மாவடிவேம்பு சமுர்த்தி வங்கியின் "அன்பான வணிகன்" சந்தை.....
2021 தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி திணைக்களம் "அன்பான வணிகன்" எனும் தொனிப்பொருளில் புதுவருட சந்தையை நடாத்தி வருகின்றது. இதற்கமைய ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிவேம்பு சமுர்த்தி வங்கியின் "அன்பான வணிகன்" சமுர்த்தி அபிமானி சந்தை 08.04.2021 அன்று வந்தாறுமூலை வேல்ட் விசன் கட்டிட தொகுதியில் மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.சுதர்ஜினி ஜெகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி அமுதகலாதேவி பாக்கியராஜா அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று உதவிப்பிரதேச செயலாளர் G.பவதாரணி அவர்களும் ஏறாவூர்பற்று உதவி திட்டமிடல் பணிப்பாளர் K.கருணாகரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இச்சந்தையில் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளை தாமே விற்பனை செய்து இதன் பயன்பாட்டை அடைவதுடன் மக்களுக்கு நியாமான விலையில் தரமான பொருட்களை பெற்றுக் கொள்வதுமே இதன் நோக்கமாகும்.
இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment