நானும் என் சமுர்த்தியும் (15ம் தொடர்)..........
சமுர்த்தி வங்கிக்கான பயிற்சியை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அனைத்து வங்கிகளும் பெற்று வந்து விட்டன. வங்கிகளுக்கான நிதியும் விடுவிக்கப்பட்டிருந்தது. முதல் சமுர்த்தி வங்கியாக புளியந்தீவு சமுர்த்தி வங்கியை திறக்கலாம் எனவும் அதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு கூறப்பட்டது.
மாவட்ட செயலகமும் மட்டக்களப்பில் முதல் வங்கியை திறப்பதற்கான முழுப்பணியையும் செய்யத் தொடங்கியது. அதற்கேற்றால் போல் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவும் புளியந்தீவு வலயத்துடன் இனைந்து சமுர்த்தி வங்கியை திறப்பதற்கான அனைத்து பணிகளையும் முன்னெடுத்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் சமுர்த்தி வங்கியாக புளியந்தீவு சமுர்த்தி வங்கி மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் K.கதிர்காமநாதன் ஐயா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்விற்கு அப்போதை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணயாளர் இரா.நெடுஞ்செழியன் கலந்து கொண்டிருந்தார். வாடிக்கையாளர்களுக்கான முதல் கணக்கு புளியந்தீவு கிழக்கு சமுர்த்தி பயனுகரிக்கு ஆரம்பிக்கப்பட்டு வங்கி நடவடிக்கை தொடக்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் சமுர்த்தி வங்கி முகாமையாளராக தமயந்தி அவர்களும், முதல் சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளராக ரமேஸ்குமார் அவர்களும், முதல் சமுர்த்தி வங்கி காசாளராக ஜெயதாசன் அவர்களும், முதல் சமுர்த்தி வங்கி கடன் லிகிதராக மிருனாளினி அவர்களும், முதல் சமுர்த்தி வங்கி லிகிதராக யுனைதீன் அவர்களும், முதல் சமுர்த்தி வங்கி புத்தக காப்பாளராக எமலின் அவர்களும் பொறுப்பை ஏற்று வரலாற்று சான்றில் தங்கள் பெயர்களை பதிந்து கொண்டனர், நானும் பெருமை பட்டு கொண்டேன். பயிற்சிநெறியில் குறிப்பிட்டது போன்று முதலில் பங்கு, அங்கத்தவர் கணக்குகளை ஆரம்பித்தோம். அது வரை காலமும் களத்தில் சேமிக்கப்பட்டிருந்த குழுப்பணங்களை கொண்டு குழு கணக்குகளை ஆரம்பிக்க குழுவில் உள்ள அங்கத்தவர்களை வங்கிக்கு அழைத்து குழுக்கணக்குகளை ஆரம்பித்தோம்.
இதற்கிடையில் முதலாவது தடை தான்டல் பரீட்சையும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் சிறு கண்னோட்டத்தை விட்டுக் கொண்டு எமது பணிகளை முன்னெடுத்துச் சென்றோம். காலப்போக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இடங்களிலும் சமுர்த்தி வங்கிகள் ஆரம்பிக்க வேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டாலும் யுத்த சூழ்நிலை காரணமாக சற்று தாமதித்தே அப்பணிகள் நடைபெற்று வந்தன. காலையில் கடமைக்கு வந்து மதியம் சாப்பாட்டிற்கு சென்று பிற்பகல் 4.30 மணிக்கு வீடு செல்வது மிகவும் கஸ்டமான ஒரு விடயமாக எனக்கு காணப்பட்டது. இதனால் எனக்கு பல முறை எச்சரிக்கையும் கிடைத்தது என்ன செய்வது பழக்கப்படவில்லை தானே பழகிக்கொள்வோம் என நாட்கள் நகர்தன. சரியாக ஞாபகம் இல்லை முதலாவது தடை தாண்டல் பரீட்சை மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற உள்ளதாக கடிதம் வந்தது என்ன கஸ்டமடா எழுதத்தான் வேணும் என்று எண்ணினேன். ஒரு சனிக்கிழமை என நினைக்கின்றேன் பரீட்சை நடைபெற்றது தெரிந்தது தெரியாதது எல்லாவற்றிக்கும் எழுதி விட்டு வந்தேன்.
பிரதேச செயலகத்தில் சமுர்த்தி பிரிவில் பணியாற்றுவதற்கு எம்மில் இருந்து சிலரை தெரிவு செய்து பணிக்கு அமர்த்தினர். காலப்போக்கில் ஒரு கிராமத்திற்கு ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர் எனும் நிலை வந்தது. ஏன் என்றால் வங்கி நடவடிக்கைகளை பிரதேச செயலக மட்டத்தில் செயற்படுத்துவதற்காக சமுர்த்தி மகா சங்கம் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் அமைக்கும்படி கூறப்பட்டதால் இவ் ஆளனி மாற்றத்தை கண்டது.
2000.09.01 எனக்கு ஒரு கடிதம் வழங்கப்பட்டிருந்தது அதில் எனது வருடாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பாக குறிக்கப்பட்டிருந்தது. இதன் படி எனது சம்பளம் 5160/= ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கால கட்டத்தில் இருதயபுரம் சமுர்த்தி வங்கியானது 24.11.2000ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி; 05.12.2000ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 18.12.2000ம் ஆண்டு கல்லடி சமுர்த்தி வங்கி திறந்து வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செலகத்தில் நான்கு சமுர்த்தி வங்கிகளும் 2000ம் ஆண்டில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டு தம் பணிகளை செய்யத் தொடங்கின.
இவ் வங்கி திறப்பு விடயம் ஒரு சம்பவம் அல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தின் வரலாற்று சான்றாகும் இதற்காக அக்காலத்தில் அயராது உழைத்த மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் இரா.நெடுஞ்செழியன் அவர்கட்கும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் K.கதிர்காமநாதன் அவர்கட்கும், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அவர்கட்கும், புளியந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் தமயந்தி அவர்கட்கும், கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் பத்மா ஜெயராஜா அவர்கட்கும், இருதயபுரம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.ரவிச்சந்திரன அவர்கட்கும், இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் கீதா கணகசிங்கம் மற்றும் அக்காலத்தில் அயராது உழைத்த அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இன்று எமது மனமார்ந்;த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாளை மிகவும் சோக நிகழ்வுடன் இத் தொடர் செல்லவுள்ளது.......
தொடரும்......
Comments
Post a Comment