நானும் என் சமுர்த்தியும் (16ம் தொடர்)..........

 நானும் என் சமுர்த்தியும் (16ம் தொடர்)..........

இப்படியே 2000ம் ஆண்டின் முடிவுக்குள் சென்று கொண்டிருந்தோம் இக்காலத்தில் எனது மகளின் முதலாவது பிறந்த நாளும் வந்தது நானும் என் சக சமுர்த்தி உத்தியோகத்தர்களை வீட்டிற்கு அழைத்து விருந்தோம்பல் நடாத்தினேன் இவ்வாண்டும் மிகவும் சந்தோசமாக கடந்த போனது.

2001ம் ஆண்டு ஆரம்பமானது வருட பிறப்பு பணிகளில் மிக ஆர்வமாக செயற்பட்டோம். கடன் வழங்கும் வேலை ஆரம்பிக்கப்படவில்லை ஆனால் முதல் கடனான 5000 ரூபாய் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நான் சமுர்த்தி வங்கியில் களத்தில் இருந்து வரும் குழு சேமிப்பை மாத்திரமே பெற்றுக் கொள்வதே எனது பணியாக காணப்பட்டது. காலத்தின் ஓட்டம் வேகமாக இருந்தது எனக்கு சில சில பிரச்சனைகள் என்னை நோக்கி வந்தன.

நாம் ஒன்றை நினைத்தால் இறைவன் ஒன்றை நினைப்பார் என்பதைப் போன்று என்னை சுற்றி பல சிக்கல்கள் மீண்டும் மீண்டும் உருவானது. காலத்தின் ஓட்டம் என்னால் இங்கு இருப்பதே பிரச்சனையாக தான் இருந்தது. அத்துடன் இப்பணியை தொடர முடியாத குடும்ப சூழ்நிலையும், பொருளாதார பிரச்சனையும் என்னை கலக்கமடையச் செய்தது. நான் முழுமையாக நேசித்த இந்த வேலையை விடுவதா? என வீட்டில் என் மனைவியுடன் இருந்து அழுதவனாக துடித்தேன். யாரிடமும் இதைப்பற்றி பேச மாட்டேன் வேலைக்கு சென்று மட்டும் வந்த கொண்டிருந்தேன். 

2000ம் ஆண்டின் 11ம் மாதத்தில் சற்றும் தளராது நான் வெளிநாடு செல்வதற்கான முடிவை எடுத்தேன். நான் பல இன்னல்களின் மத்தியில் உருவாக்கிய எனது வீடியோ கடையை முழுமையாக விற்று அப்பணத்தை கொடுத்து வெளிநாடு செல்ல தயாரானேன். மறுபடியும் என்னுள்ளே பல கேள்விகள் தந்தையார் ஏசுவார்! தாய் ஏசுவார்! உறவுகள் ஏசும்! என்ன செய்வது என்றே தெரியவில்லை. சரி போவோம் என முடிவெடுத்து 2001.11.08 அன்று இங்கிருந்து கொழும்பு புறப்பட்டு 2001.11.10ம் திகதி சவுதி அரேபியாவை சென்றடைந்தேன். அங்கு போயும் சரியான ஒரு வேலை கிடைக்கவில்லை, இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் சமுர்த்தியில் கிடைத்த சம்பளம்  காணாத என்று சவுதிக்கு வந்தாலும் அங்கும் ஆறாயிரம் ரூபாய் சம்பளம் தான் உனக்கு இது தேவை என்று என்னை நானே திட்டித்தீர்த்தேன், என்ன கொடுமை என்று தத்தளித்து திரிந்தேன். காலம் செல்ல செல்ல ஒரு நல்ல கடையில் வேலை கிடைத்தது  நல்ல சம்பளம் எனது பிரச்சனை அனைத்தையும் முடித்துக் கொண்டு  தொழில் செய்ய தேவையான பணத்தையும் தேடிக் கொண்டு இரண்டு வருடங்கள் முடிந்தவுடன் நான் 2004.03.25ம் திகதி இலங்கைக்கு திரும்பினேன். 

இத்துடன் எனது முதலாவது பாகத்தை முடித்துக் கொள்கின்றேன். இவ்வளவு காலமும் நான் எழுதியவற்றை ஆவலுடனும், ஆர்வத்துடனும் பார்வையிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். மற்றும் என்னை எழுதத்தூண்டிய என் நண்பர்கள் என்னுடன் பணியாற்றி சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தியில் உள்ள சக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

என்றும் அன்புடன்

பா.ஜெயதாசன்

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்

மாவட்ட செயலகம், மட்டக்களப்பு.

மீண்டும் தொடர வேண்டுமா?........


சுதர்சின்(SDO),தமயந்தி(SM),ரதினி(SDO),மேசிகவதனி(SDO)

வசந்தன்(SDO),ரவீந்திரகுமார்(SDO),சிவகுமார்(SDO),சிவபாதசேகரம்(SM), முகுந்தன்(SDO),பிரபா(SDO)
சுபா(SDO),சந்திரவதனி(SDO),எமலின்(SDO),ரங்கநாயகி(SDO),யுனிற்றா(SDO)

விஜிதா(SDO),குமுதினி(SDO),சந்திரவதனி(SDO),சாருலதா(SDO), மெக்கலின்(SDO), சந்திரகலா(SDO)


யூட்(SDO),ரமேஸ்குமார்(SDO,இளங்கோ(SDO),சுவாம்பிள்ளை(SDO), லோகேந்திரன்(SDO),சுகுமார்(SDO).

Comments