சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு மற்றுமொரு துயரச்செய்தி......
கண்டி மாவட்டத்தில் மற்றுமொரு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மக்களுக்கான சேவையை வழங்கும் போது கொரானா தாக்கத்தின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அன்மைக்காலங்களில் கொரானா தாக்கம் இலங்கையில் அதிகரித்த வண்ணம் உள்ள இவ்வேளையில் மக்களுக்கான அர்பணிப்பான சேவையை வழங்கி வந்த கண்டி மாவட்டம் ஹாரிஸ்பத்துவை பிரதேச செயலகத்தின் மெதவெல சமுர்த்தி வலயத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய திருமதி.அனோமா லியனகே அவர்கள் நேற்றைய தினம் இறையடி சேர்ந்தார். கொரானா தாக்கத்தால் தற்போது சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சந்தித்துள்ள மூன்றாவது இழப்பாகும்.
முதல் இழப்பாக கடுவல்ல பிரதேச செயலகத்தின் பத்தரமுல்லை சமுர்த்தி வலயத்தில் கடமையாற்றிய மோனிகா பிரியதர்சினி பெரேரா அவர்களும் இரண்டாவதாக வெலிமட கந்தக்கட்டிய பிரதேச செயலகத்தில் பணி புரிந்த ஜகத் நிசாந்த பெர்னாண்டோவும் தற்போது அனோதா அவர்களும் தம் உயிரை சமுர்த்தி சேவைக்காக அர்பணித்துள்ளனர்.
இவர்கள்களின் ஆத்மா சாந்தியடைய மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றினைந்து பிரரர்த்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பாக தம் உயிரை துச்சமென மதித்து சேவையாற்றி வரும் இலங்கையில் உள்ள சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களும் உங்கள் பாதுகாப்பையும் பலத்தையும் பலப்படுத்தி உறுதிப்படுத்திக் கொண்டு உங்கள் சேவையை மக்களுக்கு வழங்குங்கள். மக்கள் சேவை என்றாலும் தங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
Comments
Post a Comment