நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (21ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (21ம் தொடர்).......

2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சித்திரை புத்தான்டு சேமிப்பு வாரத்தில் 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயம் சார்பாக பெரியஉப்போடை சமுர்த்தி உத்தியோகத்தர் ஜெயயுனிற்றா முதலாமிடத்தை பெற்றிருந்தார். அவரை இம்முறை வெற்றி கொள்ளவே பலரும் முயற்சித்துக் கொண்டிருக்க நானும் முயற்சி செய்தேன்.

வலய முகாமையாளர் எழுந்து நின்று உரையாடத் தொடங்கினார் அனைவரது மனதிலும் பயம் ஊசலாலட முகாமையாளரை கண் வெட்டாமல் அவர் முகத்தை பார்க்க எல்லோரிடமும் பதட்டமும் அதிகரிக்க அவர் கூறத் தொடங்கினார். இந்த வருடம் அதிக சேமிப்பை செய்து முதலாமிடத்தை மீண்டும் ஜெயயுனிற்றா அவர்கள் பெற்றுள்ளார் இது ஒரு ஹட்றிக் சாதனையாகும் எனவும் அவர் கூறியனார். என் முகம் வாட்டம் காண ஆரம்பித்தது, பரவாயில்லை இரண்டாமிடத்தை பார்ப்போம் என எண்ணி இருந்தேன். மீண்டும் ஒரு அதிர்ச்சியான செய்தியை அவர் வெளியிட்டார் இரண்டாமிடம் அமிர்தகழி கிராமத்தின் சார்பில் பெல்சியா அவர்கள் பெற்றுள்ளதாக தெரிவித்தார். நான் சேமிக்க போட்ட திட்டம் எல்லாம் பிழையானதை எண்ணி வேதனையடைந்தேன் மனதை தேற்றியவனாக மூன்றாமிடத்தை என் மனம் வட்டமிடத் தொடங்கியது அற்புதமலர் இருக்கிறார்,  இதயமலர் இருக்கிறார், புஸ்பராணி இருக்கிறார் இதற்குள் நமக்கு மூன்றாமிடமா? மனம் தானே ஆசைப்படுவதில் என்ன பிழை இது இல்லாட்டி அது தானே. இன்னும் என்ன கூறப்போகிறார் என எண்ணியவனாக வேறு திசையில் என் முகத்தை வைத்தவனாக இருந்தேன். அப்போது இம்முறை மூன்றாவது இடத்தினை இருதயபுரம் கிழக்கு கிராத்தின் ஜெயதாசன் அவர்கள் பெற்றுள்ளதாக அறிவித்தார். மனதில் ஒருபுறம் சந்தோசம் ஒரு புறம் வேதனை தான் என்னை நானே தேற்றியவனாக பார்ப்போம் அடுத்த வருடம் என என் மனதில் ஆதங்கம் வந்தது. இந்த சேமிப்பு தான் 2020 வரை உத்தியோகத்தர்கள் மத்தியில் ஒரு போட்டியாகவும் இருந்தது. மற்றைய உத்தியோகத்தர்களின் இடங்களையும் அறிவித்தார். அன்றைய பரபரப்பு அன்றுடன் முடிவுற பிரதேச செயலக மட்டத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

 அன்று பிரதேச செயலகத்தில் நான்கு வலய முகாமையாளர்களும் மிகவும் பரபரப்பாக இருந்தனர். இன்று முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அறிவித்திருந்தார். தலைமையக முகாமையாளர் அவர்கள் தலைமையில் கூடிய வாராந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர் முன்னிலையில் முதலிடம் அறிவிக்கப்பட்டது. 2008ம் ஆண்டில் அதிக சேமிப்பு செய்த  சமுர்த்தி வங்கியாக இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி முதலிடத்தையும், புளியந்தீவு சமுர்த்தி வங்கி இரண்டாமிடத்தையும், கல்லடி சமுர்த்தி வஙற்கி மூன்றாமிடத்தையும், இருதயபுரம் சமுர்த்தி வங்கி நான்காமிடத்தையும் பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. குருபரன் முகாமையாளரை அனைவரும் பாராட்ட அடுத்த பரபரப்பு உத்தியோகத்தர்கள் மத்தியில் ஏற்பட்டது யார் அதிக சேமிப்பு செய்த உத்தியோகத்தர் என்று.

  மீண்டும் உரையாற்றத் தொடங்கிய தலைமையக முகாமையாளர் பிரதேச செயலக பிரிவில் முதலாவது இடத்தை பெரிய உப்போடை கிராமம் சார்பாக ஜெயயுனிற்றா அவர்களும், இரண்டாமிடத்தை அமிர்தகழி கிராமத்தை சேர்ந்த திருமதி.க.பெல்சியா அவர்களும், மூன்றாவது இடத்தை இருதயபுரம் கிழக்கு சார்பாக ஜெயதாசன் அவர்களும், நான்காவது இடத்தினை கூழாவடி கிழக்கு சார்பாக இதயமலர் அவர்களும் ஐந்தாவது இடத்தினை புதூர் கிராமம் சார்பாக யூட் செல்வா இராஜரெட்ணம் அவர்கனும் பெற்றதாக அறிவித்தார். மற்றைய உத்தியோகத்தர்களின் விபரங்களும் அறிவிக்கப்பட்டது.                       பிரதேச செயலகம் முடிந்து விட்டது இனி மாவட்ட மட்டத்தில் பெறுபேறுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். அப்போதிருந்த மாவட்ட பிரதி சமுர்த்திப்பணிப்பாளரும்  மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளருமான P.குணரெட்னம் அவர்கள் மாவட்ட ரீதியாக வெற்றி பெற்றோரை அறிவிருத்திருந்தார். அன்று குருபரன் முகாமையாளர் கண்ட கனவு நனவாக நடாந்தது ஆம் அவர் கூறியது போல் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டோம். அதிலும் முதல் நான்கு இடங்களையும் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலய உத்தியோகத்தர்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும் இனி என்ன அகில இலங்கை ரீதியாக அறிவிப்பதை எதிர்பார்த்துக் காத்தக் கொண்டிருந்தோம்.

இதில் பல வாத விவாதங்கள் எம்மிடையே வந்தன எமக்கு எப்படி முதலிடம் கிடைக்கும் என நான் கேட்டேன். தென் பகுதிகளில் சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல வருடம் ஆகிற்றே அவர்களுக்குத்தான் முதல் இடம் கிடைக்கும் நமக்கொரு 10ம் 15ம் இடம் கிடைக்கும் போல என குருபரன் முகாமையாளர் தெரிவித்தார். பத்துக்குள் வந்தால் நல்லம் என நான் கூறினேன். ன்று காலையில் மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது..........

தொடரும்......



Comments