மாவட்ட சமுர்த்தி நலன்புரிச்சங்க சேவை நலன் பாராட்டு வைபவம்......
மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவில் கடமையாற்றி இடமாற்றலாகி செல்லும் திரு.சிவலிங்கம் குகபரன் அவர்களுக்கும் திருமதி.தர்சினி பிரகாஸ் அவர்களுக்குமான சேவை நலன் பாராட்டு நிகழ்வு 09.04.2021 அன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலக சமுர்த்தி நலன்புரிச்சங்க தலைவர் திருமதி.அ.பாக்கியராஜா தலைமையில் நடைபெற்றது.
திரு.சிவலிங்கம் குகபரன் நீண்ட காலமாக சமுர்த்தி பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக அர்பணிப்புடன் பணிபுரிந்து இன்று இடமாற்றலாகி செல்கின்றார் எனவே இவரின் சேவையை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் திருமதி.தர்சினி பிரகாஸ் சமுர்த்தி பிரிவில் பொருளாதார உத்தியோகத்தராக சிறப்பாக சேவையாற்றிய இடமாற்றலாகி செல்கின்றார் எனவே இவரின் சேவையை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. திருமதி.தர்சினி பிரகாஸ் அவர்கள் மாவட்ட செயலக சமுர்த்தி நலன்புரிச்சங்கத்தின் செயலாளராக கடமையாற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும்
Comments
Post a Comment