பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் நசீர் அஹமட் அவர்களினால் சமுர்த்தி வங்கிகள் திறந்து வைப்பு.....

 பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப்  நசீர் அஹமட் அவர்களினால் சமுர்த்தி வங்கிகள் திறந்து வைப்பு.....

ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளான  ஏறாவூர் மத்தி /ஏறாவூர் கிழக்கு  சமுர்த்தி வங்கிகள்  கணனி மயமாக்கப்பட்டு கணணி  வங்கிச் சேவை அங்குரார்பண நிகழ்வு   ( 16 .03. 2021) அன்று  இடம்பெற்றது.  ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌயுத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்             மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமாகிய ஜனாப்  நசீர் அஹமட் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவைனைக்காக கையளிக்கப்பட்டது.  

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி  பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்களும்மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜீ.பே.மனோகிதராஜ், மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுக்கான முகாமையாளார் நிர்மலாதேவி கிரிதரன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கவிடமாகும். 



































Comments