2021ம் ஆண்டிற்கான சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் புதுப்பித்தல்......
கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை 2021ம் ஆண்டிற்காக புதுப்பித்தல் செயற்பாடுகள் அன்மையில் கிரான் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் க.சிவபாதசேகரம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சந்திவெளி சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் க.சிவதாசன் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இப் பொதுக்கூட்டமானது கொவிட்-19 சுகாதார நடைமுறைகளை பின் பற்றி நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment