நானும் என் சமுர்த்தியும் (பத்தாம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் (பத்தாம் தொடர்).......

அனைவரும் ஆவலோடு தான் இருப்பீர்கள் யார் அந்த சிறந்த ஊக்குவிப்பாளர் என்பதை அறிய.  இக்கருத்திட்டத்தை பொறுத்தமட்டில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியமாக கவனிக்கப்பட்டதுடன் மிக விரைவாக செய்து முடிக்கப்பட்டதும், மக்களின் தேவையை நேரடியாக பூர்த்தி செய்யும் வேலைத்திட்டமாகவும் இருக்க வேண்டும் எனவும் நோக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் புளிந்தீவு கிழக்கு சமுர்த்தி ஊக்குவிப்பாளர் வே.ரமேஸ்குமார் சிறந்த ஊக்குவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதுவே சமுர்த்தி அதிகாரசபையால் ஒரு ஊக்குவிப்பாளருக்கு முதல் முதலில் வழங்கப்பட்ட விருதாக கருதப்படுகின்றது. 

இக்கால கட்டத்தில் மற்றுமொரு சுற்றுலாவை தயார் செய்தார் நடேசராஜா ஜயா அவர்கள் கதிர்காமம் தொடக்கம் பலாங்கொடை வரை இந்த பயணம் அமைந்திருந்தது. புதிய புதிய கிராமங்களை பார்ப்பதற்கும் எமக்கான கருத்தரங்கிலும் பயிற்சி நெறிகளிலும் கலந்து கொள்வதற்கான ஒரு பயணமாக இருந்தது. இதனிடையே இருதயபுரம் கிழக்கு  வலயத்திற்கு சமுர்த்தி முகாமையாளராக புதிதாக மாற்றலாகி வந்திருந்தார் திருமதி.கீதா கணகசிங்கம் அவர்கள்.

இப்பயணத்தில் எங்களுடன் அப்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய G.புண்ணியமூர்த்தி ஜயா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமான எங்கள் பயணம் கதிர்காமம் சென்றடைந்து அங்கு சாப்பாடு சமைத்து  சாப்பிட்டு தொடர்ந்த எமது பயணம் கொழும்பு சென்று, அங்கிருந்த கண்டி சென்று, இறுதியாக இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொடையில் அமைந்துள்ள எமது சமுர்த்தி பயிற்சி நிலையமான சமனலவெவ  வந்தடைந்தோம்.  எமது பயனம் மிகவும் பயங்கரமாக இருந்தது எனக்கு முதல் தடவை தான் கண்டி போன்ற இடங்கள் சுற்று முற்றும் பஸ்சில் இருந்து பார்த்தால் ஒரே பள்ளமாகவே காணப்பட்டது.  பயத்தை யாரிடமும் கூறாமல் சிரித்தபடியே இருந்து விட்டேன். இரவு நேரமாகி விட்டது பஸ் மிகவும் மெதுவாக மெதுவாக பயணித்துக் கொண்டிருந்தது. என்னடா என்று கேட்டேன் மலை உச்சிக்கு போகுதாமடா என்று கூறினார்கள். ஏன்டா வந்தோம் என்றாகி இருந்தது, அப்ப தான் புதிசா கல்யாணமும் கட்டி இருந்தனான். சற்று நேரத்தில் சென்றடைந்து விடுவோம் என வழிகாட்ட வந்த பயிற்சி நிலைய ஊழியர் கூறினார்  அது சற்று ஆறுதலாக இருந்தது.

 அவர் கூறியது போல இடமும் வந்தது இரவு ஆனாதால் அதன் அழகு தெரியவில்லை. அனைவரும் களைப்பில் இருந்தோம் பலருக்கு குளிப்பதற்கே பயமாக இருந்தது ஏன் என்றால் சரியான குளிராகவும் இருந்தது.  இரவு நேரத்தில் வந்ததால் பலரும் பல பொருட்களை வாங்கவில்லை அருகில் ஏதாவது கடை உண்டா? என கேட்ட போது 15 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் கடைக்கு என அங்குள்ள ஒரு ஊழியர் தெரிவித்தார். உடனே நடேசராஜா ஜயா அவர்கள் தனது பிக்கப் வாகனத்தில் சென்று வாருங்கள் என தன் சாரதியையும் எம்முடன் அனுப்பிவைத்தார். இதன் பின் அன்றைய பொழுது இனிதே முடிய.                 மறுநாள் காலையில் எழுந்தவுடன் அவ்விடத்தின் அழகை ரசிப்பதற்கே நம் கண்களே போதாது போல் இருந்தது இரவில் அதன் அழகை காண முடியவில்லை. காலையில் பயிற்சிக்காக அழைக்கப்பட்டிருந்தோம். சிங்களத்தில் பயிற்சிகள் நடாத்தப்பட்டது அதனை மிக தெளிவாகவும் விரிவாகவும் தமிழில் மொழில் எமக்கு விரிவுரை வழங்கினார் நடேசராஜா ஜயா அவர்கள். இரண்டுநாள் பயிற்சி நெறி எவ்வாறு முடிந்தது என்றே தெரியவில்லை. அக்கால கட்டத்தில் இப்போதுள்ள டிஜிடல் கமரா கையடக்க பேசிகள் இல்லை கமரா கொண்டு தான் புகைப்படம் எடுக்க வேண்டும் அக்காலத்தில் ஒருவரிடம் கமரா இருந்தா அவர் பெரிய ஆள் அப்படித்தான் எங்களுடன் பயிற்சிக்கு வந்த சிவநாதன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் தங்கள் கமராக்களை கொண்டு வந்து புகைப்படங்களை எடுத்தனர். இதில் எமக்கு பயிற்சி வழங்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்களுடனும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். 

அன்று அவ்வாறு எடுத்துக் கொண்டு புகைப்படங்களை இன்று எனக்கு அனுப்பிய சிவநாதன் மற்றும் மணிவண்ணன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் தங்களிடம் இது போன்ற படங்கள் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும். 

இத்தொடரை www.jeyasdo.com எனும்  இணையதளத்திலும் Jeyathasan Balasingam எனும்  முகநூலிலும் பார்வையிடலாம் தொடர்புக்கு jeyasdo@gmail.com

தொடரும்........

சிவநாதன், கலைச்செல்வி, கிருஸ்ணவேணி, மஞ்சுளா, ரஜனி, விஜிதா

சிவநாதன், தேவராஜன், யூட்

சிவநாதன், தேவராஜன்

நடராஜா ஐயா, புண்ணியமூர்த்தி ஐயா

சிவநாதன், சிறி, ரமேஸ்

சிவநாதன், பிரதீபா, கிருஸ்ணா,ரஜனி, யுனிற்றா, யூலியன், தேவராஜன்

புண்ணியமூர்த்தி ஐயா, மணிவண்ணன், நடேசராஜா ஐயா

விஜிதா, சாரதாதேவி, ரங்கநாயகி, மோசிகவதனி, மணிவண்ணன், யூலியன்

லோகேஸ்வரன், மணிவண்ணன்


யுனிற்றா, முகாமையாளர் கீதா, முகாமையாளர் தமயந்தி, மணிவண்ணன் இவர்களுடன் பயிற்றுவிப்பாளர்கள்

Comments