" அன்பான வணிகன் "சந்தை ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி ஏற்பாட்டில்.....

" அன்பான வணிகன் "சந்தை ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி ஏற்பாட்டில்.....

தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு நாடுபூராவும் உள்ள சமுர்த்தி வங்கிகளின் ஊடாக சமுர்த்தி திணைக்களம் " அன்பான வணிகன் " எனும் 2021 புதுவருட சந்தையை நடாத்தி வருகின்றது. இதற்கமைய ஏறாவூர்பற்று  பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியின்  " அன்பான வணிகன் " சமுர்த்தி அபிமானி சந்தை 08.04.2021 அன்று  சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் (சுரவி) ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அமுதகலாதேவி பாக்கியராஜா அவர்கள் கலந்து கொண்டார்.  மேலும் இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று  உதவிப்பிரதேச செயலாளர் பு.பவதாரணி அவர்களும் கலந்து கொண்டனர்.

இச்சந்தையில் சமுர்த்தி பயனாளிகளிகள் தாம் உற்பத்தி செய்த உற்பத்திகளை  தாமே விற்பனை செய்து இதன் பயன்பாட்டை அடைவதுடன் மக்களுக்கு நியாமான விலையில் தரமான உற்பத்தி பொருட்களை பெற்றுக் கொள்வதுமே இதன் நோக்கமாகும்.

இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச செயலக  சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,; மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 










Comments