நானும் என் சமுர்த்தியும் (13ம் தொடர்).......
2000ம் ஆண்டு ஆரம்பத்தில் வலயங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக இருதயபுரம் சமுர்த்தி வலயத்திற்கான கட்டிடடிம் அமைக்கும் பணிகள் முன்னெடுப்பதற்கான ஆரம்ப கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் அப்போதைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் G.புண்ணியமூர்த்தி ஐயா அவர்களும், அப்போதைய வடகிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு சமுர்த்தி பிரிவிற்கு பொறுப்பாக இருந்த மா.நடேசராஜா ஐயா அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஆணையாளராக இருந்த இரா.நெடுஞ்செழியன் ஐயா அவர்களுடன் இருதயபுரம் சமுர்த்தி வலய முகாமையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடிக்கல்லினை நாட்டி அப்பணியை தொடங்கி வைத்தனர்.
அடுத்ததாக கல்லடி சமுர்த்தி வலயத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டது இவ்வலயம் அமைக்கப்பட்ட இடத்திற்கு செல்ல சற்று மணல் வீதியாக காணப்பட்டதாகவும், பொருட்களை கொண்டு செல்ல மிகவும் கஸ்டப்பட்டதாகவும், அருகில் இராணுவ முகாம் காணப்பட்டதால் வீதி தடை செய்யப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
அதேபோல் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயத்திற்கான கட்டிடமும் மக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்று வந்தது. இதே வேளை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக கதிர்காமநாதன் ஐயா அவர்கள் தம் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக கட்டப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட அனைத்து சமுர்த்தி வலயங்களும் திறக்கப்பட்டு வைக்கப்பட்டன. அப்போது தான் மிக முக்கியமான ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார் தலைமையக முகாமையாளர். வாராந்தம் இனி திங்கள் கிழமைகளில் பிரதேச செயலகத்தில் தங்கள் கடமைகளுக்காக சமூகமளிப்பதுடன், புதிதாக தங்கள் வலயகாரியாலயங்கள் திறக்கப்பட்டுள்ளதால் வியாழக்கிழமைகளில் தங்கள் கடமைக்காக சமுர்த்தி வலய காரியாலயங்களுக்கு பணிக்காக செல்ல வேண்டும், என்றும் மற்றைய நாட்களில் நீங்கள் களத்தில் பணியாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் புதிதாக சமுர்த்தி வங்கிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் இவ்வங்கிகளுக்கு உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், இவ்வுத்தியோகத்தர்களை தங்களில் இருந்தே தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், சமுர்த்தி வலயத்திற்கு ஒரு சமுர்த்தி வலய உதவியாளரையும் தெரிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போதே தொடங்கி விட்டது உன்னை தான் தெரிவு செய்வார்கள், என்னைத்தான் தெரிவு செய்வார்கள் என ஆளுக்காள் விவாதிக்க தொடங்கி விட்டோம். எனக்கும் அந்த நப்பாசை என் மனதில் ஊடறுத்துதான் இருந்தது. இதற்கான ஒரு தெரிவு மிக விரைவில் அறிவிக்கப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டது.
நிரந்தர நியமனமும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் எனம் பதவி கிடைத்ததும் எவ்வளவு மாற்றம் நடைபெற்று வருவதை அவதானிக்க முடிந்தது. மறு புறம் கருத்திட்ட வேலைகளும், சிரமதான பணிகளும் சிறு குழு கூட்டங்களும் நடைபெற்ற வண்ணம் இருந்தது.
அன்று காலையில் வலயத்திற்கு பணிக்காக சென்ற போது யூட் வந்து வாழ்த்துக்கள் மச்சான் என்றார். ஏன்டா என்று கேட்டேன் நீ சமுர்த்தி வங்கிக்கு தெரிவு செய்யப்பட்டதாக சொன்னாங்க சந்தோசம் என்றான். நான் வலயத்திற்குள் சென்றவுடன் முகாமையாளர் தமயந்தி அவர்கள் கூறினார் ஜெயதாசன் உங்களையும், ரமேஸ்குமார் அவர்களையும், மிருணாளினி அவர்களையும், எமலின் அவர்களையும், யுனைதீன் அவர்களையும் சமுர்த்தி வங்கிக்காக தெரிவு செய்து உள்ளார்கள் இதற்கான கடிதம் என 2000.03.01 திகதியிடப்பட்ட கடிதத்தை தந்தார். மகிழ்ச்சி தான் இருந்தும் யார் யாருக்கு என்ன பதவி என்று சொல்லவில்லை அது தான் கவலையாக இருந்தது.
மாவட்ட செயலகத்தில் இருந்து தகவல் உடனடியாக சமுர்த்தி வங்கிக்கு தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வங்கி பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், முதலில் புளியந்தீவு சமுர்த்தி வங்கிக்கு தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு சமனலவெவவில் வழங்கப்படவுள்ளதாகவும் அனைத்து உத்தியோகத்தாளையும் முகாமையாரையும் தயார் நிலையில் இருக்குமாறு கூறப்பட்டது.
தொடரும்.........
இருதயபுரம் சமுர்த்தி வலயத்திற்கு அப்போதைய சமுர்த்தி ஆணையாளர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் அடிக்கல் நாட்டும் போது......கல்லடி சமுர்த்தி வலய கட்டிடம் அமைக்கப்பட்ட போது அக்கட்டிடத்தை கல்லடி சமுர்த்தி செயலணியே கட்டியது. இதனை அப்போதைய கல்லடி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தவராஜா சுரேஸ் கட்டிட பணிகளை பார்வையிட்ட போது
இருதயபுரம் சமுர்த்தி வலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வலய சமுர்த்தி முகாமையாளர் ரவிச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டுவதையும், அருகில் சிவபாதசேகரம் அவர்களும். நிகழ்வில் கலந்து கொண்ட அப்போதைய பிரதேச செயலாளர் G.புண்ணிமூர்த்தி ஐயா, சமுர்த்தி ஆணையாளர் இரா நெடுஞ்செழியன் ஐயா, நடேசராஜா ஐயா, மண்முனை வடக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன், புளியந்தீவு வலய சமுர்த்தி முகாமையாளர் தமயந்தி ஆகியோரை படத்தில் காணலாம்...
புதிதாக புளியந்தீவு சமுர்த்தி வலயம் திறக்கப்பட்ட போது இடமிருந்து வலமாக சிவகுமார்(SDO), மணிவன்னன்(SDO), கீதா கணகசிங்கம் (இருதயபுரம் சமுர்த்தி முகாமையாளர்), தமயந்தி(புளியந்தீவு சமுர்த்தி முகாமையாளர்), மாலா நெடுஞ்செழியன் (சமுர்த்தி தலைமையக முகாமையாளர்), ரமனன்(SDO), இரா.நெடுஞ்செழியன்(சமுர்த்தி ஆணையாளர்), மா.நடேசராஜா ஐயா, பத்மா ஜெயராஜா (கல்லடி சமுர்த்தி முகாமையாளர்), ரவிச்சந்திரன் (இருதயபுரம் சமுர்த்தி முகாமையாளர்). பின்வரிசை இடமிருந்து வலம் நித்தியானந்தபவான்(SDO), உமாசங்கர்(SDO), சுரேஸ்(SDO), ரமேஸ்குமார்(SDO), சிவாகரன்(SDO), சிறிதரன்(SDO), பியற்றிஸ்(SDO), மிருனாளினி(SDO), சாரதாதேவி(SDO), லதா(SDO), மெட்றில்டா(SDO) ஆகியோரை படத்தில் காணலாம் பலரின் முகம் தெரிவில்லை மன்னிக்கவும்.
இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலயம் கட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம். இப்புகைப்படத்தில் சுகுமார்(SDO), அற்புதமலர்(SDO), இதயமலர்(SDO) ஆகியோரை காணலாம்
Comments
Post a Comment