"அன்பான வணிகன்" சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை நாடுபூராவும்......

"அன்பான வணிகன்"  சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை நாடுபூராவும்......

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடுபூராவும் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை "அன்பான வணிகன்" எனும் தொனிப்பொருளில் விற்பனை சந்தை 06.04.2021 தொடக்கம் 12.04.2021 வரை நடைபெறவுள்ளது. 

சமுர்த்தி திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதுடன் தரமான உற்பத்தி பொருட்களை நுகர்வோருக்கு சென்றடைவதே இதன் நோக்கமாகும். இவ் சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தையை ஒவ்வொரு சமுர்த்தி வங்கிகளும் தனித்தனியாக நடாத்துதல் வேண்டும்.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி வங்கியூடாக 06ம் 07ம் திகதிகளில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

 இந்நிகழ்வில்  மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திரு.அருணன் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் G.F.மனோகிதராஜ், மாவட்ட சமுர்த்தி வங்கிப் பிரிவு முகாமையாளர் திருமதி.நி.கிரிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது சிறந்த உற்பத்தியாளர் ஐவருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.



















Comments