சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு ஏறாவூர் பற்றில் சௌபாக்கிய வீடுகள் கையளிப்பு ....
நாடுபூராவும் சௌபாக்கிய வாரத்தை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக வீடற்றவர்களுக்கு சௌபாக்கியா வீடுகளை நிர்மானித்து கொடுக்கும் செயற்பாடு நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் சௌபாக்கியா வீடுகளை உரிய பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு 08.03.2021 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.G.பவதாரிணி கலந்து கொண்டு சமுர்த்தி பயனாளி களுக்கு வீட்டுகளை கையளித்தார். இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.பிறைசூடி, ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு.இராசலிங்கம், ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தவநீதன் சமுர்த்தி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர், பொருளாதார உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment