மாவட்ட செயலக சமுர்த்தி நலன்புரிச்சங்க புதிய நிர்வாகம் தெரிவு.....
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சமுர்த்தி பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான சமுர்த்தி நலன்புரிச்சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு அன்மையில் இடம்பெற்றது.
தலைவராக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்களும், செயலாளராக சமுர்த்தி முகாமையாளர் ம.பிரதீபன் அவர்களும், பொருளாளராக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.மஞ்சுளா சுந்தரமூர்த்தி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிர்வாகம் 3 வருடங்கள் செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. யாப்பில் புதிய பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment