கோறளைப்பற்று மத்தியில் சௌபாக்கியாவார வேலைத்திட்டம் ......

 கோறளைப்பற்று மத்தியில் சௌபாக்கியாவார வேலைத்திட்டம் ......

நாடுபூராவும் தற்போது நடைபெறும் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் ஒரு செயற்பாடாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினால் 2021.03.08ம் திகதி அன்று செளபாக்கியா  வாரத்தை முன்னிட்டு  தொற்றா நோய்க்கட்டுப்பாடும் உள்ளூர் உணவுப்பயன்பாட்டை மேம்படுத்தலும் எனும் தலைப்பிலான விழிப்பூட்டல் கருத்தரங்கு நிகழ்வு இடம்பெற்றது. 

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக  உதவி பிரதேச செயலாளர் M.A.C.ரமீசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின்  கணக்காளர் M.S.பசீர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் S.B.M.ருமைஸ் சமுர்த்தி  வங்கி முகாமையாளர் S. ரவிச்சந்திரன் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.L.சரீப் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L.ஐயூப்கான் ஆகியோர் கலந்த கொண்டனர். இக்கருத்தரங்கிற்கு  வளவாளர்களாக S.T.நஜீப்கான் அவர்களும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி M.M.M. நிம்சாத் சமூக நல வைத்தியதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.




















Comments