நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (23ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (23ம் தொடர்).......


சமுர்த்தி திட்டத்தில் ஓலை குடிசையில் வாழும் வறிய மக்களுக்கு கல் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் ஒரு திட்டமே திரியபியச வீட்டுத்திட்டம் ஆகும். இத்திட்டத்தில் ஒரு தொகை பணத்தை சமுர்த்தி அதிகார சபை வழங்கி உதவி செய்ய மிகுதி பணத்தை சமுர்த்தி பயனுகரியின் பங்களிப்புடன் இவ்வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் 2008ம் ஆண்டில் இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் இரண்டு திரியபியச வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. ரெட்ணகுமார் வள்ளிப்பிள்ளை மற்றும் கணகசபை சிவா ஆகியோருக்கே இவ்வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதில் முக்கிய விடயம் என்னவெனில் வருடா வருடம்  புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் சேகரிக்கப்படும் தொகையும் இவ்வீடுகள் அமைப்பதற்காக வழங்கப்படுகின்றன. சகல கிராமங்களிலும் தற்போதும் செயற்படும் ஒரு வேலைத்திட்டமாக இது காணப்படுகின்றது.

2008ல்
புகைத்தல் எதிர்ப்பு வாரம் மே-31ல் நடைபெற்றது. இவ்வாண்டில் நான் பெரிதாக இச்சேமிப்பை கருதவில்லை இருந்த போதிலும் 15000 ரூபாக்களை மாத்திரமே சேமித்து இருந்தேன் ஆனால் 2007ம் ஆண்டில் மாவட்ட மட்டத்தில் அதிகூடிய சேமிப்பை செய்து அகில இலங்கை ரீதியாக இரண்டாமிடத்தையும் பெற்று சாதனை பட்டியலில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் புளியந்தீவு சமுர்த்தி வலயத்திற்குட்பட்ட புதுநகர் கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் யூட் செல்வா இராஜரெட்னம் அவர்கள் சாதனை பட்டியலில் தம் பெயரை பதிவு செய்து கொண்டார். இப்புகைத்தல் எதிர்ப்பு வார சேமிப்பு பிற்காலத்தில் உத்தியோகத்தர்களிடையே பல மன வேதனையையும் போட்டியையும் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சமுர்த்தி திட்டம் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் மக்கள் பங்களிப்புடன் நடைபெற்று வந்தன அதில்  மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார மேம்பாட்டிற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து சென்றன. இதன் கீழ் இருதயபுரம் கிழக்கு கிராமத்தில்  2008ம் ஆண்டின் யூன், யூலை மாதங்களில் ரோய் எஸ்ரப் எனும் குடும்பத்தினருக்கு குடிநீர் வசதிக்காக  கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது. சுகாதாரத்தை மேம்படுத்துவோம் எனும் சிந்தனையில் இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் ரெட்ணகுமார் வள்ளிப்பிள்ளை எனும் குடும்பத்திற்கும், பாமட் அன்றாடோ எனும் குடும்பத்திற்கும் மலசல கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தற்போதும் வறிய மக்களுக்கு சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 30000 (முப்பதாயிரம்) மானியமாக வழங்கப்பட்டு மிகுதி பணத்தை மக்கள் பங்களிப்பாக செலுத்தி மலசல கூடங்கள் 2020ல் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. இதன் விபரத்தை இனி வரும் காலங்களில் போது விரிவாக பார்ப்போம்.

சமுர்த்தி திட்டத்தில் ஆன்மீக வேலைத்திட்டங்கள், சமூக நல வேலைத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் என நாம் பல்வேறு பட்ட வேலைத்திட்டங்களை சமுர்த்தி செயலணியின் ஊடாக செய்து வந்துள்ளோம். இதில் முக்கியமான ஒரு விடயத்தை நான் குறிப்பிட மறந்து விட்டேன் இக்கால கட்டத்தில் நான் சமுர்த்தியில் பணியாற்றவில்லை இருந்தும் இப்புகைப்படங்களை ஓரிடத்தில் இருந்து பெற்றதால் எழுதுகின்றேன். 2004ம் ஆண்டு இலங்கை சமுர்த்தி அதிகார சபையால் கிராமங்களுக்கு ஒரு  வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் படி அறிவுருத்தப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் - 2004 எனும் மகுட வாசகத்தின் கீழ் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது. விவசாய வீதிகள் அமைத்தல், மதகுகள் அமைத்தல், வடிகான்கள் அமைத்தல், திருத்துதல், மற்றும் கட்டிடங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கான இடத்தெரிவினை மேற்கொள்ளும் ஒரு ஆரம்ப புகைப்படத்தினையே நீங்கள் நேற்றைய தினம் எனது இணையதளத்தில் பார்த்திருப்பீர்கள் இன்னும் பல கிராமங்களின் ஆரம்ப கட்ட புகைப்படங்கள் என்னிடம் உள்ளன அவை அனைத்தும் தினமும் கதை கூறும் பகுதியில் நீங்கள் தினமும் பார்க்கலாம். உங்களிடம்  சமுர்த்தி தொடர்பான பழைய அரிய புகைப்படங்கள் இருந்தால் எனக்கு அனுப்பிவையுங்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்துடன். இனி நாம் 2008க்குள் செல்வோம்.

2008 ஆகஸ்ட் மாத்தில் ஒரு சமூக வேலைத்திட்டத்தை செய்ய தீர்மானித்தோம். சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்து விட்டது இதை முன்னிட்டு ஒரு இரத்ததான நிகழ்வை இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி சங்கங்கள் ஏற்பாடு செய்தது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உதவியுடன் இவ்ரெத்ததான நிகழ்வு ஒழுங்க செய்யப்பட்டிருந்தது இந்நிகழ்வுக்கு அப்போதிருந்த பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்கள் வருகை தந்து இரத்ததான கொடையாளிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இக்கால கட்டத்தில் எந்த ஒரு சமுர்த்தி சங்கங்களும் இவ்வாறான செயற்பாட்டை செய்ததாக நான் அறியப்படவில்லை இந்நிகழ்வில் 35  கொடையாளிகள் கலந்து கொண்டு  தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும் காலப்போக்கில் இதை நான் பல கிராமங்களில் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளேன். அதை பிற்காலத்தில் நோக்குவோம்.

சமுர்த்தி திட்டத்தின் மிக முக்கியமானதொரு செயற்பாடு தான் இந்த உட்கட்டமைப்பு விடயமாகும். இதன் அடிப்படையில் 2008 செப்டம்பர் மாதமளவில் சமுர்த்தி திட்டம் மூலம் இருதயபுரம் கிராமத்திற்கு மூன்று பாதைகள் கிரவல் இடப்பட்டு செப்பனிடப்பட்டிருந்தது. அவ்வாறு செப்பனிடப்பட்ட பாதைகள் 7ம் குறுக்கு, 8ம் குறுக்கு, குமாரத்தன் கோயில் 1ம் குறுக்கு என்பனவாகும். ஒருவருக்கு எனது கிராமத்தில் வீட்டு லோட்டரி குலுக்களில் அதிஸ்டம் கிடைத்து விட்டது அவருக்கு எவ்வளவு பணம் கொடுப்பாங்க என ஒருவர் என்னை தொல்லை படுத்தியே திரிந்தார் இவருக்கான பதிலை நான் நாளை தருகிறேன்.........

தொடரும்..........

(என்னால் 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட சமுர்த்தியின் 10வது ஆண்டின் நினைவு மலர்)
(என்னால் 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட சமுர்த்தியின் 10வது ஆண்டின் நினைவு மலர்)
(என்னால் 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட சமுர்த்தியின் 10வது ஆண்டின் நினைவு மலர்)
(என்னால் 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட சமுர்த்தியின் 10வது ஆண்டின் நினைவு மலர்)
(என்னால் 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட சமுர்த்தியின் 10வது ஆண்டின் நினைவு மலர்)
(என்னால் 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட சமுர்த்தியின் 10வது ஆண்டின் நினைவு மலர்)


Comments