சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வீடுகள் கையளிப்பு....
சௌபாக்கிய வாரத்தை முன்னிட்டு நாடுபூராவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் மூலம் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் சமுர்த்தி பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருனாகரன் கலந்து கொண்டு கொக்குவில் கிராமத்தில் உள்ள சமுர்த்தி பயனாளியிடம் வீட்டினை கையளித்தார். இதன் போது கருத்து தெரிவித்த அரச அதிபர் வெறுமனே இரண்டு லட்சம் ரூபாவை மாத்திரமே சமுர்த்தி திணைக்களம் வழங்கிய போதும் இவ்வீட்டை நிர்மானிக்க கூடுதலான நிதி தேவைப்பட்ட போதிலும் தான் வசதியாக இல்லாத போதிலும் உதவி செய்ய வேண்டும் என்கின்ற நல்மனம் படைந்த் இவ்விளைஞர் செய்த உதவி ஈடு இனையற்ற உதவியாகும் எனவே சரியான ஒரு சமுர்த்தி பயனாளியை தெரிவு செய்து இவ்வீட்டை அமைத்துக் கொடுக்க முன்னின்ற பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தாம் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் சின்ன ஊறனி கிராமத்தில் வீடுகள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் அவர்களால் உரிய பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலளர் அ.அருணன் அவர்களும் கணக்காளர், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜீ.பே.மணோகிதராஜ், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர், பொருளாதார உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்த கொண்டனர்.
Comments
Post a Comment