நானும் என் சமுர்த்தியும் (எட்டாம் தொடர்)..........

 நானும் என் சமுர்த்தியும் (எட்டாம் தொடர்)..........


(இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் பொதுக்கிணறுக்கான வேலைத்திட்டம்)

நேற்றைய தினத்தில் கல்லடி சமுர்த்தி வலயத்தை அறிந்து கொண்ட நாம்  அங்கு கடமையாற்றிய சசி அவர்களை (அன்மையில் இறைபதம் அடைந்த)  குறிப்பிட மறந்து விட்டோம். எனவே அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் இன்று இருதயபுரம் சமுர்த்தி வலயம் பற்றி அறிந்து கொள்வோம்.

இருதயபுரம் சமுர்த்தி வலயத்திற்கு சமுர்த்தி முகாமையாளராக செல்வி.ஜெயஸ்ரீ அம்மணி அவர்கள் கடமையாற்றி குறுகிய காலத்தில் இடமாற்றலாகி சென்று விட்டார். இவருடன் ஆரம்ப காலத்தில் கடமையாற்றி சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள் பின்வருமாறு சிவபாதசேகரம்(தற்போது பதவி உயர்வு கிடைத்து சமுர்த்தி தலைமையக முகாமையாளர்-கிரான்), சிவநாதன்(தற்போது மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவு), நித்தியானந்தபவான்(தற்போது இருதயபுரம் சமுர்த்தி வங்கி), மணிவண்ணன்(தற்போது மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி), மெட்டில்டா(தற்போது புளியந்தீவு சமுர்த்தி வலயம்), ரஜனி(தற்போது கல்லடி சமுர்த்தி வலயம்), நாகநந்தினி(தற்போது ஓய்வு), பரமேஸ்வரி(தற்போது ஓய்வு), சிவகுமார்(தற்போது ஓய்வு), குமணன்(தற்போது புளியந்தீவு சமுர்த்தி வலயம்), சாந்தினி(தற்போது இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயம்), ஜெயபிரகாஸ்(தற்போது ஓய்வு), மஞ்சுளா(தற்போது மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவு), பிருந்தா(தற்போது பதவி உயர்வு கிடைத்து கதிரவெளி சமுர்த்தி வங்கி முகாமையாளர்), சாருலதா(மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்கம் ), ரஜனி(தற்போது இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயம்), கலைச்செல்வி(தற்போது ஓய்வு) ஆகியோர் ஒரு படையணியாக தங்கள் சேவையை மக்களுக்கு வழங்கி வந்தனர்.

இவ்வலத்திற்கான கருத்திட்டமாக கொக்குவில் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட காந்தி கிராமத்தில் வியாபார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான கருத்திட்டம் முன்மொழியப்பட்டு 150000 (ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம்) கொக்குவில் கிராம சமுர்த்தி செயலணிக்கு வழங்கப்பட்டு அங்கீகாரமும் வழங்கப்பட்டது. இதற்காக கொக்குவில் சமுர்த்தி செயலணி ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு கொக்குவில் சமுர்த்தி ஊக்குவிப்பாளர் மஞ்சுளா அவர்களால் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மிக முக்கியமாக மக்களின் பங்களிப்புடன் இக்கட்டிடம் அமையப்பட வேண்டும் என கட்டாயமாக தெரிவிக்கப்பட்டது கொக்குவில் சமுர்த்தி செயலணி தன் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி  இக்கட்டிடம் அமைக்கப்பட்டு 1998.11ம் மாதம் திறந்தும் வைக்கப்பட்டது. தற்போது இக்கட்டிடம் கைவிடப்பட்ட ஒரு கட்டிடமாகவே காணப்படுகின்றது.

இதுவரை இருதயபுரம் சமுர்த்தி வலயம் பற்றிய நம் கண்னோட்டம் இருந்தது இனி சற்று தொலைவில் இருந்த இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயம் பற்றி அறிந்து கொள்வோம்.

இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயத்திற்கு செல்வி குமுதினி சமுர்த்தி முகாமையாளராக மிக குறுகிய காலமே கடமையாற்றி இருந்தார் இவருடன் பக்கபலமாக செயற்பட்ட சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள் விபரம் பின்வருமாறு. தசேந்திரன்(தற்போது ஓய்வு), வசந்தன்(தற்போது கல்லடி சமுர்த்தி வலயம்), பிரபாகரன்(தற்போது கல்லடி சமுர்த்தி வலயம்), பிரதீபா(தற்போது இருதயபுரம் சமுர்த்தி வலயம்), யுனிற்றா(தற்போது இருதயபுரம் சமுர்த்தி வலயம்), சுகுமார்(தற்போது சவுதி அரேபியா), வெண்ணிலா (தற்போது ஓய்வு), ரோகினி(தற்போது இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயம்), சந்திரவதனி(தற்போது மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு), பெல்சியா(தற்போது கல்லடி சமுர்த்தி வலயம்), அற்புதமலர்( தற்போது இருதயபுரம் சமுர்த்தி வலயம்), தேவராணி(தற்போது இருதயபுரம் சமுர்த்தி வலயம்), லோகேஸ்வரன்(தற்போது இருதயபுரம் சமுர்த்தி வங்கி), செல்வி புஸ்பா(தற்போது கரடியநாறு சமுர்த்தி வங்கி), இதயமலர்(தற்போது ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு), ஜீவானந்தம்( தற்போது மாவட்ட செயலக ஊடகப்பிரிவு), தேவராஜன்( தற்போது விவசாய தினைக்களம் வவுனதீவு), ஆனந்தஜோதி(தற்போது கல்லடி சமுர்த்தி வலயம்), மதலேனா மேரி பண்டார( தற்போது இருதயபுரம் சமுர்த்தி வங்கி), தயானந்தரவி(தற்போது கரவெட்டி சமுர்த்தி வலயம்), இன்னாசியம்மா(தற்போது புளியந்தீவு சமுர்த்தி வங்கி), ஹரிஹரன்(தற்போது இங்கிலாந்து)ஆகியோர் இணைந்து சமுர்த்தி முகாமையாளருடன் தம் சேவையை வழங்கி வந்தனர்.

இவ்வலத்திற்கான கருத்திட்டமாக இருதயபுரம் கிழக்கு கிராமசேவகர் பிரிவில் பொதுக்கிணறு அமைக்க  கருத்திட்டம் முன்மொழியப்பட்டு இருதயபுரம் கிழக்கு கிராம சமுர்த்தி செயலணிக்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது. இதற்காக இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி செயலணி ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி ஊக்குவிப்பாளர் பிரபாகரன் அவர்களால் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மிக முக்கியமாக மக்களின் பங்களிப்புடன் இக்கட்டிடம் அமையப்பட வேண்டும் என கட்டாயமாக தெரிவிக்கபப்ட்டது இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி செயலணி தன் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி  இக்கிணறு அமைக்கப்பட்டு 1998.11ம் மாதமளவில் திறந்து வைக்கப்பட்டது. 

  தொடரும்.......


Comments