நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (22ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (22ம் தொடர்).......

மாவட்ட செயலகத்தில் இருந்து வந்த செய்தியை அனைவரும் ஆவலுடன் கேட்க ஆசையாய் இருந்தோம் 2008 சேமிப்பு வாரத்தில்  அகில இலங்கை ரீதியாக முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி முதலாமிடத்தையும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மற்றுமொரு சமுர்த்தி வங்கியான புளியந்தீவு சமுர்த்தி வங்கி மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டதாக அந்த தகவல் நம்மை வந்தடைந்தது. இது மட்டக்களப்பை பொறுத்தவரை சமுர்த்தி வங்கிகளின் வரலாற்று சாதனையாகும். எனவே சாதனை பட்டியலில் இவ்விரு சமுர்த்தி வங்கிகளும் தங்கள் பெயரை  பதிவை பதிவு செய்து கொண்டன. இதில் முக்கிய விடயம் என்னவென்றால் அகில இலங்கை ரீதியாக பெரிய உப்போடை சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.தி.யுனிற்றா முதலாவது இடத்தை பெற்று வரலாற்று சான்றில் தம் பெயரையும் பதிவு செய்து கொண்டார். இதன் போது அகில இலங்கை ரீதியாக முதல் 10 இடங்களை  மண்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்பாக 05 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தம் பெயர்களை பதிவு செய்து கொண்டனர். எதுவுமே முதல் வெற்றி என்றால் அது ஒரு பதிவாகவும் வரலாறு காரணியாகவும் காணப்படும். இவ்வரலாற்று சான்று பற்றி தற்போதுள்ள பலருக்கு தெரியாது பலரும் மறந்துமே போயிருப்பர். நாம் சாதனை செய்யா விட்டாலும் எம் சார்ந்த உத்தியோகத்தாகள் செய்த சாதனையை என்றும் உலகம் முழுவதும் பறைசாற்றுவோம் நிச்சயம் நமக்கும் வெற்றி கிட்டும். வெற்றி பெற்றவர்களின் விபரம் வருமாறு.

1.முதலாமிடம் - தி.யுனிற்றா – பெரிய உப்போடை கிராம சேவகர் பிரிவு, இருதயபுரம் கிழக்கு வலயம்.

2.ஐந்தாமிடம் க.பெல்சியா – அமிர்தகழி கிராம சேவகர் பிரிவு, இருதயபுரம் கிழக்கு வலயம்.

3.ஆறாமிடம் - பா.ஜெயதாசன் - இருதயபுரம் கிழக்கு கிராம சேவகர் பிரிவு, இருதயபுரம் கிழக்கு வலயம்.

4.ஏழாமிடம் - இ.இதயமலர் -கூழாவடி கிழக்கு கிராம சேவகர் பிரிவு, இருதயபுரம் கிழக்கு வலயம்.

5.பத்தாமிடம் - யூட் செல்வா இராஜரெட்ணம் - புதுநகர் கிராம சேவகர் பிரிவு, புளியந்தீவு வலயம்.

 உண்மையில் இவ்விடயத்தை ஊக்குவித்த இருதயபுரம் கிழக்கு வங்கி முகாமையாளர் திரு.குருபரன் அவர்களுக்கும், புளியந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.இராசலிங்கம் அவர்களுக்கும், மண்முனை வடக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அவர்களுக்கும், மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளரும் சமுர்த்தி உதவி ஆணையாளருமான P.குணரெட்ணம் அவர்களுக்கும் இன்றும் நாம் எமது பாரட்டுக்களை கூற கடமைப்பட்டுள்ளோம். இது மட்டக்களப்பில் ஒரு சம்பவம் அல்ல இதுவும் மட்டக்களப்பில் சமுர்த்தியின் ஒரு வரலாறு சான்றே என்றே கூறலாம்.

இச்சந்தோச களிப்பில் 10ம் வருட பூர்த்தியை கொண்ட எண்ணி 2008.06.28ம் திகதி ஒரு நிகழ்வை நான் இருதயபுர கிழக்கு கிராமத்தில் நடாத்த தீர்மானித்தேன். சங்கங்கள் ஒழுங்கமைக்க இந்நிகழ்வு இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் ஆரம்பமானது. இதன் போது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய தலைமையக முகாமையாளர், மற்றும் நான்கு வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும் சித்திரை புது வருட சேமிப்பில் அதிக சேமிப்பு செய்த உத்தியோகத்தர்கள் மற்றும் எனது கிராம சமுர்த்தி சங்க தலைவர்கள் அனைவரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 (2008ல் என்னால் வெளியிடப்பட்ட சமுர்த்தியின் 10 வருட கால புத்தகத்தில் இருந்து)
2008ம் ஆண்டு காலப்பகுதியில் சமுர்த்தி திட்டம் ஊடாக மேம்பட்டவர்களை தாமாக முன் வந்து தங்களுடை சமுர்த்தி நிவாரணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை கருத்தாக கொண்டு நான் சமுர்த்தி பயனுகரிகளிடம் நீங்கள் சமுர்த்தி முத்திரையை தாமாக முன் வந்து ஒப்படைக்கும் பட்சத்தில்  சமுர்த்தி பயனுகரியாகத்தான் நீங்கள் இருப்பீர்கள் சமுர்த்தி வங்கியில் கடன் பெற முடியும், சிறு குழுவில் இயங்க முடியும் இதை கருத்தில் கொண்டு  தங்களின் சமுர்த்தி நிவாரணத்தை தாங்களாகவே ஒப்படைப்பதை வீட்டில் உள்ளவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறு கூறினேன். இதற்கமைய இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் 04 சமுர்த்தி பயனுகரிகள் தாமாக முன் வந்து தமது சமுர்த்தி முத்திரையை இருதயபுரம் கிழக்கு கிராமம் சார்பாக ஒப்படைக்க முன் வந்தனர். இந்நிகழ்வு மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளரும் சமுர்த்தி உதவி ஆணையாளருமான P.குணரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அப்போதைய மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் அவர்களும், அப்போதைய மாகானசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் போது இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் தாமாக வந்து சமுர்த்தி முத்திரையை ஒப்படைத்தவர்கள் திருமதி.இ.கண்ணகி, திருமதி.சு.ரசிகலா, திருமதி.சி.ஜெயமணி, திருமதி.ஜீ.அரியமலர் ஆகியோர் ஆவார்கள் இதுவும் ஒரு சம்பவம் அல்ல சரித்திரம் என்றுமே அழியாத காலச்சுவடு. இப்போதுள்ளவர்கள் யார் முன் வந்து தம் சமுர்த்தி நிவாரனத்தை ஒப்படைப்பார்கள் 1997ம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிவாரணம் பெறுகின்றார் அவர்களுக்கு இது ஒரு சாட்டையடி பதிவாகும். 2008ம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 67 சமுர்த்தி பயனுகரிகள் தம் சமுர்த்தி நிவாரனத்தை தாமாக முன்வந்து ஒப்படைத்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தொடரும்.....

Comments