கிரான் பிரதேச செயலகத்தில் சௌபாக்கிய வார செயற்திட்டங்கள்.....

 கிரான் பிரதேச செயலகத்தில்  சௌபாக்கிய வார செயற்திட்டங்கள்.....

நாட்டில் சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வேலைத்திட்டத்தின்  கீழ் சௌபாக்கியா விடுகள் கையளிக்கும் நிகழ்வு 08.03.2021 அன்று கிரான் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தேவபுரம், சந்திவெளி, கிரான் கிழக்கு, கிரான் மேற்கு ஆகிய பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் கிரான் செயலக பிரதேச செயலாளர்  S.ராஜ்பாபு, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் க.சிவபாதசேகர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் க.வினோதினி, சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர் க.சிவதாசன் மற்றும்  சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











Comments