கல்லடி சமுர்த்தி வங்கியில் களை கட்டிய "அன்பான வணிகன்" சமுர்த்தி அபிமானி சந்தை.....

 கல்லடி சமுர்த்தி வங்கியில் களை கட்டிய "அன்பான வணிகன்" சமுர்த்தி அபிமானி சந்தை.....

நாடுபூராவும் சமுர்த்தி திணைக்களம் "அன்பான வணிகன்" எனும் தொனிப்பொருளில் சமுர்த்தி அபிமானி சந்தையை ஏப்ரல் 6 தொடக்கம் ஏப்ரல் 12 வரை 2021 தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு நடாத்தி வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லடி சமுர்த்தி வங்கியின் "அன்பான வணிகன்" சமுர்த்தி அபிமானி சந்தை 08.04.2021 அன்று  நொச்சிமுனை நியு கிறீன்லைட் விளையாட்டு மைதானத்தில் கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி சியாந்தினி கமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அமுதகலாதேவி பாக்கியராஜா அவர்களும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்களும் கலந்து கொண்டு "அன்பான வணிகன்" சமுர்த்தி அபிமானி சந்தையை ஆரம்பித்து வைத்தனர்.

இச்சந்தையில் நியாய விலையில் பொருட்களை வழங்குவதற்கும் தரமான உற்பத்திகளை மக்கள் மத்தியில் சென்றடைவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வங்கிக்கு உட்பட்ட பிரதேசங்களில் சமுர்த்தி பயனுகரிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் சிறு சிறு கடை தொகுதிகளும் தம் உற்பத்திகளை விற்பனை செய்வதை அவதானிக்க முடிந்தது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கிப்பிரிவின் முகாமையாளர் திருமதி.நிர்மலாதேவி கிரிதரன் அவர்களும் மண்முனை வடக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது சிறந்த உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

























Comments