புதிய மட்டக்களப்பு மாவட்ட செயலக கட்டிடத்தை பார்வையிட்ட சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர்......
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலக கட்டிடம் திராய்மேடு கிராமத்தில் அமைக்கப்படுகின்றது. இக்கட்டிடத்தில் சமுர்த்தி பிரிவிற்காக அமைக்கப்படும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்; திருமதி.அ.பாக்கியராஜா அன்மையில் பார்வையிட்டார்.
இதன் போது சமுர்த்தி பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட கட்டிடத்தை பார்வையிட்டதுடன் அதன் முன்னேற்றம் பற்றியும் கேட்டுக் கொண்டார். இதன் போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் G.F.மனோகிதராஜ் ஆகியோரும் பார்வையிட்டார்.
Comments
Post a Comment