நானும் சமுர்த்தியும் ………..

நான் எழுதிவரும் நானும் என் சமுர்த்தியும் தொடரின்  முதல் பகுதியை சுரேஸ் வாசித்தவுடன் என்னை தொடர்பு கொண்டு நானும் சமுர்த்தி பற்றி ழுப்போகிறேன் என்றார். நானும் எழுதும்படி கூறினேன். இவர் எமது சமுர்த்தி பணிப்பாளர்கள், சமுர்த்தி ஆணையாளர்கள்,  பற்றி மிகவும் சுவாரஸ்சியமாக  ழுதியுள்ளார். இதற்காக எனது வாழ்த்துக்கள் ''சமுர்த்தி யாரையும் கை விடவில்லை நாம் தான் அதை கை விட விட்டு விட்டோம்'' என்றும் இலங்கையில் சமுர்த்தி வாழும்  இனி அவரின் கட்டுரையை பார்ப்போம்...... 

நானும் சமுர்த்தியும் ………..

1994ம் ஆண்டு A/L Exam எழுதி முடிந்தவுடன் Air Force ல் Aeronautical Engineer க்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது நானும் விண்ணப்பித்திருந்தேன் எனக்கும் நேர்முக தேர்வுக்கான கடிதம் வந்தது நானும் கட்டுநாயக்க கழிந்தவுடன் ஒரு Air Force Base Trainning Camp ஒன்றுக்கு ஆவணங்களுடன் போயிருந்தேன். அப்போ துடிப்பான வயசு எல்லா நேர்முக பரிட்சையிலும் சித்திபெற்று கடைசியாக உயர் பதவியில் இருப்பவர்கள் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள் அதற்கும் தயங்காது பதில் சொன்னேன். நான் தழிழ் பேசுபவன் என்பதற்காக தட்டபார்த்தார்கள் முடியவில்லை. அதன் பிறகு கடிதம் வீட்டுக்கு வரும் என்று சொன்னார்கள். நானும் வீடுவந்து சேர்ந்தேன். ஒரு சில மாதம் கழித்து எனக்கு Aero Knotical Engineer க்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிரீர்கள் Medical முடிக்க கொழும்புக்கு வருமாறு கடிதம் வந்தது. நான் எனது மாமாவுடன் ( நாராயணதேவா ) கொழும்புக்கு சென்று Medicalஜ முடித்து அதிலும் வெற்றி கண்டேன் X-Ray போன்ற சில Medical களை மட்டக்களப்பில் எடுக்குமாறு அறிவுரைக்கப்பட்டது. நானும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அணைத்து Medicalஜ யும் முடித்தேன். ஒரு சில நாட்கள் கழித்து ஒரு கடிதம் வந்தது கட்டைகாச்சட்டை, சப்பாத்து , T-Shirt , போன்ற பொருட்களுடன் 6 மாதம் தியத்தலாவையில் உடற்பயிற்சி பெறுவதற்காக என்னை கொழும்புக்கு அழைத்திருந்தார்கள் . நானும் போனேன் அப்போ கொழும்புக்கு செல்வதானால் உயிர் நம்கையில் இருக்காது . எனினும் எனது நியமனக்கடித்தை வைத்துக்கொண்டு பஸ்சில் இறங்காமல் கொழும்பு சென்றேன். இம் முறை எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது எனது சித்தப்பா கூறினார் இந்த வேலைக்கு செல்லவேண்டாம் என்று வீடு திரும்ப சொல்லி அவருடைய பேச்சை தட்டாமல் நானும் திரும்பி வந்துவிட்டேன் . இது எனது பழைய கதை இதன் பிறகுதான் சமுர்த்திக்கு ஆள் எடுக்காங்கலாம் கிராம சேவகர் பிரிவுக்கு 2 பேராம் என்று கூறினார்கள் நானும் எனது பெயரை பதிவுசெய்தேன் ஒரு மாதிரியாக கல்லடி கிராமத்துக்கு ஊக்குவிப்பாளராக நியமனமும் கிடைத்து சிறப்பாக கடமையும் ஆற்றி வந்தேன்.
சமுர்த்தி திட்டமானது மாவட்ட செயலகத்தில் தலைமை காரியாலயம் நிறுவப்பட்டு அதற்கு பிரதிப்பணிப்பாளராக திரு செழியன் சேர் அவர்களும் பிரதேச மட்டத்தில் பிரசே செயலாளர்களாலும் இத்திட்டமானது வழிநடாத்தி செல்லப்பட்டது. நான் மண்முணை வடக்கு பிரதேச செயலகத்தில் கல்லடி எனும் கிராம சேவகர் பிரிவுக்கு ஊக்குவிப்பாளராக கடமையாற்றினேன். என்னுடன் உமாசங்கர் என்பவர் 3மாதம் கழித்து என்னுடன் இணைந்து கொண்டார் . ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு திட்டங்கள் முன்மொழிய வேண்டும் நாங்கள் எங்கள் கிராமத்துக்கு ஒரு கோப்பிரட்டி இல்லை இதணை அமைத்தால் நலன் பெறுபவர்கள் உப்போடை செல்ல தேவையில்லை எமது கிராமத்துக்குள்ளயே உதவி நிவாரணம் பெற்றுக்கொள்வார்கள் என்று Propose தயாரித்து பிரசே செயலாளரிடம் அனுமதி பெற்று அதனை கட்டி முடித்தோம். பாம்பு புற்று கோவிலும் எங்கள் செயலணியால் நிர்மானித்து கொடுக்கப்பட்டது என்பதனை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இரண்டாவது திட்டமாக சமுர்த்தி வங்கி கட்டிடம் கட்டுவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டு எமது கல்லடி செயலணிக்கு வழங்கப்பட்டது. அந்த நேரம் முகாமையாளராக பத்மா ஜெயராஜா அவர்கள் கடமையாற்றியிருந்தார். அவரும் எங்களுடன் நேரம் பாராமல் பல அறிவுரைகள் கூறியும் எம்மை உற்சாகப்படுத்தியும் இக் கட்டிடத்தினை கட்டி முடிக்க முக்கிய காரணமாக இருந்தவர்.
இந்த இரண்டு திட்டங்களும் எங்களால் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றிய நான் சமுர்த்தி வங்கியில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலகத்திலிருந்து பிரதிப்பணிப்பாளரினால் அழைப்பு வந்தது நானும் சென்றேன் செழியன் சேர் கேட்டார் கணனி பற்றிய அறிவு இருக்கா கணனி வேலை செய்வீர்களா என்று , நானும் கூறினேன் செய்வேன் என்று அப்புறம் என்னை திட்டமிடல் பிரிவுக்கு இணைப்பு செய்து திட்டமிடல் வேலைகளை கமலநாதன் முகாமையாளர் ,அலிஅக்பர் முகாமையாளர்களுடன் கடமையாற்றினேன்.
சிறிது காலம் செல்லச்செல்ல EPF , ETF தொடர்பான பிரச்சனை உருவானது இதணை சரி செய்வதற்காக சேர் என்னை அழைத்து இப்படி ஒரு பிரச்சனை ஒன்று உள்ளது உங்களால் அதை செய்ய முடியும் செய்வீர்களா என அன்பாக கேட்டார் நானும் மறுக்கவில்லை சுமார் 14 பிரதேச செயலகங்களுக்கும் சென்று EPF , ETF தொடர்பான அறிக்கைகளை திரட்டி ஆவணப்படுத்தி உரிய திணைக்களங்களுக்கு அனுப்பிவைத்தேன். இப்போது ஒரு உத்தியோகத்தர் EPF , ETF பெறுகிறார் என்றால் நானும் செழியன் சேரும் அப்போது கஸ்டப்பட்டு செய்ததனால் தான் இன்று சுலபமாக பணத்தை எடுக்கிறார்கள். இதனை திருத்தி கொடுத்ததில் நானும் பெருமை அடைகிறேன்.
மற்றுமொரு விடயம் எனக்கு சிறு வயதிலிருந்தே வாகனம் என்றால் ஆசை அதை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று எப்படியாவது ஓட்டிப்பார்த்து விடுவேன் எங்கள் பிரதிப்பணிப்பாளருக்கு ஒரு Pajeero Jeep திணைக்களத்தினால் வழங்கப்பட்டது . இதற்கு சாரதி சிவலிங்கம் அவர்கள் தான். மேற்கூறிய யோகம் எனக்கு இங்கும் விட்டுவைக்கவில்லை . சிவலிங்கம் லீவு என்றால் சேர் என்னை அழைத்து செல்வார் இது நாளடைவில் சகஜமாகிவிட்டது. செழியன் சேரோடு நான் வேலை செய்திருக்கிறேன் நல்ல மனிதர் உதவி என்று கேட்டால் இல்லை என்று சொல்லமாட்டார் ஒரு உத்தியோகத்தரிடமிருந்து வேலையை எவ்வாறு செய்விப்பது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். முகத்துக்கு நேரே ஏசவும் மாட்டார் நல்ல மனிதர்.
தலமை காரியாலயத்தில் வடகிழக்கு பெருந்தோட்ட பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர் திரு நடேசராஜா சேர் அவர்கள். மூன்று மொழியும் தலதண்ணியாக பேசுவார் அவரை கண்டால் கிருமி கலங்கும் . அவர் கூட்டம் வைக்க வருகிறார் என்றால் ஒரு குண்டூசி விழுந்த சத்தமும் கேக்காது அப்படி பயம்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அவர் கடமைபுரிய வந்த நேரம் எனக்கும் அவருக்கு கீழ் வேலை செய்யும் பாக்கியம் கிடைத்தது எங்கோ ஒரு மூலையில் நின்று கொண்டு வாயை பொத்தி கொண்டு நின்ற நான் காலத்தின் ஓட்டத்தினால் அவருடன் வேலை செய்யும் பாக்கியம் கிடைத்தது அது ஒரு பொற்காலம் அதை மறக்கவே முடியாது . அவருடைய சாரதி கொழும்பு என்ற காரணத்தினால் அவர் மட்டக்களப்பிற்கு வருவது குறைவு அதனால் வாகனத்தை சேரே ஓட்டுவார். கொழும்பு , கண்டி செல்வதென்றால் என்னையும் அழைத்துச்செல்வார் . நானும் ஓட்டுவேன் சேர் வழிகாட்டி செல்வார் இப்படி நானும் பல இடங்களுக்கு சென்று அவருடைய மனதில் இடம் பிடித்து விட்டேன். இவருடைய குணத்தை ஒரு சிறு பிள்ளைக்கு ஒப்பிடலாம் . நமக்கு பணிக்கப்பட்ட வேலையை முடித்தால் தேடவும் மாட்டார் . ஆனால் பிழை என்றால் முகத்துக்கு நேரே ஏசுவதையும் நிறுத்தமாட்டார் அது அவரது அழகு.
இவருடைய நல்ல மனதுக்கு ஒரு சிறு உதாரணம்……….
நானும் நடேசராஜா சேரும் கொழும்புக்கு சென்று கொண்டிருந்தோம் போகும் வழியில் தொலைபேசி மூலம் எனது உறவினர்கள் தொடர்பு கொண்டு நாங்கள் 4 பேர் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு போவதற்கு உள்ளோம் நீ கொழும்புக்கு வருவதாக கேள்விப்பட்டோம் உன்னுடன் நாங்களும் வருகிறோம் என கூறினார்கள் நானும் மறுப்பு கூறவில்லை ஏனெனில் நானும் சேரும் தானே போகும் போது Seat Free யாகத்தானே இருக்கும் என நினைத்து சரி என்று சொல்லி விட்டேன். கொழும்பை சென்றடைந்து மறுநாள் காலை சேரை கூட்டத்திற்கு ஏற்றிக்கொண்டு விட்டுத்து நான் சற்று உறக்கத்துக்கு போய்விட்டேன். பின்னேரம் கூட்டம் முடிந்ததும் சேரை அவர் தங்கிய வீட்டில் விட்டுவிட்டு சேரிடம் கேட்டேன் சேர் நீங்களும் கொஞ்சம் பம்பலப்பிட்டிய வாறிங்களா 8 கணனிகள் வேண்டவேனும் என்று அதற்கு அவர் சொன்னார் எனக்கு களைப்பாக இருக்குது நீ வாகனத்தை எடுத்துக்கொண்டு கணனிகளை ஏற்றி வா நாம் இரவைக்கு மட்டக்களப்பு புறப்படுவோம் என்று கூறினார். சரி என்று நானும் கணனிகளையும் எனது உறவினர் 4 பேரையும் ஏற்றிக்கொண்டு இரவு 8 மணிபோல் சேரின் வீட்டை வந்தடைந்தேன். என்னை சாப்பிடச்சொன்னார் நான் சாப்பிடும் பொழுதுதான் சொன்னேன் எனது உறவினர்களும் என்னுடன் மட்டக்களப்பு போக வந்திருக்கிறார்கள் கூட்டிப்போவமா என்று கேட்டேன் அதற்கு அவர் உடனே சொன்னார் பிரச்சணையில்லை அவர்களும் வரட்டும் என்று கூறினார். எல்லோரும் புறப்பட தயாரானோம் அப்போது சேரின் மனைவியும் வாரத்துக்கு இருந்தவ போல எனக்கு அப்போதுதான் தெரிந்தது . நான் முழுசி முழுசி இருக்கன் அவருடைய மணைவியை கூப்பிட்டு சொன்னார் சுரேசின் உறவினர் 4 பேர் இருக்கிறார்கள் இதில் பயணம் செய்வது கஸ்டமாக இருக்கும் நீ அப்பா காலையில Train இருக்கு அதில வா நான் உன்னை மட்டக்களப்பில் Pickup பன்னுரன் என்று சொன்னார். இது அவருடைய பெரிய மனதினை காட்டுகிறது. இது போல் பல நினைவுகள் நடேசராசா சேருடன் நானும் பங்கேற்று இருக்கிறேன். நல்ல மனிதர் இப்போ கூட இல்லை ஆனால் ஒவ்வொருவர் நெஞ்சிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
”நல்லவர்களை இறைவன் தன்னுடன் வைத்துக்கொள்வதற்காக சீக்கிரமே அழைத்து விடுகிறார் ”
குணரெட்னம் ஜயாவுடன் வேலை செய்ய கிடைத்தது அவரும் ஒரு சிறந்த ஞாபக சக்தி உள்ளவர் . என்ன விடயம் திருத்த சொல்லி தந்தாரோ அதை நினைவில் வைத்து கேட்பார் . இவருடைய வாகனத்தையும் சாரதி இல்லாத நேரத்தில் ஓட்டியிருக்கிறேன். நான் Loan Subject செய்தனான் அதனால் முன்னுரிமை படுத்துதலில் சில சில முரண்பாடுகள் எனக்கும் சேருக்கும் இடையில் வந்திருக்கின்றன. அதன் பின் நானும் எனது வேலையுமென ஒதுங்கிவிட்டேன் அவர் சொல்வதை செய்வேன்.
ஒருநாள் எனக்கு தலமைகாரியாலயத்திலிருந்து நடேசராஜா சேர் தொலைபேசி மூலம் கூறினார் உடனடியாக புறப்பட்டு கொழும்புக்கு வரச்சொல்லி கூறினார் எனக்கு ஒன்றும் புரியவில்லை நாளை மறுதினம் பணிப்பாளர்களுக்கு கூட்டம் உள்ளது என்பது தெரியும் எங்கள் குணரெட்னம் சேரும் கொழும்புக்கு சென்று விட்டார். சரி என்று லீவு போட்டு விட்டு கொழும்புக்கு சென்றேன் . நேரடியாக நடேசராஜா சேரிடம் சென்ற போது விறு விறு என்று என்னை பணிப்பாளர் நாயகத்திடம் கூட்டிச்சென்றார் . சென்று கொண்டிருக்கும் போது கேட்டேன் எதற்காக சேர் பணிப்பாளர் நாயகத்தி்டம் கூட்டிப்போகுறீர்கள் நான் பிழை ஒன்றும் செய்யவில்லையே என்றேன் அதற்கு அவர் உன்னிடம் NCT(Civil Engineering )Certificate இருக்குத்தானே என்றார். ஆம் என்றதும் பணிப்பாளர் நாயகத்திடம் இவர்தான் நான் சொன்னவர் என்று DG Sir இடம் அறிமுகப்படுத்தினார். அவர் கூறினார் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் தொழிநுட்ப வேலைகளை கண்கானிக்கவும் Estimate தயாரித்து காலதாமதமாகி இருக்கும் வேலைகளை விரைவுபடுத்துவதற்காக உங்களை போன்ற NCT முடித்தவர்களை உள்வாங்க உள்ளோம் உங்களால் முடியுமா என கேட்டார் நானும் மறுக்க வில்லை ஆம் என ஒத்துக்கொண்டேன். DG Sir சொன்னார் எனக்கு பணிப்பாளர்களுடன் கூட்டம் ஒன்று உள்ளது அதற்கு செல்ல வேண்டும் நீங்களும் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார் . சிறிது நேரம் கழித்து என்னுடன் இருவர் வந்து கதைத்தார்கள் அப்போது தான் எனக்கு விளங்கியது ஏற்கனவே மாவட்ட மட்டத்தில் இருந்து NCT முடித்தவர்கள் இருந்தால் அவர்களை விண்ணப்பிக்க சொன்னது. எனக்கு இந்த விடயம் தெரியாமல் போய்விட்டது. அதனால் தான் நடேசராஜா சேர் தொலைபேசி மூலம் எனக்கு தெரியப்படுத்தி இருந்தார்.
DG Sir மூவரையும் அழைத்துக்கொண்டு கூட்டம் இடம் பெறும் இடத்துக்கு சென்று எங்களை மாவட்ட பணிப்பாளர்களுக்கு அறிமுகம் செய்தார். இவர்களுக்கான கடிதம் மிக விரைவில் அனுப்பிவைப்பதாகவும் கூறினார். அதன் பின் நான் மட்டக்களப்பு வந்து சேர்ந்து விட்டேன்.
ஒரு நாள் எனக்கு தொழிநுட்ப உத்தியோகத்தர் கடமைகளை மேற்கொள்வதற்கு பணிப்பாளர் நாயகத்திடமிருந்து கடிதம் கிடைக்கப்பெற்றது எனக்கு இந்த தகமை இருக்கு என்று தெரிந்து சரியான நேரத்தில் அவர் என்னை தொடர்புகொண்டு இப்பணியினை செய்வதற்கு வழிவகுத்திருந்தார். இப்படி யாரும் செய்யமாட்டார்கள் .
Computer Hardware Technician க்கான நேர்முக தேர்விலும் நிறைய பேர் போயிருந்தோம் முதல் தொகுதியில் 14 பேர் தெரிவு செய்யயப்பட்டு எங்களுக்கான பயிற்சி நெறி களுவாஞ்சிக்குடியில் உள்ள VTC நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது. அதில் சித்தி பெற்று நானும் ஒரு Computer Hardware Technician ஆக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்த காலகட்டத்தில் தான் NCT முடித்திருந்தால் Quantity Surveying படிப்பினை தொடரலாம் என Human Resource பிரிவில் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டது. அதற்கு நானும் விண்ணப்பித்து அந்த படிப்பினையும் SLITA வில் கற்று சித்தியும் பெற்றுள்ளேன். எனது கற்றல் செயற்பாடு மற்றும் பல தரப்பட்ட வழிகளில் உதவிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்பொழுது கடமையாற்றிக்கொண்டிருக்கும் பணிப்பாளர் திருமதி அ.பாக்கியராஜா அவர்கள் தனது கடமையினை பொறுப்பேற்கும் பொழுது நானும் எனது நண்பனுமாகிய பிரதீபன் அவர்களும் கதிர்காமத்துக்கு பாதயாத்திரை சென்றிருந்தோம் . காட்டினுள் தொலைபேசி வேலைசெய்யாததால் கள நிலவரம் தெரியாத நிலையில் Coverage ஜ தேடி பல மணிநேரம் அலைந்திருக்கிறோம். Coverage கிடைத்ததும் அலுவலகத்தை பற்றி கேட்டறிந்து கொண்டோம். பணிப்பாளர் கடமையை பாரமெடுத்து விட்டதாகவும் கேள்விப்பட்டோம். எமது யாத்திரை முடிவுற்று முதல் நாள் அலுவலகத்துக்கு சென்று என்னை பணிப்பாளரிடம் அறிமுகப்படுத்தினேன். பின் எனக்கு பணிக்கப்பட்ட கடமைகளை செய்து கொண்டுவந்தேன் . ஒரு நாள் எதிர்பாராத கடிதம் எனக்கு கிடைத்தது நான் அப்படியே விறைத்துப்போனேன். கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது Payroll , Cigas , Loan , போன்ற கடமைகளை உடனடியாக பொறுப்பேற்கும்படி நான் உடனே Accountant Sir உடனும் பணிப்பாளரிடமும் நேரடியாக Payroll ல் உள்ள குறைபாட்டை கூறினேன் . எமது Payroll ஆனது சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து ரஞ்சித் அவர்களால் சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் சம்பளம் செய்யப்பட்டு வந்தது . ஆனால் அதன் பிழைகள் சரியாக இனம்காணப்படாமல் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வந்ததால் இவர் வேலையை விட்டதும் இ.சிவநாதன் என்பவர் ரஞ்சித்தால் செய்யப்பட்ட முறையின் படியே இவரும் செய்ததினால் ஒரு முறையான Payroll System பேணப்படவில்லை இதை என்னால் சரிவர செய்ய முடியாது என்று பணிப்பாளரிடம் விளங்கப்படுத்தினேன். அவரும் அப்படியானால் சரியான முறையில் Payroll System னை மாற்றி அமைத்து தருமாறு கூறினார்.
நானும் அதற்கு உடன் பட்டு தற்போது நீங்கள் சம்பளம் எடுக்கின்ற Pay Sheet நான் திருத்திய Payroll System என்பதை கூறுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். இதனை என்னால் செய்ய முடியும் என இனங்கண்டு எனக்கு தந்த பணிப்பாளருக்கும், கணக்காளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எமது மாவட்டத்துக்கு அனுபவமுள்ள, அர்ப்பணிப்புள்ள பணிப்பாளரும், கணக்காளரும் கிடைத்திருக்கிறார்கள் . நாம் எமது பணியினை தொடர அவர்களின் வழியில் பணிபுரிவோம் . இதனை எழுதுவதற்கு உந்துசக்தியாக இருந்தவர் நண்பர் ஜெயதாசன் அவர்கள் அவரின் வழிகாட்டலில் எனது அனுபவத்தையும் தங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கொரோனாவுக்கு நன்றி(Iam In Lock Down Kallady Veloor )
த.சுரேஸ்
மாவட்ட செலயகம்
மட்டக்களப்பு

Comments