பல வகைகளில் வீடுகளை வழங்கி வரும் சமுர்த்தி....
வீடற்றவர்களுக்கு பல வேலைத்திட்டத்தின் மூலம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிகளில் சமுர்த்தி திணைக்களம் செயற்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் சமுர்த்தி நிவாரன அதிஸ்டலாப சீட்டிலுப்பு வீட்டுத்திட்டம், சௌபாக்கியா இரண்டு லட்சம் வீட்டுத்திட்டம், சௌபாக்கியா ஆறு லட்சம் வீட்டுத்திட்டம் என பல்வேறு செயற்பாடுகளினால் வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க உதவி வருகின்றது.
இச்செயற்பாட்டின் ஒரு கட்டமாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 2020 ஆண்டிற்கான ஏப்ரல் மாத சமுர்த்தி நிவாரண அதிஸ்டலாப சீட்டிலுப்பில் வெற்றி பெற்ற பயனாளியின் வீடு புனரமைக்கப்பட்டு உரிய பயனாளிக்கு அன்மையில் கையளிக்கப்பட்டதுடன் 2020ம் ஆண்டிற்கான ஒக்டோபர் மாத சமுர்த்தி நிவாரன அதிஸ்டலாப சீட்டிலுப்பில் வெற்றி பெற்ற பயனாளிக்கான வீட்டிற்கான அடிக்கல் இடும் நிகழ்வும் அன்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் M.A.C.றமீசா அவர்கள் கலந்து கொண்டு சமுர்த்தி பயனாளியிடம் வீட்டை கையளித்ததுடன் அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.B.M.ருமைஸ் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L.ஐயூப்கான் பிரிவு உத்தியோகத்தர் A.C.சாதிக்கீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment