சமுர்த்தி மாதாந்த மீளாய்வு கூட்டம்.....
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி தலைமையாக முகாமையாளர்கள், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி முத்திரை நிவாரன விடய உத்தியோகத்தர்களுக்குமான மாதாந்த மீளாய்வு கூட்டம் கடந்த 12.03..2021 வெள்ளிக் கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன கிராமத்தில் 25000 இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான வியாபார நிலையங்கள் அமைக்கும் வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டது, 200000 குடும்பங்களை மேம்படுத்தல் விடயமாகவும் ஆராயப்பட்டது, புதிய சமுர்த்தி நிவாரனம் வழங்குவதற்கான படிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன. 4% வீத வட்டியில் வழங்கப்படவுள்ள ஆலோகா கடன் தேவைகள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது. சௌபாக்கியா வீட்டுத்திட்டத்தில் ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகளின் முன்னேற்றம் பற்றியும் ஆராயப்பட்டதுடன் 200000 இலட்சம் ரூபாய் பெறுமதியான சௌபாக்கியா வீடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
இக் கூட்டத்திற்கு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜீ.பே.மனோகிதராஜ், மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுக்கான முகாமையாளார் நிர்மலாதேவி கிரிதரன், மாவட்ட சமுர்த்தி கணக்காய்வு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment