தற்போதைய கொவிட் - 19 காலத்தில் 5000/=கொடுப்பனவு பெற தகுதியானோர்....
தற்போதைய கொவிட் காரணமாக அரசு 5000/= கொடுப்பணவை வழங்கவுள்ளது இக் கொடுப்பணவை பெற தகுதியுடையோரை சற்று நோக்குவோம் .
*அரச உத்தியோகத்தர்கள்
*ஓய்வூதியம் பெறுவோர்
*தனியார் நிறுவனங்களில் நிரந்தர வருமானம் பெறுவோர்
*உயர் வருமானம் பெறுவோர் முதலானோர் இக்கொடுப்பனவை பெற முடியாது
யாருக்கு வழங்கப்படும்?
* இப்போது சமுர்த்தி நிவாரணம் பெறுவோர் மாதாந்தம் பெறும் தொகையில் 5000/= வரத்தக்கதாக மீதி மட்டும் வழங்கப்படும்
(உ +ம் ) இப்போது சமுர்த்தி நிவாரணம்3500/= பெற்றால் 1500/=மட்டும் வழங்கப்படும்
* வேறு கொடுப்பனவுகள் பெறுவோர் பெறும் தொகையில் 5000/= வரும் விதமாக மிகுதி வழங்கப்படும்
(உ +ம் ) (நீரிழிவு, தலசீமியா, புற்றுநோய், முதியோர் கொடுப்பனவு, தொழுநோய் PMA போன்றவை )
இவர்கள் மாதாந்தம் 2500/= பெறுபவர்களாயின் மிகுதி 2500/= மட்டுமே வழங்கப்படும்
* சில மாகாணங்களில் மேற்படி நோய்களுக்கு 5000/= கொடுப்பனவை வழமையாக பெறுபவர்களுக்கு மட்டும் ச(விஷேடமாக) 2500/= மட்டும் வழங்கப்படும்
* சமுர்த்தி பெற தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி கிடைக்காமல் காத்திருப்பு பட்டியலில் பெயர் உள்ளவர்கள்
* முதியோர் கொடுப்பனவு மற்றும் ஏனைய நோய் கொடுப்பனவு, PMA கொடுப்பனவு போன்ற நிவாரணங்களுக்கு விண்ணப்பித்து இதுவரை கொடுப்பனவு கிடைக்காமல் காத்திருப்பவர்கள்
* கொரோனா தொற்று காரணமாக தற்போது (தற்காலிகமாக) தொழில் / வருமானம் இழந்துள்ளோர்
* கடந்த முறைகளில் 5000/= கொடுப்பனவு பெறாதவர்களில் இப்போது இம்முறை தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் இக்கொடுப்பனவை பெற முதன்முறையாக தகுதி பெறுபவர்கள் விண்ணப்பம் ஒன்றினை கிராமியக்குழுவின் ஒரு உறுப்பினரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்
இவ்விண்ணப்பம் கிராமியக்குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதி பெற்றவராக கருதப்படின் பிரதேச செயலாளரின் அனுமதியின் பேரில் கொடுப்பனவு வழங்கப்படும்
® கிராமியக்குழு அங்கத்தவர்கள் :-
கிராம உத்தியோகத்தர்
சமுர்த்தி உத்தியோகத்தர்
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்
பொதுச்சுகாதார மருத்துவ மாது
* குறிப்பு :-
எவ்வகையிலும் ஒரு குடும்பத்துக்கு ஏதாவது வகையில் ஒரு 5000/= மட்டுமே வழங்கப்படும்
அத்துடன்...
ஒரே வீட்டில் வாக்காளர்_பட்டியலின்_அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்தால் அந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு கொடுப்பனவு வழங்கப்படும்
மக்களே தங்களுக்காக சேவை செய்து வரும் ஒவ்வொரு உத்தியோகத்தர்களையும் மதியுங்கள். தற்போதைய சூழ் நிலையில் தங்கள் உயிரை துச்சமென மதித்து பணி செய்யும் எம் உத்தியோகத்தர்களை மதித்து அக் கொடுப்பணவை பெற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே சில உத்தியோகத்தர்களை நாம் இழந்துள்ளோம் அவர்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் உண்டு என்பதை கவணத்தில் கொள்ளுங்கள் எமது நல் உள்ளம் கொண்ட பொது மக்களே......
Comments
Post a Comment