சௌபாக்கியா விஷேட வேலைத்திட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு.........

சமுர்த்தி திணைக்களத்தின்  மூலம் வீடற்றோருக்கு வீடமைத்து கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ்  விஷேட சௌபாக்கியா வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  இதன்  கீழ் நிரந்தர வீடற்றவர்களுக்கு வீடமைத்து கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ்  பத்து (1000000) லட்சம் ரூபாய் பெறுமதியாக வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டும் இதற்காக சமுர்த்தி திணைக்களத்தின்  ஆறு (600000) லட்சம் ரூபாவை வழங்கும் மிகுதி நான்கு (400000) லட்சத்தை சமுர்த்தி பயனாளி இட்டு இவ்வீட்டை நிர்மானித்த முடிக்க வேண்டும்.

 இவ்வேலைத்திட்டத்தின் அடிப்படையில் (கோரளைப்பற்று மேற்கு) ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காகிதநகர் (210/B) கிராமசேவாகர் பிரிவைச் சேர்ந்த முகமது காசிம் சித்தி நஜீமா ஆகிய சமுர்த்தி  பயனாளியின் பங்களிப்பாக 835805 ரூபா பங்களிப்பு செய்தும் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக ஆறு (600000) லட்சம் ரூபாவை பெற்று அழகானதும் வசதியுமான வீட்டை ஒரு நிர்மானித்துள்ளார். 

 இவ்வீட்டினை சமுர்த்தி பயனாளியிடம் கையளிக்கும நிகழ்வு 2021.05.21ம் திகதி ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு  பிரதம விருந்தினராக ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச செயலாளர்  V. தவராஜா  அவர்கள் கலந்து கொண்டு   வீட்டினை சமுர்த்தி பயனாளியடம் கையளித்தர். 

 இதன் போது ஓட்டமாவடி சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் M.பாஸ்கரன் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் M.N.M.சாஜகான் காகிதநகர் கிராம பிரிவின் சமுர்த்தி உத்தியோகத்தர் M.L.சியாத் கிராம உத்தியோகத்தர் A.அஸ்கர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர் M.சுபையிர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 தற்போதைய கொவிட் தொற்று காரணமாக கலந்து கொண்ட அனைவரும் முககவசம் அணிந்து.  தம் கடமைகளை மேற் கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆரம்ப புகைப்படம் -


அத்திவாரம் இடும் போது -


இடை நடுவில் கட்டுமான பணியின் போது -


தற்போது-









Comments