கணணிமயமாக்கப்பட்ட கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியை கௌரவ இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களால் திறந்து வைப்பு......

 கணணிமயமாக்கப்பட்ட கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியை கௌரவ  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களால் திறந்து வைப்பு......

நாட்டில் உள்ள சகல சமுர்த்தி வங்கிகளும் கணணி மயமாக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு தற்போது நாடுபூராவும் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் இன்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டு  மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கணணி மயமாக்கப்பட்ட 12வது சமுர்த்தி வங்கியான கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியையும், கணணி மயமாக்கப்பட்ட மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தையும் பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாடு கௌரவ இராஜாங்க அமைச்சரான திரு.சதாசிவம் வியாழேந்திரன் அவர்களால் (14.03.2021) திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.தட்சனா கௌரி டினேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜீ.பே.மனோகிதராஜ், மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுக்கான முகாமையாளார் நிர்மலாதேவி கிரிதரன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 
















Comments