக்கினை பேணிவரும் சகருக்கும் சமுர்த்தி வங்கி ஊடாக சுயதொழிலை ஊக்குவிக்க கடன்கள் வழங்கப்பட்டும் வருகின்றன. 2008ம் ஆண்டு டிசம்பர் வரை இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் சாதாரண கடனான 5000 ரூபாய் கடன்கள் 35, 10000 ரூபாய் கடன்கள் 45, 15000 ரூபாய் கடன்கள் 17, 20000 ரூபாய் கடன்கள் 24, 25000 ரூபாய் கடன்கள் 37 என வழங்கப்படடு இருந்தது. ஜனபுபுதுவ எனும்  கடனாக 30000 தொடக்கம் 100000 வரையான 18 கடன்களும் வழங்கப்பட்டிருந்தன. 

சமுர்த்தி திட்டத்தில் சிறுவர்களின் திறமையை மேம்பாட்டிற்கென சிறுவர் வட்டம் ஒவ்வொரு கிராமங்களிலும் அமைக்கப்பட்டு அவர்களுக்காக வருடா வருடம் சிறுவர் போட்டிகள் நடாத்தப்பட்டு வந்தன. இதில் இருதயபுரம் கிழக்கு கிராம சிறுவர்கள் 2007ம் ஆண்டு சமுர்த்தி தழிழ் பிரிவின் சிறுவர் போட்டியில் கலந்து கொண்டு தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதற்காக அயராது உழைத்த திரிஸ்டார் சங்க தலைவி இ.கண்ணகி அவர்களை இத்தருனத்தில் பாராட்டியே ஆக வேண்டும். 

2008ல் இவ்வளவு வேலைத்திட்டமா? என கேட்போர் பலர். இன்னும் இருக்கு 2008க்கு .....

தொடரும்......



Comments