சமுர்த்தி பயனாளிகளுக்கு சௌபாக்யா வீடுகள் கையளிப்பு......
சௌபாக்கியா வாரத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி சௌபாக்யா வீடுகள் கைளிக்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் உ. உதயசிறிதர் அவர்களால் உரிய பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளான 167A, 167B,167D ஆகிய பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட நான்கு சமுர்த்தி பயனாளிகளுக்கு இவ்வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. சில்மியா காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், சமுர்த்தி வங்கி முகாமையாளர் A.L.Z.பஹ்மி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
ஒரு வீட்டிற்கு சமுர்த்தி திணைக்களத்தால் இரண்டு இலட்சம் வழங்கப்பட்ட போதிலும் மேலதிகமான பணத்தினை பயனாளியின் பங்களிப்பில் இவ்வீடுகள் பூரத்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment